2020 ஹூண்டாய் ஐ20 காரின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

தென் கொரிய நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், விரைவில் சந்தைக்கு வரவுள்ள 2020 ஐ20 மாடலின் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள பாகங்கள் குறித்து புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதனை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஹூண்டாய் ஐ20 காரின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

ப்ரீமியம் ஹேட்ச்பேக் காராக அறிமுகமாகவுள்ள இந்த மாடல் அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. புதிய மற்றும் கூர்மையான வெளிப்புற டிசைனை கொண்டுள்ள 2020 ஐ20 மாடல் உட்புறத்திலும் ஏகப்பட்ட தொழிற்நுட்பங்களை பெற்றுள்ளது.

2020 ஹூண்டாய் ஐ20 காரின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

உட்புறத்தில் இந்த ஹேட்ச்பேக் கார் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 10.25 இன்ச்சில் ஃப்லோட்டிங் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், முன் இருக்கை பயணிகளின் பக்கவாட்டில் இருந்து காற்றை வெளியேற்றும் ஃபாக்ஸ் ஏசி மற்றும் 4-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றுடன் விற்பனையாகவுள்ளது.

2020 ஹூண்டாய் ஐ20 காரின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

இவற்றுடன் ஹூண்டாயின் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழிற்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல், போஸ் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் சார்ஜர், அதிக எண்ணிக்கையில் ட்ரைவிங் மோட், கீலெஸ் எண்ட்ரீ மற்றும் காரை ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்ய புஷ் பொத்தான் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

2020 ஹூண்டாய் ஐ20 காரின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

புதிய 2020 ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் மாடல் இரு விதமான என்ஜின் தேர்வுகளை பெற்றுள்ளது. இதில் 1.0 லிட்டர் டர்போ ஜிடிஐ டீசல் என்ஜினும் இரு ஆற்றல் நிலைகளை அதிகப்பட்சமாக வழங்கும் திறன் கொண்டது. அதாவது 98 பிஎச்பி பவரை காருக்கு வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும் இந்த டீசல் என்ஜின் மற்றொரு நிலையில் 118 பிஎச்பி வரையிலும் வெளிப்படுத்தக்கூடியது.

2020 ஹூண்டாய் ஐ20 காரின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

மற்றொரு என்ஜின் தேர்வாக வழங்கப்படவுள்ள 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் 83 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஜிடிஐ டீசல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் செயல்படவுள்ளது.

2020 ஹூண்டாய் ஐ20 காரின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

பாதுகாப்பு அம்சங்களாக இந்த 2020 ஹூண்டாய் ஐ20 மாடலில் இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், லேம் கீப் அசிஸ்ட், கவனமான ட்ரைவிங்கிற்காக சில வார்னிங் வசதிகள், இரட்டை காற்றுப்பைகள், க்ராஷ் & பார்க்கிங் சென்சார்கள், கார் திருடு போவதையும் மற்றும் சீட் பெல்ட் அணியாததையும் எச்சரிக்கும் அலாரம் உள்ளிட்டவை உள்ளன.

2020 ஹூண்டாய் ஐ20 காரின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

ஹூண்டாய் நிறுவனம் தற்சமயம் புதிய ஐ20 மாடலை இந்தியாவில் தீவிரமாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தி வருகிறது. இதனால் இந்த புதிய ஹேட்ச்பேக் மாடலின் இந்திய அறிமுகம் ஜூன் அல்லது ஜூலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஹூண்டாய் ஐ20 காரின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

ஹூண்டாய் ஐ20 மாடலின் தற்போதைய தலைமுறை கார் ரூ.5.60 லட்சத்தில் இருந்து ரூ.9.41 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் இந்த புதிய தலைமுறை கார் ரூ.6.60- ரூ.10.41 லட்சத்தில் விற்பனை செய்யப்படலாம்.

2020 ஹூண்டாய் ஐ20 காரின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..?

தற்போது வெளியாகியுள்ள இதன் உட்புற புகைப்படங்களின் மூலம் 2020 ஐ20 ஹேட்ச்பேக் கார் உட்புறத்தில் காற்றோட்டமான மற்றும் அதிக வசதிகளை கொண்ட கேபினை பெற்றிருக்கும் என்பது உறுதி. ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம் தனது அனைத்து தயாரிப்பு கார்களிலும் தரமான தொழிற்நுட்பங்களை உட்புறத்தில் வழங்கி வருகிறது.

Most Read Articles
English summary
Hyundai i20 2020 Models Interiors Revealed Ahead Of India Launch: Details And Expected Features
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X