2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

ஹோண்டா நிறுவனம் சிட்டி செடான் மாடலை முதன்முதலாக கடந்த 1998ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த வகையில் 20 ஆண்டுகளை கடந்து சந்தையில் விற்பனையில் உள்ள இந்த செடான் காரின் நான்காம் தலைமுறை நீண்ட வருடங்களாக சந்தைப்படுத்தப்பட்டு வரும் மாடல்களில் ஒன்றாகும்.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

இந்த நிலையில் ஹோண்டா இதன் ஐந்தாம் தலைமுறை காரை இந்த வருட துவக்கத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனாவினால் இதன் அறிமுகம் தாமதமாகியுள்ளது. இதற்கிடையில் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி காரை ட்ரைவ் செய்யும் வாய்ப்பு நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு கிடைத்துள்ளது. இதன்படி இந்த புதிய காரை பற்றிய முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

டிசைன் & ஸ்டைல்

முதல் பார்வையிலேயே புதிய சிட்டி மாடல் தற்போதைய தலைமுறை காருடன் ஒப்பிடும்போது தோற்றத்தை பெரியளவில் எந்த மாற்றமும் இல்லாமல் தான் ஏற்றுள்ளதை அறிய முடிகிறது. 4,549மிமீ நீளம் கொண்டதாக உள்ள புதிய சிட்டி செடான் காரின் அகலம் 1,748மிமீ ஆகவும், உயரம் 1,489மிமீ ஆகவும், வீல்பேஸ் 2,600மிமீ ஆகவும் உள்ளது.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

இதில் வீல்பேஸ் வழக்கமான அளவில் இருந்தாலும், புதிய சிட்டி கார் தற்போதைய நான்காம் தலைமுறை காரை காட்டிலும் கூடுதலான நீளம் மற்றும் அகலத்தை பெற்றுள்ளது. புதிய தலைமுறை சிட்டி காரின் முன்புறத்தில் முழு-எல்இடி ஹெட்லேம்ப்கள் (தொடர்ச்சியாக 9 விளக்குகள் உள்ளன), எல்இடி டிஆர்எல் மற்றும் L-வடிவிலான டர்ன் சிக்னல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

பொதுவாக டிஆர்எல்கள் டைனாமிக் இண்டிகேட்டர்களாக தான் பெரும்பான்மையான கார்களில் இருக்கும். ஆனால் புதிய சிட்டியில், டிஆர்எல்கள் ஹெட்லைட்டிற்கு மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. ஹெட்லைட் யூனிட்டின் கீழேயுள்ள மீதி பகுதி எல்இடி இண்டிகேட்டர்களை கொண்டுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

தனித்தனியாக செயல்படக்கூடிய இவற்றில் ஹெட்லைட் யூனிட் உண்மையில் அட்டகாசமாக உள்ளது. அப்படியே காரின் பக்கவாட்டிற்கு வந்தால், 16-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் கவர்ந்திழுக்கின்றன. ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்புடன் உள்ள இந்த அலாய் சக்கரங்கள் நான்காம் தலைமுறை காரில் இருப்பதை விடவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

இவற்றுடன் ஹெட்லைட்டில் இருந்து பின்புற டெயில்லைட் வரையில் பக்கவாட்டு வழியாக செல்லக்கூடிய ஷோல்டர் லைன்கள் மற்றும் க்ரீஸ்களும் வழங்கப்பட்டுள்ளன. புதிய தலைமுறை கார் என்பதை உணர்த்தும் விதமாக காரை சுற்றிலும் குறிப்பிடத்தக்க இடங்களில் க்ரோம் உள்ளதை பார்க்க முடிகிறது.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

புதிய சிட்டி பேட்ஜ் காரின் பின்பக்கத்தில் இடபுறத்திலும் அதற்கு வலப்புறமாக வேரியண்ட்டிற்கான பேட்ஜும் பொருத்தப்பட்டுள்ளது. பார்க்கிங் சென்சார் உடன் உள்ள ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா அவ்வளவு அற்புதமானதாக கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

உட்புற அம்சங்கள்

உட்புறத்தை பார்த்தோமேயானல் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. ட்யூல்-டோனில் உள்ள இதன் டேஸ்போர்டில் செமி-டிஜிட்டலில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், அனலாக் ஆக ஸ்பீடோமீட்டர், டிஜிட்டலாக டச்சோமீட்டர் உள்ளிட்டவை உள்ளன. இவை மட்டுமின்றி பிரிவில் முதல் ஆளாக புதிய சிட்டி கார் கார்னரிங் விசையை அளவிடும் ஜி-மீட்டரை டச்சோவின் மையத்தில் கொண்டுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

இவற்றுடன் லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே & அலெக்ஸாவுடன் இணைக்கக்கூடியதாக 8-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவற்றை கொண்ட கேபின் ஆனது சில கருப்பு நிற பாகங்களுடன் அலுமினியம் மற்றும் க்ரோம்-ஐ கொண்ட கதவு ஹோண்டில்களை பெற்றுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக உள்ள முன்புற இருக்கைகளுடன் சவுகரியமான பயணத்திற்காக அனைத்து இருக்கைகளும் மிகவும் சிறப்பான தோற்றத்தில் உள்ளன. பின் இருக்கை வரிசையில் சவுகரியமாக இரண்டு நபர்களும் அதிகப்பட்சமாக மூன்று நபர்கள் வரையில் அமர முடியும்.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

என்ஜின் அமைப்பு & மைலேஜ்

புதிய ஹோண்டா சிட்டி பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இதன் பெட்ரோல் வேரியண்ட்டில் பொருத்தப்படவுள்ள 1.5 லிட்டர் ஐ-விடிஇசி (டிஒஎச்சி) என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 145 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

இதன் பெட்ரோல் வேரியண்ட்டில் 7-ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸை ட்ரான்ஸ்மிஷனிற்காக பெறலாம். ஹோண்டா நிறுவனம் புதிய சிட்டி காரின் என்விஎச் நிலைகளில் கவனமாக செயல்பட்டுள்ளதால் பெட்ரோல் என்ஜினில் இருந்து வெளிவரும் இறைச்சல் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

அதேநேரம் சிறப்பான எரிபொருள் திறனிற்காக இசிஒ மோட்-ஐ இந்த பெட்ரோல் வேரியண்ட் பெற்றிருந்தாலும் மைலேஜில் எந்த மாற்றமும் இல்லை. 17-ல் இருந்து 18 kmpl வரையிலான மைலேஜ்ஜை சிட்டி பெட்ரோல் சிவிடி மாடலில் இருந்து பெற முடியும்.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

டீசல் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் ஐ-விடிஇசி என்ஜின் வழங்கப்படவுள்ளது. மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த டீசல் என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை பெற முடியும். பெட்ரோல் என்ஜினை காட்டிலும் அதிக டார்க் திறனை வெளிப்படுத்துவதால் டீசல் வேரியண்ட் வலிமையான மிட்-ரேஞ்ச் காராக விளங்கும்.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

ஆனால் பெட்ரோல் வேரியண்ட்கள் உடன் ஒப்பிடும்போது டீசல் கார்களில் இறைச்சல் சற்று அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முன்பே கூறியதுபோல் என்விஎச் நிலைகளில் வேலைப்பாடுகள் நடந்திருந்தாலும் சிட்டி காரின் டீசல் என்ஜினில் இருந்து சத்தம் வெளிவருவதை தவிர்க்க இயலாது.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

எங்களிடம் மிகவும் குறைவான நேரமே இருந்ததினால் டீசல் வேரியண்ட்டின் மைலேஜ் அளவை கணக்கிட முடியவில்லை. தயாரிப்பு நிறுவனம் சிட்டி கார் டீசல் என்ஜின் 24kmpl மைலேஜ்ஜை வழங்கும் என கூறியுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

பயணிகளின் பாதுகாப்பிற்கான அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த காருக்கு ஹோண்டா எந்த குறையையும் வைக்கவில்லை. இந்த வகையில் ஹேண்ட்லிங் அசிஸ்ட், ஆறு காற்றுப்பைகள், வாகன நிலைப்பாட்டு அசிஸ்ட், டயரின் அழுத்தத்தை அளவிடும் சிஸ்டம் மற்றும் இபிடியுடன் ஏபிஏஸ் உள்ளிட்டவற்றை இந்த 2020 மாடல் பெற்றுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

டெஸ்ட் ட்ரைவ் அடிப்படையில் ட்ரைவ்ஸ்பார்க்கின் கருத்து

ஹோண்டா நிறுவனம் எதிர்பார்த்ததை போல் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடலை அதிகளவில் தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் சிறப்பான தோற்றத்தில் உருவாக்கியுள்ளது. இந்த செடான் காரில் உள்ள குறைகள் என்னென்னவென்று பார்த்தால், என்ஜினின் சத்தம் மற்றும் சாஃப்ட் சஸ்பென்ஷன் தான் நினைவிற்கு வருகின்றன.

2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...

ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் வெண்டோ மற்றும் டொயோட்டா யாரிஸ் மாடல்களுடன் போட்டியினை தொடரவுள்ள சிட்டி மாடலின் இந்த ஐந்தாம் தலைமுறை காரின் விலை ரூ.11.5 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
2020 Honda City Review (First Drive): Initial Impressions, Performance, Specs, Variants & Other Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X