புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் முன்கூட்டியே விற்பனைக்கு வருகிறது!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் அறிமுக தேதி மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் முன்கூட்டியே விற்பனைக்கு வருகிறது!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார் வரும் 17ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால் ஏற்பட்டுள்ள நிலைமை மனதில் வைத்து ஒரு நாள் முன்னதாக வரும் 16ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் முன்கூட்டியே விற்பனைக்கு வருகிறது!

மேலும், அறிமுக நிகழ்ச்சியை குறைந்த எண்ணிக்கையிலான பத்திரிக்கையாளர்களுடன் நடத்துவதற்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஒரு நாள் முன்னதாகவே விலை வெளியிடப்பட இருப்பது க்ரெட்டா வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை தரும் விஷயமாக கருதலாம்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் முன்கூட்டியே விற்பனைக்கு வருகிறது!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு கடந்த 2ந் தேதி முதலே முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. இதுவரை முன்பதிவு 10,000ஐ தாண்டி இருக்கிறது. வழக்கம்போல் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா கார் விற்பனையில் சூப்பர் ஹிட் மாடலாக தக்க வைக்கும் என நம்பப்படுகிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் முன்கூட்டியே விற்பனைக்கு வருகிறது!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் இ, எக்ஸ், எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஆகிய 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் முன்கூட்டியே விற்பனைக்கு வருகிறது!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் 140 எச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 115 எச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 115 எச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் முன்கூட்டியே விற்பனைக்கு வருகிறது!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், பூமராங் வடிவிலான எள்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி ஸ்டாப் லேம்ப் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், இரட்டை குழல் சைலென்சர், ரியர் ஸ்பாய்லர், ரூஃப் ரெயில்கள் உள்ளன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் முன்கூட்டியே விற்பனைக்கு வருகிறது!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் 10.25 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்களுடன் போஸ் பிரிமீயம் ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் மாடல்களில் பேடில் ஷிஃப்ட் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் முன்கூட்டியே விற்பனைக்கு வருகிறது!

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புளுலிங்க் கனெக்டெட் கார் செயலியுடன் வர இருக்கிறது. இதன் மூலமாக, 50 விதமான ரிமோட் கட்டுப்பாட்டு மற்றும் கார் இயக்கம் குறித்த தகவல்களை பெற முடியும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் முன்கூட்டியே விற்பனைக்கு வருகிறது!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரூ.11 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Hyundai Motor has likely to preponed the new generation Creta SUV's India launch event by a day to March 16.
Story first published: Thursday, March 12, 2020, 14:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X