விரைவில் விற்பனைக்கு வருகிறது ஃபோர்டு எண்டேவியரின் புதிய ஸ்பெஷல் எடிசன்...

ஃபோர்டு இந்தியா நிறுவனம் தற்சமயம் எண்டேவியர் எஸ்யூவி காரின் ஸ்பெஷல் எடிசனின் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த லிமிடேட் எடிசன் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஃபோர்டு எண்டேவியரின் புதிய ஸ்பெஷல் எடிசன்...

இதுகுறித்து மோட்டார்பீம் செய்திதளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்கள், ஸ்போர்ட் என அழைக்கப்படும் ஃபோர்டு எண்டேவியரின் புதிய வேரியண்ட் எந்தவொரு மறைப்புமின்றி சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த போது எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஃபோர்டு எண்டேவியரின் புதிய ஸ்பெஷல் எடிசன்...

இதுதொடர்பாக கிடைத்துள்ள தகவல்களில் இந்த சோதனை ஓட்டம் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுள்ளது. மிக குறைவான வெளிச்சத்தில், வெளியாகியுள்ள படங்கள் எடுக்கப்பட்டுள்ளதால் அவற்றின் மூலமாக எஸ்யூவியை பற்றி பெரிய அளவில் எந்த தகவலையும் பெற முடியவில்லை.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஃபோர்டு எண்டேவியரின் புதிய ஸ்பெஷல் எடிசன்...

இருப்பினும் நம்மால் காரின் பின்புற கதவின் இடதுபுறத்தில் ஸ்போர்ட் முத்திரையை பார்க்க முடிகிறது. அதேபோல் ஈக்கோஸ்போர்ட் மாடலுக்கு முன்பு கொடுக்கப்பட்டிருந்த டார்க் மெட்டாலிக் க்ரே நிறத்தில் கார் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஃபோர்டு எண்டேவியரின் புதிய ஸ்பெஷல் எடிசன்...

ஃபோர்டு எண்டேவியரின் விலை தற்சமயம் எக்ஸ்ஷோரூமில் ரூ.29.99 லட்சத்தில் இருந்து ரூ.33.42 லட்சம் வரையில் உள்ளது. இதன் டாப் டைட்டானியம் ப்ளஸ் ட்ரிம்மின் அடிப்படையில் தான் இந்த லிமிடேட் எடிசன் தயாரிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதன் விலை தற்சமயம் விற்பனையில் உள்ள எண்டேவியரை விட சற்று அதிகமாக தான் நிர்ணயிக்கப்படும்.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஃபோர்டு எண்டேவியரின் புதிய ஸ்பெஷல் எடிசன்...

ஃபோர்டு எண்டேவியரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், எஸ்யூவி ரக காராக இதில் அதன் முந்தைய பிஎஸ்4 வெர்சனில் இருந்து வெளிபுறம் மற்றும் உட்புறங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் ஈக்கோப்ளூ டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஃபோர்டு எண்டேவியரின் புதிய ஸ்பெஷல் எடிசன்...

அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் பிராண்டின் ‘செலக்ட்-ஷிஃப்ட்' தொழிற்நுட்பத்தை கொண்ட 10-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இதனுடன் எண்டேவியர் எஸ்யூவியின் விலையுயர்ந்த வேரியண்ட்கள் 4-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தையும் கூடுதல் தேர்வாக கொண்டுள்ளன.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஃபோர்டு எண்டேவியரின் புதிய ஸ்பெஷல் எடிசன்...

2020 எண்டேவியரில் முழு-எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ‘ஃபோர்டுபாஸ்' என்ற பிராண்ட்டின் இணைப்பு தொழிற்நுட்பம் முக்கிய சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன. இதில் ஃபோர்டுபாஸ் ஆனது வாகனத்தை பற்றிய தகவல்கள் மட்டுமில்லாமல் மொத்த காரையும் ரிமோட் கண்ட்ரோல் செய்ய உரிமையாளரை அனுமதிக்கிறது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஃபோர்டு எண்டேவியரின் புதிய ஸ்பெஷல் எடிசன்...

உட்புறத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்ட தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை 8 இன்ச்சில் பெற்று வருகின்ற இந்த எஸ்யூவி காரில் பனோராமிக் சன்ரூஃப், பாதை மேலான்மை அமைப்பு, மலை பாதைகளுக்கான உதவி, மலை பாதை கண்ட்ரோல் உள்பட ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஃபோர்டு எண்டேவியரின் புதிய ஸ்பெஷல் எடிசன்...

இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட எண்டேவியரில் விரைவில் வரவுள்ள பண்டிக்கை காலத்தை முன்னிட்டு ஃபோர்டு நிறுவனம் புதிய ஸ்பெஷல் எடிசனை கொண்டுவருகிறது. புதிய எண்டேவியர் ஸ்போர்ட் எடிசனுக்கு சமீபத்தில் அறிமுகமான டொயோட்டா ஃபார்சூனர் டிஆர்டி லிமிடேட் எடிசன் போட்டியாக விளங்கும்.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Endeavour Sport Edition Variant Spotted Testing Ahead Of Launch. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X