ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில், மிகச் சிறந்த சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா ஜாஸ் கார் வந்துள்ளது. இந்த காரின் வேரியண்ட் விபரங்கள் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

புதிய ஹோண்டா ஜாஸ் கார் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டும் கிடைக்கும். இந்த காரின் பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் மாடல்களானது V, VX, ZX ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

வி பேஸ் வேரியண்ட்

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் விலை குறைவான பேஸ் வேரியண்ட் இதுதான். க்ரோம் அலங்கார பாகங்களுடன் கூடிய விசேஷ கருப்பு வண்ணத்திலான க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்டீயரிங் வீலில் க்ரோம் வளையம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. மேனுவல் வி வேரியண்ட் ரூ.7.49 லட்சத்திலும், சிவிடி வி வேரியண்ட் ரூ.8.49 லட்சத்திலும் கிடைக்கும்.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

விஎக்ஸ் வேரியண்ட்

நடுத்தர வசதிகள் மற்றும் விலையில் இந்த விஎக்ஸ் என்ற வேரியண்ட் வந்துள்ளது. இந்த வேரியண்ட்டில் வேறு வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், மென்மையான தொடு உணர்வை தரும் சாஃப்ட் டச் பிளாஸ்டிக் டேஷ்போர்டு அமைப்பு, ஒன் டச் வசதியுடன் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஹோண்டாவின் ஸ்மார்ட் கீ சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. மேனுவல் விஎக்ஸ் வேரியண்ட் ரூ.8.09 லட்சத்திலும், சிவிடி வேரியண்ட் ரூ.9.09 லட்சத்திலும் கிடைக்கும்.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

இசட்எக்ஸ் வேரியண்ட்

அதிகபட்ச வசதிகள் கொண்ட ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடலின் டாப் வேரியண்ட்டாக வந்துள்ளது. இந்த வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், ஒன் டச் எலெக்ட்ரிக் சன்ரூஃப், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. மேனுவல் வேரியண்ட் ரூ.8.73 லட்சத்திலும், சிவிடி வேரியண்ட் ரூ.9.73 லட்சத்திலும் கிடைக்கும்.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

புதிய ஹோண்டா ஜாஸ் காரில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. பழைய பிஎஸ்-4 ஜாஸ் காரில் விற்பனையில் 70 சதவீதம் அளவுக்கு சிவிடி கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகள்தான் இடம்பிடித்திருந்ததாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் மேனுவல் மாடல் லிட்டருக்கு 16.6 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 17.1 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

புதிய ஹோண்டா ஜாஸ் கார் போட்டியாளர்களிடத்தில் இல்லாத சில கூடுதல் சிறப்பம்சங்களுடன் முன்னிலைப்படுத்திக் கொள்கிறது. டீலர்களில் ரூ.21,000 முன்பணம் செலுத்தியும், ஆன்லைனில் ரூ.5,000 செலுத்தியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பண்டிகை காலத்தில் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு அதிக மதிப்பை வழங்கும். மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, டாடா அல்ட்ராஸ் கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Here we compiled variant wise features details of new Honda Jazz facelift model.
Story first published: Thursday, August 27, 2020, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X