2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு... சொகுசு அம்சங்களில் வேற லெவல்!

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் படங்கள், தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு... சொகுசு அம்சங்களில் வேற லெவல்!

உலகின் அதிசிறந்த சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர் தேர்வில் முதன்மையான மாடலாகவும் உள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அடுத்த தலைமுறை அம்சங்களுடன் 2021 மாடலாக புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் (W223) வெளியிடப்பட்டுள்ளது.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு... சொகுசு அம்சங்களில் வேற லெவல்!

மெர்சிடிஸ் பென்ஸ் எம்ஆர்ஏ என்ற இரண்டாம் தலைமுறை கட்டமைப்புக் கொள்கையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது விற்பனையில் உள்ள எஸ் க்ளாஸ் கார் மாடலைவிட இந்த புதிய மாடல் நீளத்தில் 34 மிமீ வரையிலும், அகலத்தில் 22 மிமீ வரையிலும், உயரத்தில் 12 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு... சொகுசு அம்சங்களில் வேற லெவல்!

மேலும், வீல் பேஸ் நீளம் 51 மிமீ வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புறத்தில் மிக விசாலமான இடவசதியை இந்த கார் பெற்றிருக்கிறது. குறிப்பாக, பின் வரிசை இருக்கையில் அமரும் பயணிகளுக்கு கூடுதலாக 24 மிமீ வரையிலான லெக் ரூம் இடவசதியை பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த காரில் 550 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு... சொகுசு அம்சங்களில் வேற லெவல்!

புதிய மாடலானது மிக நீளமான பானட் அமைப்பு, கூபே ரக கார்கள் போன்ற பின்புறம் தாழ்ந்து செல்லும் கூரை அமைப்பு, 18 அங்குலம் முதல் 21 அங்குலம் வரையிலான அளவுகளில் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு... சொகுசு அம்சங்களில் வேற லெவல்!

இன்டீரியர் டிசைனும் வேற லெவலுக்கு மாறி இருக்கிறது. நவீன யுகத்தை பிரதிபலிக்கும் வகையிலான டேஷ்போர்டு அமைப்பு, 12.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை மிக முக்கிய அம்சங்களாக உள்ளன.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு... சொகுசு அம்சங்களில் வேற லெவல்!

இந்த காரில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 30 ஸ்பீக்கர்கள் கொண்ட பர்ம்ஸ்டெர் 4டி ஆடியோ சிஸ்டம், 263 எல்இடி பல்புகளுடன் ஆக்டிவ் ஆம்பியன் லைட் சிஸ்டம், எம்பியூஎக்ஸ் செயலியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 27 மொழிகளை உணர்ந்து செயல்படும் வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம், கெஸ்ச்சர் கன்ட்ரோல் வசதியுடன் சன்ரூஃப், விரல் ரேகை, முகத்தை வைத்து ஓட்டுனரை அடையாளம் கண்டு அனுமதிக்கும் வசதிகள் உள்ளன.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு... சொகுசு அம்சங்களில் வேற லெவல்!

இந்த காரின் எஸ்450 மாடலில் 3.0 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 362 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். அடுத்து எஸ்500 மாடலானது 429 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த காரில் வழங்கப்பட உள்ள 2.9 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு விதமான தேர்வுகளில் கிடைக்கும். எஸ்350 மாடலானது 282 பிஎச்பி பவரையும், எஸ்400டீ மாடலானது 325 பிஎச்பி பவரையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு... சொகுசு அம்சங்களில் வேற லெவல்!

எஸ்580 மாடலில் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 500 பிஎச்பி பவரை வழங்கும். எஸ்580இ மாடலில் இருக்கும் 3.0 லிட்ட் பெட்ரோல் எஞ்சின் 510 பிஎச்பி பவரை வழங்கும். இந்த ஹைப்ரிட் மாடலானLு எலெக்ட்ரிக் மோடில் மட்டும் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு... சொகுசு அம்சங்களில் வேற லெவல்!

புதிய எஸ் க்ளாஸ் காரில் ரியர் ஆக்சில் ஸ்டீயரிங் மற்றும் ஏர் சஸ்பென்ஷன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், இ-ஆக்டிவ் பாடி கன்ட்ரோல் சஸ்பென்ஷன் இடம்பெற்றிருக்கிறது. முன்னால் இருக்கும் பள்ளம் மேடுகளை ரேடார் உதவியுடன் கண்டறிந்து, அதற்கு தக்கவாறு காரின் க்ரவுண்ட் கிளியரன்ஸை 80 மிமீ வரை அதிகரித்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வெளியீடு... சொகுசு அம்சங்களில் வேற லெவல்!

இந்த காரில் லெவல் 3 ஆட்டோனாமஸ் டிரைவிங் எனப்படும் தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பம் கொடுக்கப்பட உள்ளது. நெடுஞ்சாலைகளில் 60 கிமீ வேகம் வரை தானியங்கி முறையில் செல்லும் வாய்ப்பை இந்த கார் வழங்கும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Mercedes-Benz has unveiled the new generation S-Class (W223) car and it is expected to launch in global markets early next year.
Story first published: Thursday, September 3, 2020, 10:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X