ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா?

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் அதன் நவம்பர் 6ஆம் தேதி அறிமுகத்திற்கு முன்னதாக வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா?

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சர்வதேச சந்தையில் 2012ல் இருந்து விற்பனையில் உள்ளது. இந்தியாவில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும், லத்தீன் அமெரிக்காவில் ஈக்கோஸ்போர்ட்டிற்கு புதிய வேரியண்ட்கள் மற்றும் ஸ்பெஷல் எடிசன்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா?

இந்த வகையில்தான் தற்போது ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஃபோர்டின் முந்தைய ஃபிஸ்டா ஆக்டிவ் காரை போன்று புதிய ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரும் சற்று ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற உடலமைப்பை பெற்றுள்ளதை ஆட்டோனோசியான் என்ற இணையத்தில் கசிந்துள்ள இந்த படங்களில் பார்க்க முடிகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா?

மறுவேலை செய்யப்பட்ட முன்பக்க க்ரில் அமைப்பை கொண்டுள்ள இந்த ஆக்டிவ் வெர்சன், முன்பக்க பம்பர் மற்றும் சக்கர வளைவுகளை சற்று பெரியதாக கொண்டுள்ளது. ஆனால் காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை ரீடிசைனிலான ஃபாக்ஸ் விளக்குகளை கொண்ட பின்பக்க பம்பர் தான் வழங்குகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா?

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஈக்கோஸ்போர்ட் தண்டரை போன்று இந்த ஸ்பெஷல் எடிசனும் பளிச்சிடும் கருப்பு நிறத்தில் மேற்கூரை மற்றும் பின்பக்கம் பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகளை ஸ்மோக்-ஃபினிஷ்டு ஹெட்லேம்ப்களுடன் பெற்றுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா?

இந்த ஸ்பெஷல் எடிசனின் உட்புற கேபினின் படங்களும் தற்போது நமக்கு கிடைத்துள்ளன. அந்தந்த நாட்டில் ஈக்கோஸ்போர்ட்டில் வழங்கப்படும் அம்சங்களுடன் கூடுதல் வசதிகளையும் ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் கார் உட்புறத்தில் பெற்றுவரும் என எதிர்ப்பார்க்கிறோம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா?

இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் ஒரே ஒரு என்ஜின் மட்டுமே தேர்வாக வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் எத்தகைய என்ஜின் அமைப்பு இந்த காரில் வழங்கப்படவுள்ளது என்பது இன்னும் கேள்வி குறியாகவே உள்ளது. நமக்கு தெரிந்தவரை 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா?

சாலையில் சென்றால் வித்தியாசப்பட்டு தெரிவதற்கு தோற்றத்தில் மட்டுமே மாற்றங்களுடன் வெளிவரும் ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ்வில் மற்றப்படி வன்பொருள்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்பட போவதில்லை. சர்வதேச சந்தையில் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் விற்பனைக்கு வந்த பிறகு இந்தியாவிலும் ஈக்கோஸ்போர்ட்டில் இதே அப்டேட்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா?

இந்திய சந்தைக்காக இதன் பெயர் மாற்றப்படலாம். ஏனெனில் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் தண்டர் எடிசன் மற்ற நாட்டு சந்தைகளில் ஸ்ட்ரோம் எடிசன் என்ற பெயரில் விற்பனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Ford EcoSport Active Leaked Ahead Of Launch On November 6
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X