புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடலின் சோதனை மீண்டும் துவங்கியது... அறிமுகம் எப்போது..?

கொரோனாவினால் நின்று போன 90வது ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட இருந்த ஹூண்டாய் மோட்டார்ஸின் முற்றிலும் புதியதான ஐ20 மாடல் டெல்லி அருகே சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடலின் சோதனை மீண்டும் துவங்கியது... அறிமுகம் எப்போது..?

இதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களில் இந்த சோதனை கார், சர்வதேச மாடலின் எல்இடி ஹெட்லேம்ப்களுக்கு பதிலாக ஹாலோஜன் ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது. ஐ20 மாடலின் மூன்றாம் தலைமுறையான இந்த கார் கிட்டத்தட்ட அதன் ஐரோப்பிய வெர்சனை ஒத்து காணப்படுகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடலின் சோதனை மீண்டும் துவங்கியது... அறிமுகம் எப்போது..?

முன்புற பகுதியின் டிசைன் புதிய பம்பர் மற்றும் முக்கியமான ஏர் இன்லெட்களுடன் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மற்ற மாற்றங்களாக புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள், போல்ட்டான வெட்டுகள் மற்றும் க்ரீஸஸ் மற்றும் ஸ்போர்ட்டியான இசட்-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவற்றை மூன்றாம் தலைமுறை ஐ20 மாடல் ஏற்றுள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடலின் சோதனை மீண்டும் துவங்கியது... அறிமுகம் எப்போது..?

அதேபோல் மொத்த பரிணாம தோற்றத்தையும் தற்போதைய மாடலை காட்டிலும் பெரியதாக புதிய ஐ20 மாடலில் எதிர்பார்க்கலாம். உட்புற கேபின் சற்று கூடுதலான ப்ரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இதனால் கூடுதல் சவுகரியமான பயணத்தையும் எதிர்பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடலின் சோதனை மீண்டும் துவங்கியது... அறிமுகம் எப்போது..?

உட்புறத்தில் முக்கியமான அம்சங்களாக நேர்த்தியான டேஸ்போர்டு, கிடைமட்டமான ஏசி வெண்ட்ஸ், ப்ரீமியம் போஸ் சவுண்ட் சிஸ்டம், சுற்றிலும் விளக்கு, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் சில கண்ட்ரோல்களுடன் புதிய ஸ்டேரிங் சக்கரம் போன்றவை உள்ளன. இதன் ஐரோப்பிய மாடலில் 10.25 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடலின் சோதனை மீண்டும் துவங்கியது... அறிமுகம் எப்போது..?

ஆனால் இந்தியாவில் அறிமுகமாகும் ஐ20 மாடலில் 8 இன்ச் தொடுத்திரையே பொருத்தப்படவுள்ளது. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஆதரிக்கும் இந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் இந்த புதிய ஹூண்டாய் மாடல் பெறவுள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடலின் சோதனை மீண்டும் துவங்கியது... அறிமுகம் எப்போது..?

புதிய தலைமுறை ஐ20 காரில் வென்யூ எஸ்யூவியில் தற்சமயம் வழங்கப்பட்டு வரும் அதே என்ஜின் அமைப்பு தான் கொடுக்கப்படவுள்ளது. இதன்படி பார்க்கும்போது 83 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படவுள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடலின் சோதனை மீண்டும் துவங்கியது... அறிமுகம் எப்போது..?

மற்றொரு பெட்ரோல் என்ஜின் தேர்வாக உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினானது 120 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடலின் சோதனை மீண்டும் துவங்கியது... அறிமுகம் எப்போது..?

இந்த காரின் டீசல் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த டீசல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் 100 பிஎச்பி/ 240 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும். இந்த டீசல் என்ஜினுக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்க வாய்ப்புள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடலின் சோதனை மீண்டும் துவங்கியது... அறிமுகம் எப்போது..?

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் ஆரம்ப விலை ரூ.5.75 லட்சத்தில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மாருதி சுசுகி பலேனோ, ஃபோக்ஸ்வேகன் போலோ, டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற தனது வழக்கமான போட்டி மாடல்களுடன் போட்டியினை தொடரவுள்ளது.

Most Read Articles
English summary
Next-Gen Hyundai i20 restarts testing – Spied wearing halogen headlamps
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X