2020 மாருதி செலிரியோ கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

புதிய தலைமுறை ஒய்என்சி என தற்போதைக்கு அழைக்கப்பட்டு வரும் 2020 மாருதி செலிரியோ மாடல் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மோட்டாராக்டேன் என்ற செய்தி தளத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 மாருதி செலிரியோ கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

புதிய தலைமுறை செலிரியோ மாடலின் அறிமுகம் பற்றிய தகவல்களை முதன்முறையாக மாருதி நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் வெளியிட்டு இருந்தது. இதனால் இந்த 2020 மாடல் இந்த வருட இறுதியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

2020 மாருதி செலிரியோ கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இந்த நிலையில் தற்போது 2020 செலிரியோவின் மாதிரி சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. அட்வான்ஸான மற்றும் எடை குறைவான ஹர்டெக் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்ற இந்த புதிய தலைமுறை கார் எஸ்யூவி கார்களுக்கு உண்டான அனைத்து பண்புகளையும் பெற்றிருக்கும்.

2020 மாருதி செலிரியோ கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

ஏனெனில் தற்போதைய தலைமுறை செலிரியோ மாடல் தோற்றத்தில் ஹேட்ச்பேக் ஸ்டைலில் உள்ளது. ஆனால் 2020 செலிரியோ மாடல் முழுக்க முழுக்க எஸ்யூவி தோற்றத்தை தான் கொண்டிருக்கும். மேலும் இதன் ப்ளாட்ஃபாரத்தில் தான் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ மாடல்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

2020 மாருதி செலிரியோ கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இதன் காரணமாக புதிய தலைமுறை செலிரியோவில் எல்இடி தரத்தில் டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், ஸ்டைலிஷான அலாய் சக்கரங்கள், எல்இடி டெயில்லைட்கள், பின்புற வைப்பர்கள், சங்கியர் பம்பர்கள், அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களுடன் ஓஆர்விஎம்கள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

2020 மாருதி செலிரியோ கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

அதேபோல் உட்புறத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் டேஸ்போர்டு, ஃபாப்ரிக் இருக்கைகள், கப் ஹோல்டர்கள், ஆட்டோமேட்டிக் ஏசி சில கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் போன்றவை பொருத்தப்பட்டிருக்கலாம்.

2020 மாருதி செலிரியோ கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

பாதுகாப்பிற்கு முன்புறத்தில் இரட்டை காற்றுப்பைகள், பார்க்கிங் கேமிரா அசிஸ்ட், ஸ்பீடு சென்சார், சீட்பெல்ட்கள், ஏபிஎஸ், இபிடி உள்ளிட்டவை பொருத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது. தற்போதைய செலிரியோவில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது.

2020 மாருதி செலிரியோ கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

இதே என்ஜின் தான் புதிய தலைமுறை செலிரியோ மாடலிலும் வழங்கப்படவுள்ளது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் இணைக்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 67 பிஎச்பி மற்றும் 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த பெட்ரோல் என்ஜின் உடன் சிஎன்ஜி தேர்வும் இந்த 2020 மாடலுக்கு வழங்கப்படலாம்.

2020 மாருதி செலிரியோ கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

ஏனெனில் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் அனைத்து சிறிய ரக கார்களுக்கும் சிஎன்ஜி என்ஜின் தேர்வை வழங்க திட்டமிட்டுள்ளது. முதன்முதலாக பிரபலமான 800சிசி டீசல் என்ஜின் உடன் விற்பனைக்கு வந்த செலிரியோவில் தற்போதைக்கு டீசல் என்ஜின் தேர்வு வழங்குவது போல் தெரியவில்லை. செலிரியோ மாடலை முதன்முதலாக 2014ல் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

2020 மாருதி செலிரியோ கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...

அதனை தொடர்ந்து தற்போது இதற்கு புதிய தலைமுறை அப்கிரேட் வழங்கப்படுவது மாருதி நிறுவனத்திற்கு பெரிய அளவில் உதவியாக இருக்காது. ஏனெனில் வாடிக்கையாளர்கள் தற்சமயம் கொரோனா வைரஸின் பயத்தால் சிறிய ரக கார்களை வாங்கவே விரும்புகின்றனர். தற்போதைய செலிரியோ காரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.4.46 லட்சத்தில் இருந்து ரூ.5.73 லட்சம் வரையில் உள்ளது.

Most Read Articles
English summary
2020 Maruti Celerio New Gen YNC Spied First Time – Launch This Year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X