புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

சொகுசு எஸ்யூவி கார் மார்க்கெட்டில் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பல்வேறு சிறப்புகளுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் இரண்டாம் தலைமுறை எவோக் கார் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில், எஸ் மற்றும் ஆர் டைனமிக் எஸ்இ என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ரேஞ்ச்ரோவர் வெலர் காரின் டிசைன் அம்சங்களுடன் இந்த கார் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய க்ரில் அமைப்பு, ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட், பனோரமிக் சன்ரூஃப், 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவற்றுடன் கூடுதல் வசீகரமாக மாறி இருக்கிறது.

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் 2 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், லெதர் சீட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் தொழில்நுட்பம், 2 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை பேஸ் வேரியண்ட்டிலேயே வழங்கப்படுகிறது.

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் செய்யும். நேவிகேஷன், ஜேஎல்ஆர் கனெக்ட் புரோ கனெக்ட்டிவிட்டி செயலி ஆகியவை உள்ளன. 10 அங்குல திரையுடன் கூடிய கட்டுப்பாட்டு திரை உள்ளது.

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ரேஞ்ச்ரோவர் எவோக் ஆர் டைனமிக் எஸ்இ டாப் வேரியண்ட்டில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 380W மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கீ லெஸ் என்ட்ரி ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன.

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் முக்கிய மாற்றமாக, பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வந்துள்ளது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ எஞ்சின் அதிகபட்சமாக 249 எச்பி பவரை வழங்கும். இந்த எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டதாக இருக்கிறது.

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 180 எச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின்களுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் கார் ஃபியூஜி ஒயிட், ஃபைரென்ஸ் ரெட், சான்டோரினி பிளாக், கைகவ்ரா ஸ்டோன், ஐகெர் க்ரே, சிலிக்கான் சில்வர் ஆகிய ஆறு விதமான வண்ணத் தேர்வுகளில் இந்த கார் கிடைக்கும்.

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பெடஸ்ட்ரியன் ஏர்பேக், எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட், ஹில் அசென்ட் மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ரியர் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் ரூ.54.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆடி க்யூ5, வால்வோ எக்ஸ்சி60, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஆகிய சொகுசு எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
British luxury SUV maker, Land Rover has launched second generation Range Rover Evoque In India and Prices Starting at ₹ 54.94 Lakh.
Story first published: Thursday, January 30, 2020, 14:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X