டெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...?

2020 ஹூண்டாய் ஐ20 அதன் இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக டெல்லியில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...?

ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வருகிற தீபாவளி பண்டிக்கை காலத்தில் 2020ஆம் ஆண்டிற்காக அப்கிரேட் செய்யப்பட்ட ஐ20 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் தான் தற்போது சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருக்கும் புதிய தலைமுறை ஐ20 கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

டெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...?

இதுகுறித்து டீம்பிஎச்பி செய்திதளம் மூலம் கிடைத்துள்ள ஸ்பை படங்களில் சோதனை கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இருப்பினும் காரின் பின்புற டெயில்லேம்பின் தோற்றம் சற்று நம் கண்களுக்கு தென்படுகிறது.

டெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...?

இந்த புதிய தலைமுறை ஐ20 ஹேட்ச்பேக் கார், தற்சமயம் விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும் முற்றிலும் புதிய தோற்றத்தில் சந்தைக்கு வரவுள்ளது. இந்த வகையில் புதிய காஸ்கெட்டிங் க்ரில், நேர்த்தியான வடிவில் ஹெட்லேம்ப்கள், பிளவுப்பட்ட டெயில்லேம்ப்களை இணைக்கும் விளக்கு பார் உள்ளிட்ட ஸ்டைலிங் அம்சங்கள் புதிய ஐ20-ல் எதிர்பார்க்கப்படுகின்றன.

டெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...?

இவை மட்டுமில்லாமல் புதிய டிசைனில் இரட்டை நிறத்தில் அலாய் சக்கரங்களும் இந்த 2020 மாடலில் வழங்கப்படலாம். ஐரோப்பிய சந்தையில் ஏற்கனவே விற்பனையை துவங்கிவிட்ட புதிய தலைமுறை ஐ20-ல் புதிய டேஸ்போர்டு டிசைன் உடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு என தனித்தனியாக 10.25 இன்ச்சில் திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

டெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...?

இதில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் பிராண்டின் ‘ப்ளூலிங்க்' இணைப்பு தொழிற்நுட்பத்தையும் கொண்டுள்ளது. 33 விதமான கட்டளை ஏற்கக்கூடிய இந்த தொழிற்ச்நுட்பம் ஹூண்டாய் வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி காரிலும் வழங்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...?

இந்த இணைப்பு வசதிகளுடன் எலக்ட்ரிக் சன்ரூஃப், மடக்கும் வசதி கொண்ட இருக்கைகள், இரு-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி மற்றும் போஸ் ப்ரீமியம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவையும் 2020 ஐ20-ல் எதிர்பார்க்கப்படுகின்றன.

பயணிகளின் பாதுகாப்பிற்கு ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியை கண்காணிக்கும் வசதி, அதிக எண்ணிக்கைகளில் காற்றுப்பைகள், ஐசோ-ஃபிக்ஸ் ஏற்றங்கள் போன்ற வசதிகள் புதிய ஐ20-ல் ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் என கூறப்படுகிறது.

டெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...?

இவற்றுடன் மற்ற மாடல் கார்களை போல் புதிய ஹூண்டாய் ஐ20-யிலும் மூன்று என்ஜின் தேர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று என்ஜின் தேர்வுகளில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இந்த என்ஜின்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் உடன் சிவிடி கியர்பாக்ஸும், 1.5 லிட்டர் டீசல் யூனிட் உடன் டார்க் கன்வெர்டரும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக எதிர்பார்க்கப்படுகின்றன. அதேபோல் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினிற்கு 6-ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படலாம்.

டெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...?

இந்திய சந்தையில் வேகமாக மாற்றமடைந்துவரும் ஹேட்ச்பேக் பிரிவிற்கு ஏற்ப ஐ20-ஐயும் ஹூண்டாய் நிறுவனம் ப்ரிமியம் தரத்திற்கு மாற்றி வருகிறது. விற்பனையில் ஹூண்டாய் ஐ20-க்கு போட்டியாக மாருதி சுஸுகி பலேனோ, டாடா அல்ட்ராஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ, டொயோட்டா க்ளான்ஸா மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட ஹேட்ச்பேக் கார்கள் உள்ளன.

Most Read Articles
English summary
Next-Gen Hyundai i20 Spotted Testing In India Again
Story first published: Thursday, September 24, 2020, 1:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X