புதிய ஹூண்டாய் எலண்ட்ராவின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது...!

விரைவில் சந்தைக்கு வரவுள்ள அடுத்த தலைமுறை எலண்ட்ரா மாடலின் புதிய டீசர் வீடியோவை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் மூலமாக வெளிவந்துள்ள விபரங்களை இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

புதிய ஹூண்டாய் எலண்ட்ராவின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது...!

இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள ஏழாம் தலைமுறை எலண்ட்ரா மாடல் அடுத்த ஆண்டில் அறிமுகமாகவுள்ளது. அகலமான க்ரில்லை முன்புறத்தில் கொண்டுள்ள இந்த 2021 மாடலில் ஹெட்லேம்ப் ரீ-டிசைனிலும் ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல் விளக்குகளுடனும் உள்ளது.

புதிய ஹூண்டாய் எலண்ட்ராவின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது...!

டர்ன் இண்டிகேட்டர்கள் முன்புற க்ரிலுக்கு சற்று உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. காரின் பின்புறத்தில், லைட் பார் பின்புற கதவுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லைட் பாருடன் T-வடிவிலான டெயில் லைட்கள், போல்ட்டான எலண்ட்ரா பேட்ஜிங் மற்றும் ரீடிசைனில் பம்பர்கள் உள்ளிட்டவையும் இந்த காரின் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் எலண்ட்ராவின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது...!

இவற்றுடன் இந்த செடான் கார் புதிய ட்யூல்-டோனில் அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது. உட்புறத்தில் ஹூண்டாயின் இந்த ஏழாம் தலைமுறை எலண்ட்ரா காரில் டேஸ்போர்டு புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேஸ்போர்டு கிடைமட்டமாக அனைத்து 4 ஏசி வெண்ட்ஸையும் கனெக்ட் செய்யும் விதமாக கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் எலண்ட்ராவின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது...!

ஏசி வெண்ட்ஸ் உடன் 10.25 இன்ச் திரையுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் புதிய எலண்ட்ராவின் உட்புற டேஸ்போர்டு கொண்டுள்ளது. மைய கன்சோல் சற்று பெரியதாக்கப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் எலண்ட்ராவின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது...!

அதேபோல் ஸ்டேரிங் சக்கரத்தின் டிசைனும் புதுமையாக உள்ளது. இவற்றுடன் இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழிற்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், சுற்றிலும் விளக்குகள், ப்ரீமியம் தரத்தில் ஆடியோ சிஸ்டம் போன்றவற்றையும் இந்த புதிய கார் கொண்டுள்ளது.

புதிய ஹூண்டாய் எலண்ட்ராவின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது...!

பயணிகளின் பாதுகாப்பிற்கு கார் முன்புறமாக மோதுவதை தடுக்கும் மானிடரிங் சிஸ்டத்துடன் ஸ்மார்ட்சென்ஸ் ட்ரைவிங் அசிஸ்ட் சிஸ்டம், உதவி செயல்பாடுகளுடன் பின்பக்கம் பார்க்கும் கேமிரா, அதிக எண்ணிக்கையில் காற்றுப்பைகள், ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி ப்ரோகிராம் போன்ற தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

MOST READ: கார் பாகங்களை வைத்து அசத்தல்... கொரோனா வைரஸிடம் இருந்து உயிரை காக்கும் கருவி... கடவுள்யா நீங்க!!!

புதிய ஹூண்டாய் எலண்ட்ராவின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது...!

புதிய தலைமுறை எலண்ட்ரா காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை ஹூண்டாய் நிறுவனம் பொருத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 146 பிஎச்பி பவரையும், 179 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கவல்லது.

MOST READ:உலகையே நிலைகுலைய வைத்த கொரோனா வைரஸ்... இந்தியாவில் தலைகீழ் மாற்றம்... கொஞ்சம் அதிசயமாதான் இருக்கு...

புதிய ஹூண்டாய் எலண்ட்ராவின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது...!

ட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்ற இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன. இந்த பெட்ரோல் என்ஜின் மட்டுமில்லாமல் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் 1.6 லிட்டர் ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் தேர்வும் இந்த புதிய காருக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

MOST READ:உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...

இந்த ஹைப்ரீட் என்ஜினின் மூலமாக அதிகப்பட்சமாக 138 பிஎச்பி பவரையும், 264 என்எம் டார்க் திறனை பெற முடியும். அறிமுகத்திற்கு பிறகு ஹூண்டாய் எலண்ட்ராவிற்கு ஹோண்டா சிவிக் மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா போன்ற செடான் கார்கள் போட்டியாக உள்ளன.

இந்திய சந்தையில் சி-பிரிவு செடான் கார்களுக்கு தேவை குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் புதிய எலண்ட்ரா மாடலின் அறிமுகத்தால் இந்த நிலை மாறும் என ஹூண்டாய் நிறுவனம் நம்புகிறது. அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கொரோனாவின் தாக்கததால் தயாரிப்புகளை டிஜிட்டல் முறையில் இணையத்தில் சந்தைப்படுத்தி வருகின்றன. இந்த வகையில் தான் எலண்ட்ரா மாடலின் புதிய டீசர் வீடியோவை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Most Read Articles

English summary
New Hyundai Elantra Official Walkaround Video Released: India Launch Expected Next Year
Story first published: Tuesday, April 7, 2020, 21:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X