ஜூன் 11ல் இந்தியாவில் அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மாடல்...

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு மாடலான மூன்றாம் தலைமுறை எக்ஸ்6 வருகிற ஜூன் 11ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜூன் 11ல் இந்தியாவில் அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மாடல்...

எக்ஸ்6 மாடலின் புதிய மூன்றாம் தலைமுறை காரானது எக்ஸ்லைன் மற்றும் எம்ஸ்போர்ட் என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனையில் எக்ஸ்6 மாடலில் பெரிய கிட்னி வடிவிலான க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 11ல் இந்தியாவில் அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மாடல்...

இந்த க்ரில் அமைப்பை ஒளியூட்டவும் முடியும். நிலையாக ட்வின்-பேட் எல்இடி ஹெட்லைட்களை பெற்றுள்ள இந்த காருக்கு லேசர்லைட் உடன் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்களும் கூடுதல் தேர்வாக பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கி வருகிறது.

ஜூன் 11ல் இந்தியாவில் அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மாடல்...

ஸ்லோப்பிங் ரூஃப்-ஐ கொண்டுள்ள எக்ஸ்6 மாடலின் பின்புறத்தில் L-வடிவிலான எல்இடி டெயில்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாடலுக்கு எம் ஸ்போர்ட் எக்ஸாஸ்ட் சிஸ்டமும் தேர்வாக வழங்கப்படுகிறது.

ஜூன் 11ல் இந்தியாவில் அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மாடல்...

எக்ஸ்6 மாடலின் இந்த எம் ஸ்போர்ட் வேரியண்ட் கருப்பு நிறத்தில் க்ரில்லையும், கருப்பு நிற அலாய் சக்கரங்களையும் பெற்றுள்ளது. உட்புறத்தில் இந்த காரில் 12.3 இன்ச் திரைகள் உள்ளன.

ஜூன் 11ல் இந்தியாவில் அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மாடல்...

இவற்றுடன் கூடுதல் தேர்வாக 20 ஸ்பீக்கர்களுடன் போவர்ஸ் & வில்கின்ஸ் டைமண்ட் சவுண்ட் சிஸ்டம், 8 வாசனைகளுடன் கேபினை சுற்றிலும் ஏர் தொகுப்பு மற்றும் தெர்மோ எலக்ட்ரிக் கப்ஹோல்டர்கள் வழங்கப்படுகின்றன.

ஜூன் 11ல் இந்தியாவில் அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மாடல்...

உலக சந்தையில் எக்ஸ்6 மாடலுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதில் 3.0 லிட்டர், 6-சிலிண்டர் மற்றும் 4.4 லிட்டர், வி8 என்ற இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் முறையே அதிகப்பட்சமாக 335 பிஎச்பி/450 என்எம் மற்றும் 523 பிஎச்பி/750 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியவை.

ஜூன் 11ல் இந்தியாவில் அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மாடல்...

இதன் டீசல் வேரியண்ட்டில் 3.0 லிட்டர், 6-சிலிண்டர் என்ஜின் இரு ட்யூன்களில் ஆற்றலை வழங்கும் வகையில் பொருத்தப்படுகிறது. இதில் 261 பிஎச்பி & 620 என்எம் டார்க் திறன் மற்றும் 395 பிஎச்பி & 760 என்எம் டார்க் திறன் உள்ளிட்டவை அடங்கும். இந்த அனைத்து என்ஜின் தேர்வுகளுடனும் 8-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
3rd-gen BMW X6 launch on June 11 Teased
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X