புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரஷ்யாவில் அறிமுகம்!

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் முதலாவதாக ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் படங்கள், கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரஷ்யாவில் அறிமுகம்!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. மேலும், உறுதியான கட்டுமானம், சிறந்த டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகள் இந்த காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டத்தை தக்க வைத்து வருகிறது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரஷ்யாவில் அறிமுகம்!

இந்த நிலையில், இந்த சந்தையில் கடும் போட்டி நிலவுவதால், வென்ட்டோ காரை மேம்படுத்தப்பட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு புதிய தலைமுறை மாடலாக வென்ட்டோ கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரஷ்யாவில் அறிமுகம்!

அண்மையில் இந்த காரின் அதிகாரப்பூர்வ ஸ்கெட்ச் படங்கள் வெளியானது. இந்த நிலையில், முதல்முறையாக புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரஷ்யாவில் அறிமுகம்!

ரஷ்யாவில் ஃபோக்ஸ்வேகன் போலோ செடான் என்ற பெயரில் இந்த கார் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் வென்ட்டோ பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யாவில் வெளியிடப்பட்டு இருக்கும் இதே மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதில் சந்தேகம் இருந்தாலும், பல மாற்றங்களுடன் இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரஷ்யாவில் அறிமுகம்!

இந்த மாடலின் டிசைன் மிகச் சிறப்பாக மாறி இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா காரின் முகப்பு டிசைன் அம்சங்கள் இந்த புதிய வென்ட்டோ காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பின்புற டிசைன் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கிறது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரஷ்யாவில் அறிமுகம்!

தற்போதைய வென்ட்டோ காரைவிட புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ செடான் (வென்ட்டோ) கார் நீளத்தில் 93 மிமீ கூடுதலாகவும், அகலத்தில் 7 மிமீ கூடியிருக்கிறது. உயரமும், 17 மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 550 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் உள்ளது. 90 லிட்டர் கூடுதலாக இருக்கிறது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரஷ்யாவில் அறிமுகம்!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், வலிமையான பம்பர் அமைப்பு, அகலமான ஏர் டேம் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும். ஆனால், தற்போதைய வென்ட்டோ காரின் சில அம்சங்கள் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரஷ்யாவில் அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் 8.0 அங்குலம் அளவுடைய தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். 10.25 அங்குல திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரஷ்யாவில் அறிமுகம்!

தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், பிரிமீயம் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி, பிரிமீயம் இருக்கைகளுடன் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரஷ்யாவில் அறிமுகம்!

ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 89 பிஎச்பி மற்றும் 108 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் இரண்டு தேர்வுகளில் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரஷ்யாவில் அறிமுகம்!

இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும், சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் வழங்கப்படும். இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட தரத்தில் இருக்கும்.

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரஷ்யாவில் அறிமுகம்!

அடுத்த ஆண்டு புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ரூ.9 லட்சம் முதல் ரூ.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
German car maker, Volkswagen has officially revealed the next-generation Polo sedan (Vento) in Russia. The new Vento is expected to arrive in India by sometime next year.
Story first published: Saturday, February 29, 2020, 12:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X