புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் திட்டமிட்டபடி அறிமுகமாகிறது!

கொரோனா பிரச்னையால் பல புதிய கார்களின் வருகை தள்ளிப்போகும் நிலையில், புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் திட்டமிட்டபடி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் திட்டமிட்டபடி அறிமுகமாகிறது!

கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தையே அடியோடு திருப்பிப் போட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளின் தொழிற்துறை பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றன. அதேபோன்று, ஆட்டோமொபைல் துறையையும் அடியோடு பாதித்துள்ளது கொரோனா வைரஸ்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் திட்டமிட்டபடி அறிமுகமாகிறது!

இதனால், புதிய கார்களின் அறிமுகத்தை பல நிறுவனங்கள் தள்ளி வைத்து வருகின்றன. இந்த சூழலில், புதிய தலைமுறை எலைட் ஐ20 காரை திட்டமிட்டபடி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் திட்டமிட்டபடி அறிமுகமாகிறது!

இதுகுறித்து கார் அண்ட் பைக் தளத்திடம் பேசியுள்ள ஹூண்டாய் உயர் அதிகாரி தருண் கர்க்,"எங்களிடம் சிறப்பான திட்டங்கள் உள்ளன. எனவே, புதிய கார்களை அறிமுகப்படுத்துவதில் எந்த பிரச்னையும், தாமதமும் இருக்காது," என்று தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் திட்டமிட்டபடி அறிமுகமாகிறது!

எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் செப்டம்பர் மாதத்தில் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிடுவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் திட்டமிட்டபடி அறிமுகமாகிறது!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், பிரிமீயமான உட்புற அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். 10.25 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் புளூலிங்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் திட்டமிட்டபடி அறிமுகமாகிறது!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 100 பிஎஸ் பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். மேனுவல் அல்லது டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும் என தெரிகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் திட்டமிட்டபடி அறிமுகமாகிறது!

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 100 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் திட்டமிட்டபடி அறிமுகமாகிறது!

தற்போது ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ரூ.5.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய தலைமுறை மாடலின் விலை அதிகரிக்கப்படும் என்பதுடன், மிகவும் பிரிமீயமான தேர்வாக போட்டியாளர்களை விஞ்சி நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
According to reports, Hyundai is planning to launch new elite i20 car in India by september this year.
Story first published: Friday, May 15, 2020, 13:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X