Just In
- 16 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 12 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 14 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- Movies
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- News
ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்
- Sports
அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்?
புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) கார் இந்திய சந்தையில் கடந்த நவம்பர் 5ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஆகும். மாருதி சுஸுகி பலேனோ, டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுடன், புதிய ஹூண்டாய் ஐ20 கார் போட்டியிட்டு வருகிறது.

முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில், அனைத்து விதங்களிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில், இந்த புதிய காருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விற்பனைக்கு வந்து இன்னும் முழுமையாக ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில், புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு தற்போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன.

புதிய ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் விலை 6.79 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 11.17 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஹூண்டாய் நிறுவனம் இந்த காருக்கு விலையை சற்று அதிகமாக நிர்ணயம் செய்துள்ளதாகவே கருதப்படுகிறது.

இருந்தபோதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள முன்பதிவு எண்ணிக்கை அதனை உறுதி செய்கிறது. புதிய ஹூண்டாய் ஐ20 காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில், ஒரு சில வசதிகள் செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக இந்த காரில்தான் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஹூண்டாய் ஐ20 காரில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இது சப்போர்ட் செய்யும். மேலும் போஸ் பிரீமியம் ஸ்பீக்கர் சிஸ்டம், ஏர் ப்யூரிஃபையர், ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் புதிய ஹூண்டாய் ஐ20 பெற்றுள்ளது.

இதுதவிர ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ரியர் ஏசி வெண்ட்கள், ஆம்பியண்ட் லைட்டிங் ஆகிய வசதிகளும் புதிய ஹூண்டாய் ஐ20 காரில் வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் நிறுவன கார்களுக்கே உரித்தான வகையில், புதிய ஐ20 காரிலும் ஏராளமான வசதிகள் நிரம்பி வழிகின்றன.

மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்டா மற்றும் அஸ்டா (ஆப்ஷனல்) என மொத்தம் 4 வேரியண்ட்களில், புதிய ஹூண்டாய் ஐ20 கார் கிடைக்கும். மூன்று வெவ்வேறு இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன், புதிய ஐ20 காரை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்கிறது. 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் இன்ஜின் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

இப்படி ஏகப்பட்ட வசதிகளை ஹூண்டாய் நிறுவனம் வழங்குவதாலும், வெவ்வேறு இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியும் என்பதால், விலை சற்று அதிகம் என்ற குறைக்கு மத்தியிலும், புதிய ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.