விவசாயிங்க ஹேப்பி அண்ணாச்சி! இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல! செம்மைய இருக்கு

இதுவரை எந்தவொரு நிறுவனமும் வெளியிடா ஓர் அறிவிப்பை விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில் நியூ ஹாலண்ட் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விவசாயிங்க ஹேப்பி அண்ணாச்சி... இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல... செம்மைய இருக்கு!

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு விவசாயம் சார்ந்த எந்திரங்களை இந்தியாவில் விற்பனைச் செய்யும் நிறுவனம் நியூ ஹாலேண்ட் அக்ரிகல்சர். இந்நிறுவனமே, இந்திய விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் ஓர் தரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆம், இந்நிறுவனத்தின் புதிய டிராக்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை எந்தவொரு நிறுவனமும் வழங்க சிறப்பு சேவையை வழங்க இருப்பதாக அது அறிவித்துள்ளது.

விவாசியிங்க ஹேப்பி அண்ணாச்சி... இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல... செம்மைய இருக்கு!

அதாவது, புதிய டிராக்டர்களுக்கு 6 வருடங்கள் மாற்றத்தக்க உத்தரவாதத்தை வழங்க இருப்பதாக அது அறிவித்துள்ளது. இது, நியூ ஹாலண்டின் அனைத்து தயாரிப்புகளுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. 6 வருடங்கள் / 6,000 மணி நேரங்கள் எனும் வாரண்டி திட்டத்தை அது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் அக்டோபர் 2ம் தேதியில் இருந்து செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.

விவாசியிங்க ஹேப்பி அண்ணாச்சி... இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல... செம்மைய இருக்கு!

ஆகையால், கடந்த 2ம் தேதியில் இருந்து நியூ ஹாலண்டின் டிராக்டர்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். மேலும், டிராக்டரை வேறு யாருக்காவது விற்பனைச் செய்தாலும் இந்த திட்டத்தை அவருக்கும் மாற்ற முடியும். ஆகையால், இரண்டாம் உரிமையாளராலும் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

விவாசியிங்க ஹேப்பி அண்ணாச்சி... இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல... செம்மைய இருக்கு!

இந்நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவரும், நிர்வாக இயக்குனருமான ரவுணக் வர்மா, இந்த நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். ஆகையால், இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தற்போது மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். விற்பனையை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவை நியூ ஹாலண்ட் வெளியிட்டுள்ளது.

விவாசியிங்க ஹேப்பி அண்ணாச்சி... இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல... செம்மைய இருக்கு!

அதேநேரத்தில், தங்களின் தயாரிப்புகளின் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் முயற்சியிலும் இந்த அதிகபட்ச வாரண்டி பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. தற்போது, இந்நிறுவனம் இந்தியாவில் 5 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கின்றது. இவர்களின் பயன்பாட்டிற்காக 1,000 வாடிக்கையாளர்கள் டச் பாயிண்டுகளை செயல்படுத்தி வருகின்றது.

விவாசியிங்க ஹேப்பி அண்ணாச்சி... இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல... செம்மைய இருக்கு!

இதுதவிர இதன் உற்பத்தி ஆலை நொய்டாவில் அமைந்துள்ளது. மேலும், இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு செயல்பாட்டை இந்த நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்டு வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே நாட்டிலேயே முதல் முறையாக எந்தவொரு நிறுவனமும் அறிவித்திராத 6 வருடங்கள்/6,000 மணி நேரங்கள் உத்தரவாதம் பற்றிய அறிவிப்பை நியூ ஹாலண்ட் வெளியிட்டுள்ளது.

விவாசியிங்க ஹேப்பி அண்ணாச்சி... இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல... செம்மைய இருக்கு!

நாட்டில் அதிகம் விற்பனையாகும் டிராக்டர்களில் மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளே முதல் இடத்தில் இருக்கின்றது. இதில், ஆறாவது இடத்தைத்தான் நியூ ஹாலண்ட் பிடித்திருக்கின்றது. கடந்த செப்டம்பர் மாத விற்பனையின்படி, இந்நிறுவனம் இந்தியாவில் 28.81 விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் நடப்பாண்டு செப்டம்பரில் 962 யூனிட்டுகளைக் கூடுதலாக விற்பனைச் செய்திருக்கின்றது.

விவாசியிங்க ஹேப்பி அண்ணாச்சி... இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல... செம்மைய இருக்கு!

ஒட்டுமொத்தமாக 4,301 யூனிட்டுகளை இது விற்பனைச் செய்திருக்கின்றது. இந்த நிலையை உயர்த்தும் நோக்கிலேயே நியூ ஹாலண்ட் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், நாட்டின் பிற முன்னணி டிராக்டர் விற்பனையாளர்களான மஹிந்திரா, டேஃப், சொனாலிகா எஸ்கார்ட்ஸ் மற்றும் ஜான் டீர் ஆகிய நிறுவனங்களுக்கு இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது.

விவாசியிங்க ஹேப்பி அண்ணாச்சி... இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல... செம்மைய இருக்கு!

நியூ ஹாலண்ட் நிறுவனம் இந்தியாவில் பன்முக பயன்கொண்ட விவசாயம் சார்ந்த வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், நெல் விதைப்பதற்கு முன்பு தேவைப்படும் வாகனத்தில் இருந்து அதை அறுவடைச் செய்தவற்கான தேவைப்படும் வாகனங்கள் வரையிலான அனைத்து விதமான விவசாய எந்திரங்களை இது விற்பனைச் செய்து வருகின்றது.

விவாசியிங்க ஹேப்பி அண்ணாச்சி... இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல... செம்மைய இருக்கு!

இதன் டிராக்டர்கள் 35 எச்பி திறன் முதல் 90 எச்பி திறன் வரையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுதவிர, வைக்கோல், தீவன உபகரணங்கள், தோட்டத்தை பராமரிக்கும் எந்திரங்கள், தானாக பூச்சிக் கொள்ளி மருந்தை தெளிக்கும் எந்திரம் மற்றும் திராட்சையை அறுவடைச் செய்யும் உபகரணம் என பன்முக கருவிகளை இது விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

விவாசியிங்க ஹேப்பி அண்ணாச்சி... இப்படி ஒரு அறிவிப்பு இதுக்கு முன்னாடி யாருமே வெளியிடல... செம்மைய இருக்கு!

இந்த இயந்திரங்கள் ஒவ்வொன்றும் சமீபத்திய தொழில்நுட்பம், அதிக சக்திவாய்ந்தவை மற்றும் சிறந்த எரிபொருள் திறன் கொண்டலவையாக காட்சியளிக்கின்றன. இதுதவிர, இவர்கள் விற்பனைச் செய்யும் வாகனத்தை எப்படி பயன்படுத்தினால் சிறப்பான அனுபவம் மற்றும் நல்ல பயன்களைப் பெற முடியும் என்பதற்கான சிறந்த பயிற்சியையும் நியூ ஹாலண்ட் நிறுவனமே வழங்குகின்றது. இத்துடன், விற்பனைக்கு பிந்தையை சேவையையும் மிக சிறப்பாக இது வழங்குவதாக கூறகின்றது.

Most Read Articles
English summary
New Holland Announced 6 Year Transferable Warranty For Entire Tractor Range. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X