விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக முழு சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை உருவாக்கும் ஹோண்டா...

ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு மத்தியில் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ போன்ற தற்போதைய பிரபலமான எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக வெளியாகவுள்ள இந்த எஸ்யூவி காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக முழு சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை உருவாக்கும் ஹோண்டா...

இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடல்களுக்கு பெரிய அளவில் தேவை நிலவி வருகிறது. இதன் காரணமாகவே மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ போன்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக முழு சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை உருவாக்கும் ஹோண்டா...

இந்த இரு மாடல்கள் மட்டுமின்றி மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மற்ற எஸ்யூவி மாடல்களும் கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை பெற்று வருகின்றன. இதனால் பெரும்பான்மையான அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் ஒரு எஸ்யூவி காரை சந்தைப்படுத்தி உள்ளன அல்லது சந்தைப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றன.

விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக முழு சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை உருவாக்கும் ஹோண்டா...

இதில், விரைவில் எஸ்யூவி ரக காரை களமிறக்க திட்டமிட்டுள்ள நிறுவனங்களாக ஹோண்டா மற்றும் கியா போன்றவை உள்ளன. கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதிய எஸ்யூவி கார் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ள நிலையில் ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு மத்தியில் எஸ்யூவி விற்பனையை இந்தியாவில் துவங்கவுள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக முழு சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை உருவாக்கும் ஹோண்டா...

இந்த வகையில் ஹோண்டா நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவரும் முழு காம்பெட் எஸ்யூவி மாடல் சில வெளிநாட்டு சந்தைகளுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த புதிய தயாரிப்பு தற்சமயம் விற்பனையாகி கொண்டிருக்கும் அமேஸ் செடான் மாடல் உடன் ப்ளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்ளவுள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக முழு சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை உருவாக்கும் ஹோண்டா...

அமேஸின் ப்ளாட்ஃபாரம் மிக எடை குறைவான அனைத்து விதமான பாடி பேனல்களுக்கும் இடமளிக்கும். க்ரோம்-லேடன் முன்புற க்ரில் மற்றும் முழு-எல்இடி லைட்டிங் உள்ளிட்டவை ஹோண்டாவின் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காரில் எதிர்பார்க்கப்படும் டிசைன் அம்சங்களாகும்.

விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக முழு சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை உருவாக்கும் ஹோண்டா...

இவற்றுடன் வெளிநாட்டு சந்தைகளில் உள்ள புதிய தலைமுறை ஜாஸ் மாடலின் சில டிசைன் அமைப்புகளையும் இந்த புதிய மாடல் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டாவின் புதிய எஸ்யூவி காரின் சர்வதேச மாடலில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக முழு சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை உருவாக்கும் ஹோண்டா...

ஆனால் இதன் இந்திய வெர்சனில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படலாம். இந்த வேறுபட்ட என்ஜின் தேர்வுகளுடன் புதிய ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி மாடல் எலக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் மற்றும் பெரிய அளவிலான திரையுடன் இன்போடெயின்மெண்ட் யூனிட் போன்றவற்றையும் பெற்றிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக முழு சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை உருவாக்கும் ஹோண்டா...

இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை தவிர்த்து ஹோண்டா கார்ஸ் நிறுவனம் டபிள்யூஆர்-வி என்ற சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடலை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் ஜாஸ் க்ராஸ்ஓவர் மாடலின் அடிப்படையில் இந்த கார் தயாரிக்கப்பட்டு வருவதால் மொத்த தோற்ற அளவில் க்ராஸ்ஓவர் வடிவத்திலேயே காட்சியளிப்பது, எஸ்யூவி கார் பிரியர்களின் கவனத்தை இழப்பதற்கு முக்கிய காரணமாகும்.

மேலும்... #ஹோண்டா #honda
English summary
All-New Honda Sub-4M SUV To Launch By Next Year In India
Story first published: Sunday, May 3, 2020, 1:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X