ஹூண்டாய் வெர்னாவிற்கு போட்டியாக ஹோண்டா சிட்டி ஆர்எஸ் டர்போ பெட்ரோல் அறிமுகம்..? விபரம்..!

இந்தியாவிற்கான ஹோண்டா சிட்டியின் புதிய தலைமுறை மாடலில், ஆர்எஸ் டர்போ பெட்ரோல் வேரியண்ட் களமிறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹூண்டாய் வெர்னாவிற்கு போட்டியாக ஹோண்டா சிட்டி ஆர்எஸ் டர்போ பெட்ரோல் அறிமுகம்..? விபரம்..!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரை வருகின்ற ஜூலை 15ம் தேதி உலகளாவிய அளவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது இந்தியாவிற்கு ஐந்தாம் தலைமுறை காராகும். அதேசமயம் உலகளவில் பார்த்தோமேயானால் ஏழாம் தலைமுறை மாடலாக களமிறங்க இருக்கின்றது.

ஹூண்டாய் வெர்னாவிற்கு போட்டியாக ஹோண்டா சிட்டி ஆர்எஸ் டர்போ பெட்ரோல் அறிமுகம்..? விபரம்..!

இடையில், புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி மாடலை அந்நிறுவனம் களமிறக்க தவறியதே இந்த நிலைக்குக் காரணம். வருகின்ற 15ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்ற இந்த மாடலை கடந்த மார்ச் மாதமே அறிமுகம் செய்ய இருந்தது ஹோண்டா.

ஹூண்டாய் வெர்னாவிற்கு போட்டியாக ஹோண்டா சிட்டி ஆர்எஸ் டர்போ பெட்ரோல் அறிமுகம்..? விபரம்..!

ஆனால், கோவிட் 19 வைரசால் கொண்டு வரப்பட்ட லாக்டவுண் உத்தரவு, புதிய தலைமுறை காரின் அறிமுகத்திற்கு தடை கல்லாய் அமைந்தது. எனவே, அப்போது ஒத்தி வைக்கப்பட்ட அறிமுகம், வருகின்ற 15ம் தேதி அரங்கேற இருக்கின்றது. முன்னதாக இந்த புதிய தலைமுறை ஹோண்டா சிட்டியில் பிஎஸ் பெட்ரோல் தேர்வு மட்டுமே எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஹூண்டாய் வெர்னாவிற்கு போட்டியாக ஹோண்டா சிட்டி ஆர்எஸ் டர்போ பெட்ரோல் அறிமுகம்..? விபரம்..!

ஆனால், இக்காரில் ஐ-விடெக் பெட்ரோல் மற்றும் ஐ-டிடெக் டீசல் தேர்வுகளும் கிடைக்க இருப்பதாக உறுதி வாய்ந்த தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

அதேசமயம், இந்தியாவில் முன்னதாக ஆர்எஸ் டர்போ பெட்ரோல் வேரியண்டே களமிறக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

ஹூண்டாய் வெர்னாவிற்கு போட்டியாக ஹோண்டா சிட்டி ஆர்எஸ் டர்போ பெட்ரோல் அறிமுகம்..? விபரம்..!

இது ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா மாடலுக்கு போட்டியாக இருக்கும். இந்த கூற்றிற்கு ஏற்ப ஸ்டைல் மற்றும் அம்சங்கள் போன்றவற்றில் பன்மடங்கு மாற்றங்களைப் பெற்றிருக்கின்றது புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி. குறிப்பாக, பாதுகாப்பு, பெர்ஃபார்மன்ஸ் மற்றும் சொகுசு ஆகியவற்றில் எண்ணற்ற மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

ஹூண்டாய் வெர்னாவிற்கு போட்டியாக ஹோண்டா சிட்டி ஆர்எஸ் டர்போ பெட்ரோல் அறிமுகம்..? விபரம்..!

எனவே, இந்த கார் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வேகன் வென்டோ, ஸ்கோடா ரேபிட், டொயோட்டா யாரிஸ் மற்றும் மாருதி சுசுகி சியாஸ் உள்ளிட்ட கார்களுக்கும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹூண்டாய் வெர்னாவிற்கு போட்டியாக ஹோண்டா சிட்டி ஆர்எஸ் டர்போ பெட்ரோல் அறிமுகம்..? விபரம்..!

இந்த புதிய தலைமுறை மாடலை ஹோண்டா நிறுவனம் கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற வாகன கண்காட்சியில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்திருந்தது.

ஹூண்டாய் வெர்னாவிற்கு போட்டியாக ஹோண்டா சிட்டி ஆர்எஸ் டர்போ பெட்ரோல் அறிமுகம்..? விபரம்..!

அப்போது, அந்த மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் விடிஇசி, 3 சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இது, அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 120 பிஎச்பி பவரையும், 2000 ஆர்பிஎம்மில் 173 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 7 ஸ்பீடு சிவிடி தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

ஹூண்டாய் வெர்னாவிற்கு போட்டியாக ஹோண்டா சிட்டி ஆர்எஸ் டர்போ பெட்ரோல் அறிமுகம்..? விபரம்..!

இதன் பிஎஸ்-6 மாடலே இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதில் லேசான திறன் மாற்றம் செய்யப்படலாம் என்று யூகிக்கப்படுகின்றது. இத்துடன், இந்தியாவிற்கான புதிய தலைமுறை சிட்டி காரை கூடுதல் கவர்ச்சியாக காட்டும் விதமாக கருப்பு நிற டீடெயில்கள் மற்றும் குரோம் உடற்கூறுகளால் ஹோண்டா அலங்கரிக்க இருக்கின்றது.

ஹூண்டாய் வெர்னாவிற்கு போட்டியாக ஹோண்டா சிட்டி ஆர்எஸ் டர்போ பெட்ரோல் அறிமுகம்..? விபரம்..!

இத்துடன், பாதுகாப்பு அம்சத்திற்காக ஆறு ஏர் பேக்குகளை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், காஸ்மெட்டிக் பேக்கேஜ் மற்றும் மெக்கனிக்கல் சேஞ்ஜஸ்களை கூடுதல் தேர்வாக ஹோண்டா வழங்க இருக்கின்றது. இதுகுறித்த தகவல்களை ஓவர் டிரைவ் எனும் தளம் உறுதிச் செய்துள்ளது.

ஹூண்டாய் வெர்னாவிற்கு போட்டியாக ஹோண்டா சிட்டி ஆர்எஸ் டர்போ பெட்ரோல் அறிமுகம்..? விபரம்..!

இத்தகைய அம்ச மாற்றங்களால் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி ஆர்எஸ் அதன் வரிசையில் டாப் மாடலாக அமர இருக்கின்றது. எனவே, இது ரூ. 75 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை விலையுயர்வைப் பெற்று பிரீமியம் மாடலாக களமிறக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
New Honda City RS With Turbo Petrol Engine India Launch Under Consideration Details. Read In Tamil.
Story first published: Wednesday, July 8, 2020, 16:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X