புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் டீசர் வீடியோ வெளியீடு

மஹிந்திரா தார் எஸ்யூவியின் வருகையை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தும் விதத்தில், புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

மிரட்டும் மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் டீசர் வீடியோ!

ஆஃப்ரோடு எஸ்யூவி என்றாலே மஹிந்திரா தார் எனும் அளவுக்கு இந்தியாவில் பிரபலமான மாடலாக உள்ளது. சரியான விலை, ஆஃப்ரோடு பயன்பாட்டு அம்சங்கள், பாரம்பரிய எஸ்யூவி டிசைன் அம்சங்கள் இதற்கு மிகப்பெரிய சந்தையை ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மிரட்டும் மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் டீசர் வீடியோ!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், நவீன காலத்திற்கு ஏற்ற பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அதிக இடவசதியுடன் மஹிந்திரா தார் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த பல மாதங்களாக இந்த புதிய மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடந்தப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், வரும் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு தக்கவாறு, புதிய தார் வருகை குறித்த ஆவலை அதிகப்படுத்துவதற்காக வீடியோ டீசர் ஒன்றை மஹிந்திரா வெளியிட்டு இருக்கிறது. இதில், மஹிந்திரா தார் எஸ்யூவியின் பயன்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், இந்த வீடியோ அமைந்துள்ளது.

மிரட்டும் மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் டீசர் வீடியோ!

புதிய தலைமுறை மாடலாக வரும் மஹிந்திரா தார் எஸ்யூவி பழைய மாடலில் இருந்து பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. தோற்றத்தில் மாறுதல்கள் அதிகம் தெரியவில்லை என்றாலும், வடிவத்தில் பெரிய கார் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இடவசதி குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டு இருக்கும்.

மிரட்டும் மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் டீசர் வீடியோ!

அடுத்து, தற்போதைய மாடலில் பக்கவாட்டில் இடம்பெற்றிருக்கும் பின் இருக்கைகள், புதிய மாடலில் முன்புறம் நோக்கியதாக மாற்றப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களால் அதிகம் வரவேற்கப்படும் விஷயமாக இருக்கும்.

மிரட்டும் மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் டீசர் வீடியோ!

அதேபோன்று, புதிய கார் மாடல்களில் இடம்பெறும், தொடுதிரை கட்டுப்பாட்டு வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஏசி வசதி, யுஎஸ்பி சார்ஜர்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகளுடன் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மிரட்டும் மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் டீசர் வீடியோ!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் வலிமையான சேஸீ கட்டமைப்பு இடம்பெற இருக்கிறது. டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உளிட்ட பல பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

மிரட்டும் மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் டீசர் வீடியோ!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 2.2 லிட்டர் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் தேர்வு இடம்பெற இருக்கிறது. இந்த எஞ்சின் தவிர்த்து, 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வர இருக்கிறது. இந்த புதிய ஆஃப்ரோடு எஸ்யூவியில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

மிரட்டும் மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் டீசர் வீடியோ!

தற்போது விற்பனையில் உள்ள மாடலைவிட விலை சற்று கணிசமாக உயர்த்தி நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆஃப்ரோடு பிரியர்கள் மட்டுமின்றி, குடும்பத்தினருடன் செல்வதற்கான அம்சங்களுடன் புதிய தார் எஸ்யூவியில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, விற்பனையிலும் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
மஹிந்திரா தார், மஹிந்திரா தார் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள், மஹிந்திரா தார் எஸ்யூவியின் எஞ்சின் விபரம்
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X