புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் மாடல் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது என்ற புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகவும் சிறந்த தேர்வாக ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இருந்து வருகிறது. டிசைன், வசதிகளில் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த இந்த கார் தற்போது புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

புத்தம் டிசைனில் வேறுபட்ட மாடலாக வர இருக்கும் இந்த மூன்றாம் தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக எதிர்பார்க்கப்படும் இந்த கார் வரும் நவம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கார்தேக்கோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், இந்த கார் ஏற்கனவே சில டீலர்களுக்கும் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் டிசைன் முற்றிலும் வேறுபட்ட அம்சங்களுடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் டிசைன் மிக கூர்மையான அம்சங்களுடன் மாற்றப்பட்டுள்ளது. மிக முரட்டுத்தனமான பம்பர் அமைப்பு காரின் முகப்பை முற்றிலும் மாறுபட்டதாக காட்டுகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

பக்கவாட்டில் சில டிசைன் மாறுதல்கள், புதிய அலாய் வீல்களுடன் மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. பின்புற டிசைன் அடியோடு மாற்றப்பட்டு இருக்கிறது. இரண்டு டெயில் லைட் க்ளஸ்ட்டர்களும் இணைந்தாற்போல் டிசைன் செய்யப்பட்டு இருப்பதுடன், பக்கவாட்டிலும் கூர்மையான முனைகளுடன் நீளும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் இன்டீரியர் மற்றும் தொழில்நுட்ப வசதிகள்தான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. புதிய டேஷ்போர்டு அமைப்பில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட உள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேரடி இணைய வசதி மூலமாக புளூலிங்க் செயலியை இணைக்கும் வசதி இடம்பெறும். புளூலிங்க் என்ற பிரத்யேக செயலி மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு மற்றும் கார் இயக்கத் தகவல்களை பெற முடியும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி இடம்பெறும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் என வழக்கம்போல் ஏராளமான பிரிமீயம் வசதிகளையும் பெற்றிருக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் ஆப்ஷன்கள் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரிலும் வழங்கப்படும். அதாவது, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்பட உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழக்கப்படும் வாய்ப்புள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
English summary
Hyundai will be launching a new-gen model of the Elite i20 hatchback in the Indian market. According to the latest report, the company is gearing up to launch the new-gen i20 sometime in the first week of November.
Story first published: Wednesday, October 21, 2020, 15:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X