சுதந்திர தினத்தை குறிவைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்... சந்தைக்குவர தயாராகும் கார்கள் இவைதான்...

இந்தியா 73வது சுதந்திர தினத்தை வரும் ஆகஸ்ட் 15ல் கொண்டாடவுள்ளது. இந்த நேரத்தில் பல்வேறு கார் பிராண்ட்கள் தங்களது புதிய தயாரிப்புகளின் அறிமுகங்களை அறிவிக்கவுள்ளன.

ஏனெனில் இந்த நன்னாளில் தான் தங்களது விருப்பமான கார்களை வாங்க பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் விரும்புவர். புதிய மாடல்களை அறிமுகம் செய்வது மட்டுமின்றி சந்தையில் வரவேற்பை பெற்றுவரும் மாடல்களுக்கும் தள்ளுப்படி உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளிலும் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடுவது உண்டு.

சுதந்திர தினத்தை குறிவைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்... சந்தைக்குவர தயாராகும் கார்கள் இவைதான்...

இந்த வருடத்தின் முதல் பாதி கொரோனாவினால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமொபைல் துறையும் தப்பவில்லை. ஆனால் இந்த நிலை வரும் மாதங்களில் மாறும் என்று நம்பிக்கை கொண்டுள்ள தயாரிப்பு நிறுவனங்கள் இதற்கு புதிய தயாரிப்புகள் மிகுந்த உதவியாக இருக்கும் எனவும் எதிர்பார்ப்பில் உள்ளன.

இந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் சில முக்கியமான கார்களை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

சுதந்திர தினத்தை குறிவைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்... சந்தைக்குவர தயாராகும் கார்கள் இவைதான்...

1. கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி

2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டதில் இருந்து கியா நிறுவனத்தின் சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளது. இது கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ், கார்னிவல் மாடல்களுக்கு பிறகான மூன்றாவது இந்திய அறிமுக மாடலாகும்.

சுதந்திர தினத்தை குறிவைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்... சந்தைக்குவர தயாராகும் கார்கள் இவைதான்...

இதில் என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் அனைத்தும் ஒரே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதின் காரணமாக ஹூண்டாய் வென்யூ மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளன. காம்பெக்ட்-எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த காருக்கு போட்டியினை அளிக்க ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்டவை தயாராக உள்ளன.

சுதந்திர தினத்தை குறிவைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்... சந்தைக்குவர தயாராகும் கார்கள் இவைதான்...

2. டாடா எச்பிஎக்ஸ் மைக்ரோ-எஸ்யூவி

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்சமயம் புதிய எண்ட்ரீ-லெவல் எஸ்யூவி மாடலான எச்பிஎக்ஸ்-ன் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. இதன் தயாரிப்பு கான்செப்ட் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

சுதந்திர தினத்தை குறிவைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்... சந்தைக்குவர தயாராகும் கார்கள் இவைதான்...

மஹிந்திராவின் கேயூவி100 மாடலுக்கு நேரடி போட்டி காராக விளங்கவுள்ள இந்த டாடா எஸ்யூவி கார் ரெனால்ட் க்விட் மற்றும் மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ மாடல்களுக்கும் போட்டியாக விளங்கலாம். இந்திய சந்தையில் டாடாவின் லைன்அப்பில் நெக்ஸான் மாடலுக்கு கீழே புதிய எச்பிஎக்ஸ் மாடல் நிலைநிறுத்தப்படவுள்ளது.

சுதந்திர தினத்தை குறிவைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்... சந்தைக்குவர தயாராகும் கார்கள் இவைதான்...

3. ஹூண்டாய் எலைட் ஐ20 ப்ரீமியம் ஹேட்ச்பேக்

எலைட் ஐ20, ஹூண்டாய் பிராண்டின் சிறந்த விற்பனை மாடல்களுள் ஒன்றாக சந்தையில் விளங்குகிறது. இதன் புதிய ப்ரீமியம் ஹேட்ச்பேக் வெர்சன் மாருதி சுசுகி பலேனோ மற்றும் டாடா அல்ட்ராஸ் கார்களுக்கு போட்டியாக சந்தைக்கு வரவுள்ளது.

சுதந்திர தினத்தை குறிவைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்... சந்தைக்குவர தயாராகும் கார்கள் இவைதான்...

சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20, இந்திய சாலைகளில் தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய எலைட் ஐ20 மாடலை காட்டிலும் முற்றிலும் புதுமையான டிசைன் மற்றும் தோற்றத்தை பெற்றுவரவுள்ள இந்த புதிய தலைமுறை காரில் வென்யூ எஸ்யூவியின் என்ஜின் அமைப்பை தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

சுதந்திர தினத்தை குறிவைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்... சந்தைக்குவர தயாராகும் கார்கள் இவைதான்...

4. ரெனால்ட் டஸ்டர் டர்போ-பெட்ரோல் எஸ்யூவி

ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் மாடலை புதிய டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் ஆட்டோ எக்ஸ்போவில் மற்ற கார்களை போல் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த புதிய டர்போ என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 154 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

சுதந்திர தினத்தை குறிவைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்... சந்தைக்குவர தயாராகும் கார்கள் இவைதான்...

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட டஸ்டர் எஸ்யூவி மாடலின் இந்த புதிய வேரியண்ட் கொரோனா வைரஸினால் இந்த ஆகஸ்ட் மாதத்தில் சந்தைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் ஏற்கனவே 2020 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி காரின் மூலமாக சந்தையில் அறிமுகமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினத்தை குறிவைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்... சந்தைக்குவர தயாராகும் கார்கள் இவைதான்...

5. பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 2 சீரிஸ் க்ரான் கூபே காரை இந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களில் தயாராகி வருகிறது. 3 சீரிஸ் செடான் காருக்கு கீழே நிலைநிறுத்தப்படவுள்ள புதிய 2 சீரிஸ் மாடல் இந்தியாவில் இந்நிறுவனத்தின் மிகவும் மலிவான காராக விளங்கவுள்ளது.

சுதந்திர தினத்தை குறிவைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்... சந்தைக்குவர தயாராகும் கார்கள் இவைதான்...

இந்த புதிய பிஎம்டபிள்யூ மாடலில் வழக்கமான 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தான் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் வெளிப்படும் ஆற்றல் அளவை வேறுப்பட்டதாக எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. மலிவான பிஎம்டபிள்யூ காராக அறிமுகமாகவுள்ளதால் இதன் விலையை மிகவும் குறைவாக எதிர்பார்க்கலாம்.

சுதந்திர தினத்தை குறிவைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்... சந்தைக்குவர தயாராகும் கார்கள் இவைதான்...

2020 ஆகஸ்டில் இந்தியாவில் வரவிருக்கும் முதல் ஐந்து கார் பற்றிய எண்ணங்கள்

கார் தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனாவினால் ஏற்பட்ட நஷ்டத்தை வருங்கால மாடல்களின் மூலமாக பெற்றுவிட தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இதற்கிடையில் வரவுள்ள இந்த சுதந்திர தினத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள அவை திட்டங்களை தீட்டி வருகின்றன. இதற்கு மேற்கூறப்பட்டுள்ள புதிய தயாரிப்புகள் எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

English summary
Independence Day: Here Are All The New Car Launches In India During The Month Of August 2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X