இருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...

புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...

மூன்றாவது தலைமுறை ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக், கடந்த நவம்பர் 5ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முந்தைய தலைமுறை மாடல்களை காட்டிலும் வசதிகள், தொழில்நுட்பம், டிசைன் என அனைத்து அம்சங்களிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மேம்பட்டுள்ளது.

இருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...

மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்டா மற்றும் அஸ்டா (ஆப்ஷனல்) ஆகிய வேரியண்ட்களில் புதிய ஹூண்டாய் ஐ20 கிடைக்கும். இந்த காரின் ஆரம்ப விலை 6.79 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 10.59 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை சற்று அதிகமாக கருதப்பட்டாலும், அதற்கேற்ப பல்வேறு வசதிகளை ஹூண்டாய் வழங்கியுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...

விலை அதிகம் என்ற குறைபாட்டுக்கு மத்தியிலும், புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆம், புக்கிங் தொடங்கப்பட்ட முதல் 20 நாட்களில், புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காருக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. ஹூண்டாய் நிறுவனம் தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...

இதில், 4 ஆயிரம் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி பலேனோ, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா க்ளான்சா உள்ளிட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுடன் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் போட்டியிட்டு வருகிறது. விலை அதிகம் என்ற நிலையிலும், வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வழங்கி வருவதை முன்பதிவு எண்ணிக்கை நமக்கு தெளிவாக காட்டுகிறது.

இருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் நீளம் 3,995 மிமீ, அகலம் 1,775 மிமீ, உயரம் 1,505 மிமீ, வீல் பேஸ் 2,580 மிமீ. இந்த காரில், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், ப்ரொஜெக்டர் பனி விளக்குகள், ஆர்16 டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளிலும், புதிய ஹூண்டாய் ஐ20 கார் கிடைக்கிறது.

இருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...

இதில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினும் அடக்கம். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 ஹெச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்ய கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. இதுதவிர 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் தேர்வும் ஹூண்டாய் ஐ20 காரில் வழங்கப்படுகிறது.

இருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...

இந்த இன்ஜின் 83 ஹெச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஐவிடி தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் புதிய ஹூண்டாய் ஐ20 பெற்றுள்ளது. இந்த இன்ஜின் 120 ஹெச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...

6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆகிய தேர்வுகளில் இந்த இன்ஜின் கிடைக்கும். புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது செயல்திறன், சௌகரியமான பயணம் உள்பட பல்வேறு அம்சங்களில், இந்த கார் எங்களை கவர்ந்தது. எனவே ஹூண்டாய் நிறுவனத்திற்கு இந்த கார் நல்ல விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
New Gen Hyundai i20 Premium Hatchback Bookings Cross 20k In 20 Days - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X