இணையத்தில் லீக்கான 2020 ஹோண்டா சிட்டி மாடலின் உட்புற புகைப்படங்கள்...

ஹோண்டா கார்ஸ் நிறுவனம் புதிய தலைமுறை சிட்டி மாடலை வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய செடான் ரக காரை பற்றிய தகவல்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த வகையில் தற்போது இந்த மாடலின் விலை குறைவான வேரியண்ட்டின் உட்புற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இணையத்தில் லீக்கான 2020 ஹோண்டா சிட்டி மாடலின் உட்புற புகைப்படங்கள்...

இதன் மூலம் பார்க்கும்போது, தற்சமயம் சந்தையில் விற்பனையாகி கொண்டிருக்கும் மாடலை விட ப்ரீமியமான உட்புறத்தை பெற்றுள்ள இந்த புதிய தலைமுறை காரின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் 2020 சிட்டி மாடலில் சற்று கூடுதலான நீளம் மற்றும் அகலத்தில் உட்புற கேபினை வழங்கியுள்ளது.

இணையத்தில் லீக்கான 2020 ஹோண்டா சிட்டி மாடலின் உட்புற புகைப்படங்கள்...

சந்தையில் மாருதி சுசுகி சியாஸ், ஹூண்டாயின் சமீபத்திய வெர்னா ஃபேஸ்லிஃப்ட், ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் வெண்டோ மற்றும் டொயோட்டா யாரிஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிடவுள்ள இந்த செடான் கார் கவனித்தக்க வகையில் அப்கிரேட்களை பெற்றுள்ளதால் தொடர்ந்து சரிவை கண்டுவரும் செடான் ரக கார்களின் விற்பனையை மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில் லீக்கான 2020 ஹோண்டா சிட்டி மாடலின் உட்புற புகைப்படங்கள்...

புதிய ஹோண்டா சிட்டி மாடலுக்கு பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.5 லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் மற்றும் ஐ-டிடிஇசி டீசல் என வழக்கமான என்ஜின் தேர்வுகள் தான் வழங்கப்படவுள்ளன. அதேபோல் வழக்கமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளை இந்த 2020 மாடலும் பெற்றுள்ளது. இருப்பினும் டீசல் என்ஜினுடன் மட்டும் கூடுதல் தேர்வாக சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளது.

MOST READ: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிரடி... ரகசியமாக உத்தரவு போட்ட தமிழக அரசு... என்னனு தெரியுமா?

இணையத்தில் லீக்கான 2020 ஹோண்டா சிட்டி மாடலின் உட்புற புகைப்படங்கள்...

தற்போது இணையத்தில் கசிந்துள்ள இந்த பிஎஸ்6 செடான் மாடலின் உட்புற புகைப்படங்களின் மூலம் இது 2020 சிட்டி மாடலில் விலை குறைவான வேரியண்ட் என்று அறிய முடிகிறது. இந்த வேரியண்ட் வழக்கமான ஹெட் யூனிட் உடன் இயற்பியலாக ஆப்ரேட் செய்யக்கூடிய பொத்தான்களையும் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தில் கொண்டுள்ளது.

MOST READ: சூப்பர் தல... யாருக்கும் தெரியாமல் அஜீத் செய்த காரியம்! ரகசியம் கசிந்ததால் வாய் பிளக்கும் ரசிகர்கள்

இணையத்தில் லீக்கான 2020 ஹோண்டா சிட்டி மாடலின் உட்புற புகைப்படங்கள்...

இதனுடன் ஏசியை கட்டுப்படுத்துவதற்கு டயல்ஸ் மற்றும் பியானோவின் கருப்பு நிறத்தில் கியர் லிவர் பகுதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதை நம்மால் அறிய முடிகிறது. மற்ற அம்சங்களாக இந்த காரின் உட்புறத்தில் மௌண்டட் கண்ட்ரோல்களுடன் பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் , ஒட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க டிஜிட்டல் திரை, அனலாக் ஸ்பீடோ மற்றும் டக்கோ, சுற்றிலும் சில்வர் நிறத்தில் ஏசி வெண்ட்ஸ் மற்றும் க்ரே நிறத்தில் இருக்கை உள்ளிட்டவை உள்ளன.

இணையத்தில் லீக்கான 2020 ஹோண்டா சிட்டி மாடலின் உட்புற புகைப்படங்கள்...

இவை மட்டுமின்றி விரைவில் சந்தைக்கு வரவுள்ள ஹோண்டா சிட்டி மாடலின் ஐந்தாம் தலைமுறை காரானது அதன் பிரிவில் முதலாவது காராக ஆறு காற்றுப்பைகள், லேன்-ஐ கண்காணிக்க கேமிரா, முழு-எல்இடியில் ஹெட்லேம்ப்கள், அலெக்ஸா ரிமோட் கனெக்ட்டிவிட்டி மற்றும் வாகனத்தின் நிலைத்தன்மையை சமநிலையில் வைக்கும் வசதி மற்றும் சுறுசுறுப்பான ஹேண்ட்லிங் அசிஸ்ட் போன்றவற்றையும் பெற்றுள்ளது.

MOST READ: ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

இணையத்தில் லீக்கான 2020 ஹோண்டா சிட்டி மாடலின் உட்புற புகைப்படங்கள்...

இவை தவிர்த்து 2020 சிட்டி மாடலின் டாப் வேரியண்ட்களில் எலக்ட்ரிக் சன்ரூஃப், சாஃப்ட் பேடிங் உடன் இரு டோன்களில் டேஸ்போர்டு, 20.3செ.மீ தொடுத்திரை, லெதர் இருக்கைகள், டயரின் அழுத்தத்தை அளவிடும் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், L-வடிவிலான டர்ன் இண்டிகேட்டர்கள், Z-வடிவிலான எல்இடி டெயில்லைட்கள், வண்ண நிறங்களில் தேவையான தகவல்களை வழங்கும் டிஎஃப்டி திரை உள்ளிட்டவற்றை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.

MOST READ: பிரபலமான சுசுகி ஜிம்னி காருக்கு வயது 50... இந்த காரில் அப்படி என்ன தான் உள்ளது..?

இணையத்தில் லீக்கான 2020 ஹோண்டா சிட்டி மாடலின் உட்புற புகைப்படங்கள்...

மேலும் ஹோண்டா நிறுவனம் சிட்டி மாடலின் ஹைப்ரீட் வேரியண்ட்டையும் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 2020 சிட்டி மாடலுடன் சில அப்கிரேட்களுடன் புதிய தலைமுறை ஜாஸ் மாடலும் இந்நிறுவனத்தில் இருந்து வரும் வாரங்களில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Gaadiwaadi

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Lower Spec 2020 Honda City Interior Appears On The Internet
Story first published: Thursday, April 23, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X