புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்...

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஐ20 காரை வரும் மாதங்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கிடையில் தற்போது ஐ20-ன் இந்த புதிய தலைமுறை கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்...

இத்தகைய சோதனை ஓட்டங்களினால் இந்த புதிய தலைமுறை காரின் அறிமுகம் இந்த வருட இறுதிக்குள்ளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதற்கிடையில் தற்போது டீம்பிஎச்பி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படங்கள் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் புதிய தலைமுறை காரை எவ்வாறு எதிர்பார்க்கலாம் என்பது குறித்த ஒரு ஐடியாவை நமக்கு வழங்குகின்றன.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்...

புதிய ஐ20-ன் இந்த சோதனை ஓட்டம் புது டெல்லியில் உள்ள மாதுரா சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கார் முழுவதும் மறைக்கப்பட்டு இருந்தாலும் காரில் வழங்கப்பட்டுள்ள மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள், நேர்த்தியான் பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா உள்ளிட்டவற்றை பார்க்க முடிகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்...

இவற்றுடன் ஸ்போர்டியான வடிவத்தில் ட்ராப்சாய்டல் க்ரில், டிஆர்எல்களுடன் முழு எல்இடி ஹெட்லேம்ப்கள், மஸ்குலர் பொனெட், கேரக்டர் லைன்களுடன் ரீடிசைனில் பம்பர்கள், கருப்பு நிறத்தில் B-பில்லர்கள், அலாய் சக்கரங்களின் வட்டத்தில் மூடுபனி விளக்குகள் உள்ளிட்டவையையும் புதிய தலைமுறை ஐ20 காரில் எதிர்பார்க்கப்படுகிறது. மற்றப்படி இந்த ஸ்பை படங்கள் காரின் உட்புற கேபினை வெளிக்காட்டவில்லை.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்...

நமக்கு தெரிந்தவரை மிகவும் ப்ரீமியம் தரத்திலான உள்ளமைவுடன் பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பின்பக்க ஏசி வெண்ட்ஸ், ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பிராண்டின் ப்ளூலிங்க் தொழிற்நுட்ப வசதி கொண்ட வென்யூவில் பொருத்தப்படும் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முதலியவை இதன் கேபினில் வழங்கப்படலாம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்...

இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களையும் இந்த 2020 காரில் ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தி இருக்கும் என நம்புவோம். 2020 ஹூண்டாய் ஐ20-ல் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ற மூன்று என்ஜின் தேர்வுகள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்...

இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷன் பணிக்கு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், ஆட்டோமேட்டிக் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்படலாம். முற்றிலும் புதிய தலைமுறை ஐ20 உலகளவில் இந்த ஆண்டு துவங்கத்திலேயே அறிமுகமாகிவிட்டது. இந்திய ஷோரூம்களுக்கு எப்போது வரும் என்றுதான் நாம் காத்து கொண்டிருக்கிறோம்.

Most Read Articles
English summary
Next-Generation Hyundai i20 Premium Hatchback Caught Testing In India Again
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X