புது ஹோண்டா சிட்டி கார் எவ்ளோ கொடுக்கும்?

இந்திய வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஹோண்டா சிட்டி காரின் மைலேஜ் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

புது ஹோண்டா சிட்டி கார் எவ்ளோ கொடுக்கும்?

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் புதிய ஹோண்டா சிட்டி கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஹோண்டா சிட்டி கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புது ஹோண்டா சிட்டி கார் எவ்ளோ கொடுக்கும்?

தற்போது விற்பனையில் உள்ள நான்காம் தலைமுறை மாடலைவிட நீள, அகலத்தில் பெரிய கார் மாடலாக மாறி இருப்பதுடன், இதன் ரகத்தில் இதுதான் பெரிய கார் மாடலாகவும் இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஹோண்டா சிட்டி காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்பட உள்ளது தெரிந்ததே.

புது ஹோண்டா சிட்டி கார் எவ்ளோ கொடுக்கும்?

தற்போது உள்ள மாடலில் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் 119 பிஎஸ் பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆனால், புதிய மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎஸ் பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

புது ஹோண்டா சிட்டி கார் எவ்ளோ கொடுக்கும்?

அதேபோன்று, டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளது.

புது ஹோண்டா சிட்டி கார் எவ்ளோ கொடுக்கும்?

இந்த நிலையில், இந்தியர்கள் அதிகம் கவனிக்கும் விஷயம், மைலேஜ். அதன்படி, புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 18.4 கிமீ மைலேஜையும் வழங்கும்.

புது ஹோண்டா சிட்டி கார் எவ்ளோ கொடுக்கும்?

தற்போதைய மாடலின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.4 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜையும் வழங்கும் என்ற நிலையில், புதிய மாடல் 0.4 கிமீ மைலேஜை கூடுதலாக வழங்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் விஷம்.

புது ஹோண்டா சிட்டி கார் எவ்ளோ கொடுக்கும்?

அதேநேரத்தில், டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் 24.1 கிமீ மைலேஜை தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்4 தர மாடலானது லிட்டருக்கு 25 கிமீ மைலேஜை வழங்கியது. ஆனால், தற்போது பிஎஸ்6 டீசல் மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 0.9 கிமீ என்ற அளவில் குறைந்துள்ளது. இருப்பினும், இது வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாகவே இருக்கும்.

புது ஹோண்டா சிட்டி கார் எவ்ளோ கொடுக்கும்?

புதிய ஹோண்டா சிட்டி காரில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 3டி எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், 8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இ-சிம்கார்டு மூலமாக இணைய வசதியுடன் இயங்கும் கனெக்ட்டிவிட்டி செயலி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புது ஹோண்டா சிட்டி கார் எவ்ளோ கொடுக்கும்?

இதனிடையே, புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரை இன்று மும்பையில் வைத்து எமது ரிவியூ எடிட்டர் டெஸ்ட் டிரைவ் செய்ய இருக்கிறார். இந்த காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை விரைவில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Here are the details of India spec new-gen Honda City car mileage details. Read in Tamil.
Story first published: Monday, June 29, 2020, 10:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X