புதிய ஹோண்டா சிட்டி டாப் வேரியண்ட்டில் அசத்தும் வசதிகள்!

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், அதன் டாப் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் முக்கிய வசதிகள் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய ஹோண்டா சிட்டி டாப் வேரியண்ட்டில் அசத்தும் வசதிகள்!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. சிறந்த பிராண்டு மதிப்புடைய இந்த காருக்கு எப்போதுமே இந்தியர்கள் மத்தியில் தனி மதிப்பு உள்ளது. இந்த நிலையில், புதிய தலைமுறை அம்சங்களுடன் ஹோண்டா சிட்டி கார் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி டாப் வேரியண்ட்டில் அசத்தும் வசதிகள்!

கடந்த ஆண்டு இறுதியில் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கார் இந்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, இதன் இந்திய அறிமுகம் தள்ளிப்போயுள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி டாப் வேரியண்ட்டில் அசத்தும் வசதிகள்!

இந்த நிலையில், அடுத்த மாதம் புதிய ஹோண்டா சிட்டி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்த காரின் விலை உயர்ந்த ZX வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் ஆட்டோகார் இந்தியா தளம் மூலமாக வெளிவந்துள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி டாப் வேரியண்ட்டில் அசத்தும் வசதிகள்!

இந்த காரின் இசட்எக்ஸ் என்ற டாப் வேரியண்ட்டில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, சைடு வியூ மிரரில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, காரினுள் டேஷ்போர்டின் நடுவில் இருக்கும் திரையில் பின்னால் வரும் வாகனங்களை தெளிவாக பார்த்து ஓட்டுனர் தடம் மாறி செல்ல முடியும். இது மிக முக்கிய பாதுகாப்பு விஷயமாக அமையும்.

புதிய ஹோண்டா சிட்டி டாப் வேரியண்ட்டில் அசத்தும் வசதிகள்!

அடுத்து, இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும் வசதி உண்டு.

புதிய ஹோண்டா சிட்டி டாப் வேரியண்ட்டில் அசத்தும் வசதிகள்!

மேலும், கார் கனெக்ட்டிவிட்டி செயலியும் இந்த காரில் இடம்பெறுகிறது. இதன்மூலமாக, கார் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களையும், கட்டுப்பாட்டு வசதிகளையும் ரிமோட் முறையில் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி டாப் வேரியண்ட்டில் அசத்தும் வசதிகள்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் டாக்கோ மீட்டர் மற்றும் கலர் எம்ஐடி திரையும் இடம்பெறுகிறது. இது மிக தெளிவாகவும், கண்ணுக்கு உறுத்தாத வகையிலும் அமையும்.

மேலும், நிஸான் ஜிடி ஆர் போன்று இந்த காரில் ஜி மீட்டர் கொடுக்கப்பட இருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் இடம்பெறும் பட்டன்கள் மூலமாக ஆடியோ சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை கட்டுப்படுத்த இயலும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தை கட்டுப்படுத்துவதற்கு ரோட்டரி நாப் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி டாப் வேரியண்ட்டில் அசத்தும் வசதிகள்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி டாப் வேரியண்ட்டில் அசத்தும் வசதிகள்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் என இரண்டு தேர்வுகளிலும் கிடைக்கும் என தெரிகிறது.

புதிய ஹோண்டா சிட்டி டாப் வேரியண்ட்டில் அசத்தும் வசதிகள்!

ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹோண்டா சிட்டி கார் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட மிட்சைஸ் செடான் கார் மாடல்களுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும் என்று கருதலாம்.

Most Read Articles
English summary
New Honda City ZX (2020) features have been leaked ahead of its expected launch next month. The upcoming Honda City ZX features have been revealed by a leaked brochure image.
Story first published: Monday, April 13, 2020, 12:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X