புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது!

எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ள, புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி முதல்முறையாக இன்று பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டிசைன், தொழில்நுட்பங்கள், பரிமாணம், வசதிகள், எஞ்சின் அனைத்திலும் முற்றிலும் புதிய மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. படங்களுடன், தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... வேற லெவல் மாற்றங்கள்

வேற லெவல் மாற்றங்கள்

வெறுமனே பழைய தார் எஸ்யூவியில் மாற்றங்களை செய்யாமல், பழைய டிசைன், ஆஃப்ரோடு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பாரம்பரியத்தை கையில் வைத்துக் கொண்டு நவீன யுக மாடலாக தார் எஸ்யூவியை முற்றிலுமாக மாற்றம் செய்துளளனர் மஹிந்திரா எஞ்சினியர்கள். மஹிந்திராவின் மூன்றாவது தலைமுறை கட்டமைப்புக் கொள்கையின் கீழ் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. பாடி ஆன் ஃப்ரேம் சேஸீயில் மிகுந்த வலுவான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

 புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... வேற லெவல் மாற்றங்கள்

வசீகரமான தோற்றம்

பார்த்தவுடனே மஹிந்திரா தார் என்று கூறிவிடலாம். ஆனால், நிதானித்து பார்த்தால் அவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதுடன் மிகவும் வசீகரமான தோற்றத்தை பெற்றஇருக்கிறது.

 புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... வேற லெவல் மாற்றங்கள்

டிசைன்

புதிய க்ரில் அமைப்பு, வட்ட வடிவ ஹெட்லைட்டுகள், வலிமையான பானட் அமைப்பு, அசத்தும் பக்கவாட்டு மற்றும் பின்புற டிசைன் ஆகியவை மஹிந்திரா தார் எஸ்யூவியை இப்போதே வாங்கத் தூண்டும் அம்சங்களாக உள்ளன. காரின் அகலம், வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புறத்தில் அதிக இடவசதி, பின் வரிசை பயணிகள் ஏறி, இறங்குவதற்கு ஏதுவானதாக மாற்றம் கண்டுள்ளது.

 புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... வேற லெவல் மாற்றங்கள்

இரண்டு மாடல்கள்

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி AX சீரிஸ் மற்றும் LX சீரிஸ் என என இரண்டு மாடல்களில் வர இருக்கிறது. இதில், ஏஎக்ஸ் சீரிஸ் மாடலானது ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு தகுந்த பல அம்சங்களை பெற்றிருக்கிறது. எல்எக்ஸ் சீரிஸ் மாடலானது சொகுசு அம்சங்கள் நிறைந்த ஆன்ரோடு பயன்பாட்டிற்கும் சிறந்த அம்சங்களை கொண்டதாக இருக்கும்.

 புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... வேற லெவல் மாற்றங்கள்

ஏஎக்ஸ் சீரிஸ் மாடலில் சாஃப்ட் டாப் கூரை அமைப்பு, 6 பேர் பயணிப்பதற்கான 2 முன்னோக்கிய முன் வரிசை இருக்கைகள், பின்புறத்தில் தலா 3 பேர் அமர்வதற்கான பக்கவாட்டு நோக்கிய இருக்கைகள், ஸ்டீல் ஃபுட்ஸ்டெப், மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரன்ஷியல், 16 அங்குல சக்கரங்கள் ஆகியவை வழங்கப்படும். ஆப்ஷனலாக ஹார்டு டாப், முன்னோக்கிய பின் இருக்கைகள், ரிமோட் கீ லெஸ் என்ட்ரி ஆகியவற்றை பெற முடியும்.

 புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... வேற லெவல் மாற்றங்கள்

எல்எக்ஸ் சீரிஸ் மாடலில் ஹார்டு டாப் அல்லது கன்வெர்ட்டிபிள் வகை கூரை, 4 பேர் செல்வதற்கான இருக்கைகள், டியூவல் டோன் பம்பர், 18 அங்குல அலாய் வீல்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், பனி விளக்குகள், பிரேக் லாக்கிங் டிஃபரன்ஷியல் வசதிகளை பெற முடியும்.

 புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... வேற லெவல் மாற்றங்கள்

இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம்

இந்த ஆஃப்ரோடு எஸ்யூவியின் மிக முக்கிய அம்சங்களாக 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஎஃப்டி திரையுடன் கூடிய மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டு இருக்கிறது.

 புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... வேற லெவல் மாற்றங்கள்

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் திரையில், கார் ஆஃப்ரோடு பயன்பாட்டில் இருக்கும்போது, முன்சக்கரங்கள் எந்த கோணத்தில் இருக்கின்றன, அப்ரோச் ஆங்கிள் உள்ளிட்ட பல தகவல்களை நிகழ்நேர முறையில் காண முடியும்.

 புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... வேற லெவல் மாற்றங்கள்

முக்கிய வசதிகள்

ஸ்மார்ட் வாட்ச் மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இணைத்துக் கொள்ளும் கனெக்ட்டிவிட்டி வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், பவர் விண்டோஸ், டில்ட் அட்ஜெஸ்ட் ஸ்டீயரிங் வீல், ஓட்டுனர் இருக்கை உயரத்தை கூட்டி குறைக்கும் வசதி ஆகியவையும் உள்ளன.

 புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... வேற லெவல் மாற்றங்கள்

பக்கெட் இருக்கைகள்

புதிய தார் எஸ்யூவியில் முக்கிய அம்சமாக ஹார்டு டாப் எனப்படும் நிரந்தரமாக மூடிய கூரை அமைப்பு மற்றும் திறந்து மூடும் கன்வெர்ட்டிபிள் வகை கூரை கொண்டதாக வருகிறது. தண்ணீர் மூலமாக கழுவி சுத்தம் செய்யும் விசேஷ இருக்கைகளையும், உட்புற அம்சங்களையும் புதிய தார் பெற்றிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் பக்கெட் வகை உயர்தர இருக்கைகளும் வாடிக்கையாளர்களை கவரும்.

 புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... வேற லெவல் மாற்றங்கள்

ஆஃப்ரோடு அம்சங்கள்

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி 226 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் பெற்றிருக்கிறது. நகரச் சாலை, நெடுஞ்சாலை அல்லது கரடுமுரடான சாலை என எந்தவொரு சாலை நிலைகளையும் அனாயசமாக கடந்து செல்லும் தகவமைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... வேற லெவல் மாற்றங்கள்

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி முன்புறத்தில் 42 டிகிரி அப்ரோச் ஆங்கிள் மற்றும் 37 டிகிரி கோண டிபார்ச்சர் ஆங்கிள் பெற்றிருப்பதும் எந்தவொரு செங்குத்தான் அல்லது பள்ளமான சாலைகளையும் எளிதாக ஏறி, இறங்க வழிவகுக்கும். 650 மிமீ ஆழத்திற்கு நீர் நிலைகளில் கடந்து செல்லும் வாய்ப்பை வழங்கும்.

 புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் முன்புறத்தில் இன்டிபென்டென்ட் வகை சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மல்டி லிங்க் வகை சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 18 அங்குல சக்கரங்களுடன் ஆல் டெர்ரெயின் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்

ஆஃப்ரோடு பயன்பாட்டின்போது சேறு, சகதி, தண்ணீர் உள்ளே புகும் வாய்ப்பு இருப்பதால், விசேஷ தடுப்பு வசதியுடன் கூடிய சுவிட்சுகள் இருப்பதுடன், ஸ்பீக்கர்கள் உட்புற கூரையில் பொருத்தப்பட்டு இருப்பதும் கவனிக்கத்தக்க விஷயமாக கூறலாம்.

புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்

எஞ்சின் தேர்வுகள்

மஹிந்திரா தார் எஸ்யூவியில் டீசல் எஞ்சின் தவிர்த்து, பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வர இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மஹிந்திரா தார் எஸ்யூவியில் வழங்கப்படும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 130 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்

கியர்பாக்ஸ் தேர்வுகள்

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளது. அத்துடன், லோ ரேஷியோ கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், கார் கவிழும் நிலை குறித்து எச்சரிக்கும் வசதியுடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், மலைச்சாலைகளிலும், செங்குத்தான சாலையில் ஆஃப்ரோடு சாகசத்தின்போது கார் பின்னோக்கி நகர்வதை தடுக்கும் ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்

வண்ணத் தேர்வுகள்

புதிய தார் எஸ்யூவி ரெட் ரேஜ், மிஸ்டிக் காப்பர், கேலக்ஸி க்ரே, நபோலி பிளாக், ராக்கி பீஜ், அக்வா மரைன் ஆகிய ஆறு வண்ணத் தேர்வுகளில் புதிய தார் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்

விற்பனைக்கு வரும் தேதி

வரும் அக்டோபர் 2ந் தேதி மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்தாபகர் தினம் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் 75ம் ஆண்டு நிறைவு தினத்தன்று, புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அன்றையே தினமே விலை அறிவிக்கப்பட்டு, முன்பதிவும் துவங்கப்பட இருக்கிறது.

புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்

மதிப்புமிக்க தேர்வு

பழைய தார் எஸ்யூவியைவிட ஏராளமான புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் வருவதால், விலையும் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனினும், இதுவரை ஆஃப்ரோடு பிரியர்களுக்கானதாக விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா தார் எஸ்யூவி, இனி ஆஃப்ரோடு மற்றும் தினசரி பயன்பாட்டுக்கு உகந்த மாடலாக அட்டகாசமான தேர்வாக வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் என்று கூறலாம்.

Most Read Articles
English summary
Mahindra & Mahindra has unveiled the all-new Thar SUV in the Indian market. The new (2020) Mahindra Thar now comes with a number of updates to its exterior design, revamped interior and a host of features and equipment as well.
Story first published: Saturday, August 15, 2020, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X