2020 ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

ஹோண்டா நிறுவனத்தின் புதிய தயாரிப்பு மாடலான டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் கார் வருகிற ஜூலை 2ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

ஹோண்டா ஜாஸ் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள டபிள்யூஆர்-வி மாடலுக்கு ஜாஸ் மாடலை காட்டிலும் அதிகமான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் காரணமாக பி2-பிரிவில் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் கார் தான் தயாரிப்பு நிறுவனம் பெரிதும் நம்பியுள்ள மாடலாக உருவெடுத்துள்ளது.

2020 ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

இதுவும் ஹோண்டா நிறுவனம் புதிய டபிள்யூஆர்-வி மாடலின் அறிமுகத்தில் தீவிரமாக பணியாற்றுவதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. இதன்படி வருகிற 2ஆம் தேதி இந்த கார் அறிமுகமாகவுள்ளதை ஹோண்டா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் புதிய டீசர் ஒன்றின் மூலமாக வெளியிட்டுள்ளது.

டீலர்ஷிப்களை ஏற்கனவே சென்றடைய துவங்கிவிட்ட இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் ஷோரூம்களில் ரூ.21,000 என்ற தொகையுடன் ஏற்கப்பட்டு வருகின்றன. டபிள்யூஆர்-வி மாடலின் தற்போதைய தலைமுறை கார் அறிமுகமாகி 3 வருடங்களான நிலையில் தற்போது விற்பனைக்கு வரும் இதன் புதிய தலைமுறை கார் குறைவான அளவிலேயே காஸ்மெட்டிக் மாற்றங்களை ஏற்றுள்ளது.

2020 ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

இந்த வகையில் காரின் முன்புறத்தில் க்ரில் அமைப்பானது கிடைமட்டமான ஸ்லாட்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது தான் காருக்கு கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. அதேபோல் மேம்படுத்தப்பட்டுள்ளதால் ஹெட்லேம்ப் அமைப்பும் புதிய எல்இடி ப்ரோஜெக்டர் யூனிட்களையும், எல்இடி டிஆர்எல்களையும் பெற்றுள்ளது.

2020 ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

இவை அனைத்தும் சேர்த்து காருக்கு கவர்ச்சிகரமான முன்புறத்தை வழங்க, காரின் பக்கவாட்டு பகுதியில் எந்த மாற்றத்தையும் ஹோண்டா நிறுவனம் கொண்டுவரவில்லை. பின்புறத்தில் புதிய எல்இடி பாகங்களுடன் C-வடிவில் டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. உட்புறமும் பெரிய அளவில் எந்த மேம்படுத்த பணிகளுக்கும் உட்படுத்தப்படவில்லை.

2020 ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் மிக முக்கியமான அப்டேட்டாக பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

2020 ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

பெட்ரோல் வேரியண்ட்டில் பொருத்தப்படவுள்ள 1.2 லிட்டர் என்ஜின் 90 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடியது.

பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டாலும், டீசல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் என்ற ஒரே ஒரு என்ஜின் தேர்வை தான் பெற்றுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
2020 Honda WR-V Facelift Launching On 2nd July, Officially Announced
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X