ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ஃபெராரி நிறுவனத்தின் புதிய எஃப்-8 டிரிபியூட்டோ சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

கடந்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் ஃபெராரி நிறுவனத்தின் புதிய சூப்பர் கார் மாடலாக எஃப்-8 டிரிபியூட்டோ காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஃபெராரி நிறுவனத்தின் பழைய வி8 பெர்லினேட்டா கார் மாடல்களை கவுரவிக்கும் விதத்தில், இந்த புதிய மாடலை ஃபெராரி உருவாக்கியது. மேலும், ஹைப்ரிட் தொழில்நுட்பம் இல்லாத வி8 சூப்பர் கார் மாடலாகவும் இதனை உருவாக்கி இருக்கிறது ஃபெராரி.

ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ஃபெராரி 488 காரின் டிசைன் அம்சங்களை பிரதிபலிக்கும் இந்த கார் சில முக்கிய வேறுபாடுகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பெர்லினேட்டா வரிசையிலான முதல் 1975 308 GTB ஃபெராரி காரின் ஹெட்லைட்டை நினைவூட்டும் விதத்தில், நவீன யுகத்திற்கு தக்கவாறு கச்சிதமான ஹெட்லைட் அமைப்ப உள்ளது.

ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இதன் டெயில் லைட் க்ளஸ்ட்டரானது இரட்டை அறை அமைப்புடன் உள்ளது. ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மேல்புறமாக கூலிங் வென்ட்டுகளுடன் வேறுபடுகிறது.

ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இதன் எஞ்சின் கவரில் இருக்கும் துளைகள் மூலமாக வெப்பக்காற்று உறிஞ்சப்பட்டு வெளித்தள்ளப்படும் வசதி இருக்கிறது. ஸ்பாய்லர் செயல்திறன் பாதிக்கப்படாத வகையில் இந்த தொழில்நுட்பம் செயல்படும் என்பது மிக முக்கிய விஷயம்.

ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ஃபெராரி 488 காரில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின்தான் இந்த காரிலும் உள்ளது. இதன் இரட்டை டர்போசார்ஜர்கள் கொண்ட 3.9 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 710 பிஎச்பி பவரையும், 770 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளிலும், 0 - 200 கிமீ வேகத்தை 7.8 வினாடிகளிலும் எட்டிவிடும்.

ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த கார் மணிக்கு 340 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது. ஃபெராரி நிறுவனம் உருவாக்கிய மிட் எஞ்சின் பொருத்தப்பட்ட சூப்பர் கார் மாடல்களில் அதிவேகமானதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஃபெராரி 488 காரைவிட இந்த கார் 40 கிலோ எடை குறைவானது என்பதுடன், 15 சதவீதம் கூடுதல் டவுன்ஃபோர்ஸ் திறனை வழங்கும்.

ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

எல்இடி டெயில் லைட்டுகள், இரட்டை சைலென்சர்கள், காருக்கு தோதாக இயைந்து செல்லும் மெல்லிய ஸ்பாய்லர் அமைப்பு உள்ளிட்டவையும் இதன் தோற்றத்திற்கு வசீகரம் சேர்க்கின்றன. உட்புறத்தில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபெராரி நிறுவனத்தின் எச்எம்ஐ இன்டர்ஃபேஸ் வசதி, புதிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஃபெராரி எஃப்-8 டிரிபியூட்டோ கார் ரூ.4.02 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபெராரி பிரியர்களுக்கும், சூப்பர் கார் வாங்க திட்டம் போடும் பெரும் பணக்காரர்களையும் வெகுவாக கவரும் பாரம்பரிய விஷயங்களையும், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் வந்துள்ளது.

டீம் பிஎச்பி தள செய்தியை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஃபெராரி #ferrari
English summary
Ferrari has launched F8 Tributo super car in India priced at Rs.4.02 crore (Ex-showroom, Delhi).
Story first published: Thursday, August 6, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X