2020 ஹுண்டாய் க்ரெட்டா டர்போ காரில் கூடுதல் ட்ரைவ் மோட்கள்... சாலைகளுக்கான மோட்களும் அதிகரிப்பு

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் சந்தைக்கு வந்த க்ரெட்டா மாடலில் மூன்று என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டிருந்தன. இதில் டர்போ வேரியண்ட் 3 சாலை மோட்களையும், 3 ட்ரைவ் மோட்களையும் பெற்றுள்ளது.

2020 ஹுண்டாய் க்ரெட்டா டர்போ காரில் கூடுதல் ட்ரைவ் மோட்கள்... சாலைகளுக்கான மோட்களும் அதிகரிப்பு

க்ரெட்டாவின் இந்த மூன்று என்ஜின் தேர்வுகளாக 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் உள்ளிட்டவை உள்ளன. இதில் 1.5 லி பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி பவர் மற்றும் 144 என்எம் டார்க் திறனை வழங்கும்.

2020 ஹுண்டாய் க்ரெட்டா டர்போ காரில் கூடுதல் ட்ரைவ் மோட்கள்... சாலைகளுக்கான மோட்களும் அதிகரிப்பு

மற்ற இரு என்ஜின் தேர்வுகள் முறையே 115 பிஎச்பி/250 என்எம் மற்றும் 140 பிஎச்பி/ 242 என்எம் டார்க்திறனை காருக்கு வழங்குகிறது. இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் 1.5 லி பெட்ரோல் என்ஜின் க்ரெட்டாவின் அனைத்து விதமான வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது.

2020 ஹுண்டாய் க்ரெட்டா டர்போ காரில் கூடுதல் ட்ரைவ் மோட்கள்... சாலைகளுக்கான மோட்களும் அதிகரிப்பு

ஆனால் 1.4 லி டர்போ பெட்ரோல் என்ஜின் டாப் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஒ) ட்ரிம்களுக்கு மட்டும் தான் தேர்வாக கொடுக்கப்படுகிறது. இதேபோல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், கூடுதல் தேர்வாக ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் இணைக்கப்படுகிறது.

2020 ஹுண்டாய் க்ரெட்டா டர்போ காரில் கூடுதல் ட்ரைவ் மோட்கள்... சாலைகளுக்கான மோட்களும் அதிகரிப்பு

அதுவே க்ரெட்டா டர்போ மாடலில் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டர்போ மாடலில் தான் வெவ்வேறான 3 ட்ரைவ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஈக்கோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் என்ற பெயர்களை கொண்ட இந்த 3 ட்ரைவ் மோட்கள் டர்போ மாடல் மட்டுமின்றி க்ரெட்டாவின் டாப் ட்ரிம்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

2020 ஹுண்டாய் க்ரெட்டா டர்போ காரில் கூடுதல் ட்ரைவ் மோட்கள்... சாலைகளுக்கான மோட்களும் அதிகரிப்பு

இந்த ட்ரைவ் மோட்கள் காரின் என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரையும் அட்ஜெஸ்ட் செய்யக்கின்றன. இதன்படி, கம்ஃபோர்ட் மோடில் ஸ்பீடோமீட்டர் டார்க் நீல நிறத்திற்கும், ஈக்கோ மோடில் அக்குவா நீல நிறத்திற்கும், ஸ்போர்ட் மோடில் கார் மிகவும் மூர்க்கதனமாக உள்ளதை உணர்த்தும் விதமாக சிவப்பு நிறத்திற்கும் மாறும்.

2020 ஹுண்டாய் க்ரெட்டா டர்போ காரில் கூடுதல் ட்ரைவ் மோட்கள்... சாலைகளுக்கான மோட்களும் அதிகரிப்பு

இந்த ட்ரைவ் மோட்களுடன் கூடுதலாக பனி, சேறு மற்றும் மணல் என்ற மூன்று வித்தியாசமான ட்ராக்‌ஷன் கண்ட்ரோல்/சாலை மோட்களையும் க்ரெட்டாவின் டர்போ கார் பெற்றுள்ளது. இந்த கூடுதல் ட்ரைவ் மற்றும் சாலை மோட்களை தவிர்த்து க்ரெட்டா டர்போவின் இரு ட்ரிம்களும், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கு 7 இன்ச் டிஎஃப்டி டிஜிட்டல் திரை, இரட்டை எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் முன்புற மடக்கக்கூடிய இருக்கைகளை கொண்டுள்ளன.

2020 ஹுண்டாய் க்ரெட்டா டர்போ காரில் கூடுதல் ட்ரைவ் மோட்கள்... சாலைகளுக்கான மோட்களும் அதிகரிப்பு

இதில் டாப் ட்ரிம்-ஆன எஸ்எக்ஸ் (ஒ)-ல் கூடுதலாக பனோராமிக் சன்ரூஃப், 17 இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள், தன்னிச்சையாக ஹோல்டிற்கு செல்லக்கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக், பெடல் ஷிஃப்டர்கள், ஆட்டோமேட்டிக் காற்று சுத்திகரிப்பான், ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஹூண்டாய் ப்ளூலிங்க் கனெக்டட் கார் உள்ளிட்டவற்றுடன் இணைக்கக்கூடிய 10.25 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன.

2020 ஹுண்டாய் க்ரெட்டா டர்போ காரில் கூடுதல் ட்ரைவ் மோட்கள்... சாலைகளுக்கான மோட்களும் அதிகரிப்பு

க்ரெட்டா மாடலில் உள்ள மற்ற சிறப்பம்சங்களாக 6 காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், வாகனத்தின் திடநிலை மேலாண்மை, டயரின் அழுத்தத்தை கணக்கிடும் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் நிலைத்தன்மை கண்ட்ரோல் உள்ளிட்டவை உள்ளன.

2020 ஹுண்டாய் க்ரெட்டா டர்போ காரில் கூடுதல் ட்ரைவ் மோட்கள்... சாலைகளுக்கான மோட்களும் அதிகரிப்பு

ஹூண்டாய் க்ரெட்டா மாடலின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.9.99 லட்சமாக உள்ளது. இதன் டர்போ வேரியண்ட்டின் எஸ்எக்ஸ் ட்ரிம் ரூ.16.16 லட்சத்திலும், டாப் எஸ்எக்ஸ் (ஒ) ட்ரிம் ரூ.17.20 லட்சத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source: Gaadiwaadi

Most Read Articles
English summary
2020 Hyundai Creta Turbo Comes With 3 Terrain Modes, 3 Drive Modes
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X