Just In
- 2 hrs ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 15 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரு வழியாக வெண்டோ செடானின் புதிய தலைமுறை மாடலை அறிமுகம் செய்ய போகிறது ஃபோக்ஸ்வேகன்... முக்கிய தகவல்கள்
அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வெண்டோ செடான் குறித்த முக்கிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் வெண்டோ கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகி விட்டது. ஆனால் இந்த செடான், பெரிதாக எந்தவொரு மாற்றத்தையும் பெறாமல் கிட்டத்தட்ட அப்படியேதான் உள்ளது. எனவே வெண்டோ காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

அனேகமாக அடுத்த ஆண்டு இறுதியில் புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வெண்டோ இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாம். இந்த செய்தியை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை என்றாலும் கூட, வெண்டோ காரின் புதிய தலைமுறை மாடல் குறித்து ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தற்போதைய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வெண்டோ கார், ஸ்கோடா ரேபிட் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே PQ25 பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வெண்டோ, MQB A0 IN என்ற புத்தம் புதிய பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளது.

மேலும் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ காரின் டிசைனிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. இந்த செடான் இந்திய சந்தைக்கு வந்ததில் இருந்து, டிசைனில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் கொண்டு வரப்பட்டதில்லை. தற்காலிகமான டிசைன் மாற்றங்களுடன் மட்டும் தொடர்ந்து விற்பனையில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக தற்போதைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வெண்டோ காரின் டிசைன் முழுவதுமாக மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வெண்டோ காரில், ஆம்பியண்ட் லைட்டிங், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியுடன் பெரிய டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் கனெக்டட் கார் தொழில்நுட்பமும் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பை பொறுத்தவரை, ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா, இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் ஆகிய வசதிகள் வழங்கப்படலாம். இதுதவிர இன்னும் ஒரு சில புதிய பாதுகாப்பு வசதிகளும் கூடுதலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஜினை பொறுத்தவரையில், ஃபோக்ஸ்வேகன் வெண்டோ காரில் தற்போது வழங்கப்பட்டு வரும் அதே 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் டிஎஸ்ஐ யூனிட்தான் புதிய தலைமுறை மாடலிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வெண்டோ காரை தற்போதைய நிலையில், 8.93 லட்ச ரூபாய் முதல் 13.39 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்து வருகிறது. இவை இரண்டும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் ஏராளமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளதால், புதிய தலைமுறை மாடலின் விலை உயரலாம்.