புதிய ஃபோர்ஸ் குர்கா ஆஃப்ரோடு எஸ்யூவியின் அறிமுக விபரம் !

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா அறிமுக விபரம்

இந்தியாவின் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு அடுத்து சிறந்த தேர்வாக ஃபோர்ஸ் குர்கா இருந்து வருகிறது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி கடந்த மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

புதிய ஃபோர்ஸ் குர்கா அறிமுக விபரம்

பல நவீன தொழில்நுட்ப அம்சங்கள், வடிவமைப்பு மாற்றங்களுடன் கூடி புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவிற்கு வந்த பார்வையாளர்களையும், ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களையும் உசுப்பேற்றியது.

புதிய ஃபோர்ஸ் குர்கா அறிமுக விபரம்

இந்த நிலையில், இந்த புதிய மாடல் வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா அறிமுக விபரம்

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி லேடர் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி தொழில்நுட்ப அளவிலும் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா அறிமுக விபரம்

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா அறிமுக விபரம்

இந்த எஸ்யூவியில் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ப லோ ரேஞ்ச் டிரான்ஸ்ஃபர் கேஸ், 4 வீல் டிரைவ் சிஸ்டம், மேனுவல் டிஃபரன்ஷியல் லாக் சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டு உள்ளன.

புதிய ஃபோர்ஸ் குர்கா அறிமுக விபரம்

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன வட்ட வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள் வசீகரத்தை கொடுக்கிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா அறிமுக விபரம்

இந்த எஸ்யூவி அதிக தரை இடைவெளி கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 16 அங்குல அலாய் வீல்கள், ஆஃப்ரோடு டயர்கள், நீர் நிலைகளை கடக்கும்போது எஞ்சினுக்கு காற்றை உட்செலுத்தும் ஸ்நோர்க்கெல் அமைப்பு, வின்ச், ரோல்பார் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

புதிய ஃபோர்ஸ் குர்கா அறிமுக விபரம்

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி வசதி, டிஜிட்டல் திரை மற்றும் அனலாக் மீட்டர்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஃபோர்ஸ் குர்கா அறிமுக விபரம்

இந்த எஸ்யவியில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் சென்சார்கள், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், பவர் விண்டோஸ் ஆகிய பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

Source: ACI

Most Read Articles
English summary
According to report, Force Motor is planning to launch Gurkha SUV in India by June, 2020.
Story first published: Monday, March 23, 2020, 14:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X