மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்!! வால்வோ வெளியிட்டது

இந்திய சந்தைக்கான மூன்றாம் தலைமுறை வால்வோ எஸ்60 செடான் காரை பற்றிய விபரங்கள் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்!! வால்வோ வெளியிட்டது

வால்வோவின் இந்த புதிய இந்திய அறிமுகம் 2021ஆம் ஆண்டிற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த 2020ஆம் வருடத்தில் இந்த எஸ்60 செடான் கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவினால் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகியுள்ளது.

மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்!! வால்வோ வெளியிட்டது

இந்திய சந்தையில் தனது கால் தடத்தை வலுவாக பதிக்கும் என இந்த கார் மீது வால்வோ நிறுவனம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த காரை பற்றிய விபரங்களில் வால்வோ எஸ்60 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்!! வால்வோ வெளியிட்டது

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த செடான் காரின் நீளம் 4761மிமீ, அகலம் 2040மிமீ, உயரம் 1431மிமீ மற்றும் வீல்பேஸ் 2872மிமீ ஆகும்.

மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்!! வால்வோ வெளியிட்டது

காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் மிக நீண்ட வரிசையை கொண்டவைகளாக உள்ளன. இதில் போன் சார்ஜர், ஹார்மன் கொர்டன் மியூசிக் சிஸ்டம், க்ளீன்ஜோன் தொழிற்நுட்பம் உள்ளிட்டவை அடங்குகின்றன. க்ளீன்ஜோன் தொழிற்நுட்பமானது கேபின் காற்று சுத்திகரிப்பானாக வழங்கப்பட்டுள்ளது.

மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்!! வால்வோ வெளியிட்டது

இது உட்புற பாகங்களில் இருந்து வெளிவரும் துகள்கள், தூசி மற்றும் பிற எரிச்சலூட்டும் வாசனைகளில் இருந்து கேபினை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். கார் 50kmph வேகத்திற்கு மேல் சென்றால் பாதசாரிகள் மற்றும் சைக்கிளில் செல்வோரை அடையாளம் கண்டு அவர்களை மோதுவதுபோல் சென்றால் ஓட்டுனருக்கு எச்சரிக்கும் வசதி வால்வோ எஸ்60 காரில் உள்ளது.

மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்!! வால்வோ வெளியிட்டது

இதுமட்டுமின்றி 60kmph வேகத்திற்கு மேல் சென்றால் இயங்கும் பாதையை தொடர்ந்து ஒரே மாதிரி கடைப்பிடித்து செல்ல உதவும் லேன்-கீப்பிங் உதவி, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், காருக்கு பின்னால் ஆள் இருப்பதை ஓட்டுனருக்கு எச்சரிக்கை அலாரம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இந்த வால்வோ காரில் வழங்கப்பட்டுள்ளன.

மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்!! வால்வோ வெளியிட்டது

புதிய வால்வோ எஸ்60 காருக்கான முன்பதிவுகள் வருகிற ஜனவரி 21ஆம் தேதி முதல் துவங்கவுள்ளன. அதனை தொடர்ந்து டெலிவிரி பணிகள் மார்ச் 21-ல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியாவில் இந்த வால்வோ காருக்கு போட்டியாக மெர்சிடிஸ் சி-கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் உள்ளிட்ட செடான் கார்கள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Third-generation Volvo S60 unveiled in India, bookings to start January 21
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X