201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்... இது செம 'ஹாட்' மச்சி!

புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள அதிசெயல்திறன் மிக்க ஐ20 என் கார் மாடல் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிசக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வர இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இது செம ஹாட் மச்சி... 201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்!

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் செம ஸ்டைலான மாடலாக ஹூண்டாய் எலைட் ஐ20 கார் வாடிக்கையாளர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில், இந்த காரின் டிசைன் அம்சங்களை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் வகையில், புதிய தலைமுறை ஐ20 கார் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய தலைமுறை ஐ20 கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

இது செம ஹாட் மச்சி... 201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்!

இந்த சூழலில், புதிய ஐ20 காரின் அடிப்படையில் அதிசக்திவாய்ந்த மாடலை ஹூண்டாய் மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல் WRC ராலி பந்தயங்களில் பயனப்டுத்தப்படும் கார்களை பிரதிபலிக்கும் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இது செம ஹாட் மச்சி... 201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் N என்ற வரிசையில் பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் வர இருக்கும் இந்த புதிய மாடல் டிசைனிலும், செயல்திறனிலும் மிரட்டும் வகையில் அமைந்துள்ளது. சாதாரண மாடலில் இருந்து வேறுபடுத்தும் வகையில், பம்பரில் சிவப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரம், முகப்பு க்ரில் அமைப்பில் என் என்ற எழுத்துடன் இது பெர்ஃபார்மென்ஸ் மாடல் என்பதை காட்டுகிறது. வலிமையான பானட், ஏர்டேம், க்ரில் அமைப்பு, பம்பர் என முகப்பு மிரட்டலாகவே இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், லிப் ஸ்பாய்லர் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இது செம ஹாட் மச்சி... 201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்!

இந்த காரின் பக்கவாட்டில் 18 அங்குல அலாய் வீல்கள் இடம்பெற்றிருக்கிறது. கருப்பு வண்ண பூச்சுடன் கூடிய டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூஃப் ஸ்பாய்லர், டிஃப்யூசர் போன்ற அமைப்பு, தனித்துவமான சைலென்சர் அமைப்பு ஆகியவையும் இதன் குறிப்பிடத்தக்க விஷயங்களாக இருக்கும். மொத்தம் ஆறு விதமான வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இது செம ஹாட் மச்சி... 201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்!

இந்த காரில் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், விசேஷ ஸ்டீயரங் வீல், கியர் லிவர் மற்றும் மெட்டல் பெடல்கள் பொருத்தப்பட்டுள்ளன. முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர் மற்றும் நீல வண்ணத்திலான அலங்கார பாகங்கள் இடம்பெற்றுள்ளன.

இது செம ஹாட் மச்சி... 201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்!

இந்த கார் ராலி ரேஸ் கார்களை போன்று, நேவிகேஷன் வசதிக்காக 10.25 அங்குல எல்சிடி திரை வங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். புளூலிங்க் கனெகெட்டெட் கார் தொழில்நுட்பமும் உள்ளது. இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. கியர் ஷிஃப்ட் நேரத்தை காட்டும் வசதி, எஞ்சின் ஆயில் வெப்ப நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வசதியும் இடம்பெற்றுள்ளது.

இது செம ஹாட் மச்சி... 201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்!

புதிய ஹூண்டாய் ஐ20 என் காரில் 1.6 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 275 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் லிமிடேட் ஸ்லிப் டிஃபரன்ஷியல் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது.

இது செம ஹாட் மச்சி... 201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்!

புதிய ஹூண்டாய் ஐ20 என் கார் மாடலானது 1,190 கிலோ எடை கொண்டது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 230 கிமீ வேகம் வரை செல்லும். லான்ச் கன்ட்ரோல், பிரேக் பேடுகள் தேய்மானம் குறித்த எச்சரிக்கும் வழங்கும் வசதி, பெர்ஃபான்ஸ் டிரைவிங் குறித்த தகவல்களை பெறும் வசதிகளும் உள்ளன.

இது செம ஹாட் மச்சி... 201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்!

இந்த காரில் நார்மல், ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் என் என நான்கு விதமான டிரைவிங்மோடுகள் உள்ளன. இதில், என் என்பது ஓட்டுனரின் விருப்பத்திற்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளும் வசதியையும் அளிககும். சாதாரண ஐ20 காரின் சேஸீயை அதிக உறுதித்தன்மை மிக்கதாக மாறுதல் செய்து இந்த காரில் பயன்படுத்தி உள்ளனர். விசேஷ சஸ்பென்ஷன், பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

இது செம ஹாட் மச்சி... 201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்!

புதிய ஹூண்டாய் ஐ20 என் கார் நவீன டிரைவர் அசிஸ்ட் தொழில்நுட்பங்களையும் பெற்றிருக்கிறது. இந்த கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Hyundai has revealed i20 N Hot Hatchback Car inspired by WRC cars. It is expected to launch in the European market early next year.
Story first published: Monday, October 26, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X