பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்7 மாடலின் புதிய எண்ட்ரீ லெவல் வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் இந்த புதிய வேரியண்ட்டை பற்றி விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் பிஎம்டபிள்யூவின் எக்ஸ்7 மாடலின் அனைத்து வேரியண்ட்களும் முன்பை விட தற்போது அதிக விலையை பெற்றுள்ளன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

எக்ஸ்7 மாடலின் வேரியண்ட் லைன்அப்பை எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அப்டேட் செய்துவரும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த மாடலின் எண்ட்ரீ லெவல் வேரியண்ட்டிற்கு வைத்திருக்கும் பெயர், எக்ஸ்ட்ரைவ்30டி டிபிஇ ஆகும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

ரூ.92.50 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக பெற்றிருக்கும் இந்த புதிய வேரியண்ட்டினால் எக்ஸ்7 மாடலின் ஆரம்ப விலை ரூ.6.40 லட்சம் அளவில் குறைந்துள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த புதிய வேரியண்ட்டில் 7-இருக்கை லேஅவுட், லாஞ்ச் கண்ட்ரோல், ஏர் சஸ்பென்ஷன், எல்இடி ஹெட்லைட்ஸ் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

இவை மட்டுமில்லாமல் 4 நிலைகளில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள் மற்றும் பின்புற விண்டோ சன்ஷேட்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், ரியர் பார்க்கிங் கேமிரா மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் இணைக்கும் வசதி கொண்ட 12.3 இன்ச்சில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவையும் எக்ஸ்7 மாடலின் இந்த புதிய வேரியண்ட்டில் உள்ளன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

இந்த எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டிற்கு அடுத்த கட்ட நிலையில் எக்ஸ்ட்ரைவ்30டி டிபிஇ சிக்னேச்சர் வேரியண்ட் உள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மாடலின் 6-இருக்கை வெர்சனாக உள்ள இந்த இரண்டாம் நிலை வேரியண்ட் கூடுதலாக ஹேண்ட்ஸ்-ஃப்ரீ டெயில்கேட், லேசர் ஹெட்லேம்ப், 5 நிலைகளில் கிளைமேட் கண்ட்ரோல், பின்புற இருக்கை தொடுத்திரை மற்றும் 360 கோண பார்க்கிங் கேமிரா உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

இவற்றுடன் தற்போது கூடுதல் சவுகரியமான முன்புற இருக்கைகளை பெற்றுள்ள இந்த வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் அறிமுகத்தால் ரூ.98.90 லட்சத்தில் இருந்து ரூ.1.03 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

எக்ஸ்7 மாடலின் டாப் வேரியண்ட்டான எக்ஸ்ட்ரைவ்40ஐ எம் ஸ்போர்ட் ரூ.1.07 கோடியை விலையாக பெற்றுள்ளது. இது இந்த வேரியண்ட்டின் முந்தைய விலையை விட கிட்டத்தட்ட ரூ.8 லட்சம் அதிகமாகும். எம் ஸ்போர்ட்டின் தோற்றத்தை கொண்ட இந்த டாப் வேரியண்ட் மட்டும் சிகேடி முறையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

இதனால் இதன் பேக்கேஜிற்கு சில கருவிகள் தேவைப்படும் சூழல் இருப்பது தான், இரண்டாம் நிலை வேரியண்ட்டிற்கு இணையான விலையை கொண்டிருந்த இந்த டாப் வேரியண்ட் தற்போது அதனை விட ரூ.4 லட்சம் அதிகமாக பெற்றிருப்பதற்கு காரணம் ஆகும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

எக்ஸ்ட்ரைவ்30டி டிபிஇ வேரியண்ட்டுடன் பல தொழிற்நுட்ப வசதிகளை பகிர்ந்து கொண்டுள்ள எக்ஸ்7 மாடலின் டாப் வேரியண்ட் முன்பு 7-இருக்கை வெர்சனாக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இனி இந்த வேரியண்ட் 6-இருக்கை வெர்சனாக கிடைக்கும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

இரண்டாம் வேரியண்ட்டுடன் வேறுப்பட்டு தெரிவதற்காக ஹேண்ட்ஸ்-அப் திரை மற்றும் காரை நிறுத்த மற்றும் இயக்க, ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை கூடுதலாக எக்ஸ்7 மாடலின் இந்த டாப் வேரியண்ட் பெற்றுள்ளது. அனைத்து வேரியண்ட்களின் விலையும் பிஎஸ்6 அப்டேட்டால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

இவற்றில் டாப் வேரியண்ட்டை தவிர்த்து மற்ற இரண்டு வேரியண்ட்களும் சிகேடி முறைக்கு பதிலாக இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளன. மற்றப்படி இந்த புதிய வேரியண்ட்டின் அறிமுகத்தால் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மாடல் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

இதனால் இந்த மாடல் தனது வழக்கமான 3.0 லிட்டர், 6-சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் தேர்வுகளை தான் தொடரவுள்ளது. இந்த இரு என்ஜின்களும் முறையே 265 பிஎச்பி மற்றும் 340 பிஎச்பி பவரை காருக்கு வழங்கும் திறன் கொண்டவைகளாக உள்ளன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

இந்த இரு என்ஜின் தேர்வுகளுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 8-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த ட்ரான்ஸ்மிஷன், ஆற்றலை காரின் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்குகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

பாதுகாப்பு அம்சங்களாக பிஎம்டபிள்யூவின் இந்த மாடலில் 7 காற்றுப்பைகள், ஏபிஎஸ் ப்ரேக்கிங், இஎஸ்சி, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில் கண்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹாங்கர் மற்றும் டயரின் அழுத்தத்தை அளவிடும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சந்தைக்கு வந்தது... விலை ரூ.92.50 லட்சம்

இந்த புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டை தொடர்ந்து எக்ஸ்7 மாடலின் லைன்அப்-ல் கூடுதலாக எம்50டி என்ற வேரியண்ட்டையும் விரைவில் இணைக்க பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எக்ஸ்7 மாடலுக்கு சந்தையில் ரேஞ்ச் ரோவர் மற்றும் விரைவில் சந்தைக்கு வரவுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் உள்ளிட்ட மாடல்கள் போட்டியினை அளிக்கவுள்ளன.

Most Read Articles
English summary
New Entry-Level BMW X7 Launched in India for a Price of Rs 92.50 lakhs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X