புத்தம் புதிய பெட்ரோல் எஞ்சினுடன் வரும் புதிய ஹோண்டா சிட்டி கார்

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய எஞ்சினின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் புதிய எஞ்சின்!

இந்தியாவின் மிட்சைஸ் செடான் மார்க்கெட்டிற்கு அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த மாடல் ஹோண்டா சிட்டி கார். மிக நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிராண்டு பெயர் இந்தியர்களை வசியம் செய்து வைத்திருக்கிறது. தற்போது மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ரேபிட் உள்ளிட்ட மாடல்கள் இருந்தாலும், ஹோண்டா சிட்டி காருக்கு தனி மவுசு உண்டு.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் புதிய எஞ்சின்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது தலைமுறை மாற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில், ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் கடந்த ஆண்டு இறுதியில் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

MOST READ: 2 நாட்கள்தான்... 4,000 விசாரணைகள், 500 புக்கிங்குகள், 170 டெலிவரிகள்... ஹூண்டாயை திணற வைத்த மக்கள்!

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் புதிய எஞ்சின்!

தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள நான்காம் தலைமுறை மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், புதிய ஹோண்டா சிட்டி காரில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் புதிய எஞ்சின்!

இந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் L15B என்ற பெயரில் ஹோண்டா குறிப்பிடுகிறது. இந்த எஞ்சின் டபுள் ஓவர்ஹெட் கேம்சாஃப்ட் (DOHC) கொண்டதாக வருகிறது. இதனால், செயல்திறனும், எரிபொருள் சிக்கனமும் மிகச் சிறப்பாக இருக்கும். குறைவான மாசு உமிழ்வுடன் பிஎஸ்6 தர நிர்ணயித்திற்கு எளிதாக இயைந்து போகும் அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

MOST READ: இந்த மாதிரியான சாகசங்களை செய்ய இவைகளால் மட்டுமே முடியும்... அடடே இந்த கார்கள்ல இவ்ளோ திறன் இருக்கா?

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் புதிய எஞ்சின்!

தற்போதைய மாடலில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 117 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனைவிட புதிய பெட்ரோல் எஞ்சின் மிகச் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் புதிய எஞ்சின்!

ஆனால், புதிய தலைமுறை மாடலில் வழங்கப்பட இருக்கும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 119 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும். இதுதவிர, டீசல் மாடலானது மேனுவல், சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

MOST READ: இனி வரும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் நேவிகேஷன் வசதி

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் புதிய எஞ்சின்!

புதிய ஹோண்டா சிட்டி கார் வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்படும். இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அலெக்ஸா ரிமோட் தொழில்நுட்பங்களும் இடம்பெற உள்ளது.

Most Read Articles

English summary
According to a report, the Japanese carmaker Honda is planning to introduce a new City car with all-new 1.5L petrol engine (L15B) in India.
Story first published: Saturday, May 9, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X