புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

இந்திய எஸ்யூவி கார் மார்க்கெட்டின் சூப்பர் ஹிட் மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டி மற்றும் பிஎஸ்-6 எஞ்சின்களுடன் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை அம்சங்கள் கொண்ட ஹூண்டாய் க்ரெட்டா கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்களுடன், மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் புதிய எஞ்சின் தேர்வுகளுடன் வருவதால், வாடிக்கையாளர் மத்தியில் இந்த எஸ்யூவி பேராவலை ஏற்படுத்தி உள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

புதிய ஹூண்டாய் கார் வரும் 17ந் தேதி இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்தநிலையில், இந்த காருக்கு இன்று முதல் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

ரூ.21,000 முன்பணம் செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் டீலர்களில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதனிடையே, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் எஸ்யூவி மூலமாக க்ரெட்டாவுக்கு பெரும் நெருக்கடி காத்திருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

இருப்பினும், கியா செல்டோஸ் காரின் நெருக்கடியை புதிய ஹூண்டாய் க்ரெட்டா சமாளிக்கும் என்று கருதப்படுகிறது. கியா செல்டோஸ் எஸ்யூவியை சமாளிக்கும் விதமாக, எல்இடி விளக்குகளுடன் கூடிய பகல்வேளை விளக்குகள், டெயில் லைட்டுகள், ஸ்பிளிட் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

கியா செல்டோஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் தேர்வுகள்தான் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியிலும் இடம்பெற இருக்கிறது. இந்த எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் தேர்வுகள் இடம்பெறும்.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

அத்துடன், சிறிது காலத்திற்கு பின்னர் கியா செல்டோஸ் காரில் இருக்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினும் வழங்கப்படும். இந்த எஞ்சின் அதிபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மூன்று எஞ்சின் தேர்வுகளிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட இருக்கிறது. வாய்ஸ் கமாண்ட் வசதி மற்றும் புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி செயலியுடன் வர இருக்கிறது. வாய்ஸ் கமாண்ட் மூலமாக சன்ரூஃபை இயக்க முடியும்.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

ஆட்டோமேட்டிக் மாடல்களில் பேடில் ஷிஃப்ட் வசதி, இரட்டை குழல் புகைப்போக்கி அமைப்பு, ரிமோட் முறையில் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் வசதி, படூல் விளக்குகள், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, ஏர் பியூரிஃபயர், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!

தற்போதைய மாடலைவிட சற்று கூடுதலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். கியா செல்டோஸ், ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட நேரடி போட்டியாளர்களாக இருக்கும். இந்த கார் எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Hyundai Motors has announced the commencement of the new Creta’s bookings in India ahead of its launch on 17th of this month.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X