சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை சாண்டா ஃபெ எஸ்யூவி மாடலின் டீசர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வெளிவந்துள்ள புதிய சாண்டா ஃபெ மாடலை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...

இந்த படத்தின் மூலம் பார்க்கும்போது இந்த புதிய எஸ்யூவி மாடல் ப்ரிமியம் தோற்றத்தில் இந்நிறுவனத்தின் புதிய க்ரில் அமைப்பை கொண்டுள்ளது. இந்த புதிய க்ரில், சாண்டா ஃபெ மாடல் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கொண்டிருந்த நீர்வீழ்ச்சி வடிவிலான க்ரில்லிற்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது.

சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...

காரின் முகப்பு வரையில் நீண்டு காணப்படுகின்ற இந்த க்ரில்லிற்கு இரு முனையிலும் ட்ரைவிங் விளக்குகளுக்கான ஹௌசிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 2021 சாண்டா ஃபெ மாடல் முதன்முறையாக பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய டிஆர்எல் விளக்குகளை பெற்றுள்ளது.

MOST READ: பருவமழை தொடங்க போகுது... மழை நீரில் இருந்து வாகனங்களை பாதுகாக்க எளிமையான வழி என்னென்ன..?

சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...

T-வடிவில் வழங்கப்பட்டுள்ள இந்த டிஆர்எல் விளக்குகள், ஹூண்டாயின் புதிய ஒருங்கிணைந்த வாகன கட்டமைப்பின்படி இந்த எஸ்யூவி மாடலில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த வடிவத்தில் தான் இந்த விளக்குகள் எதிர்கால மாடல்களிலும் ஃபேஸ்லிஃப்ட்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...

ஆனால் மற்ற இயந்திர பாகங்கள் முந்தைய தலைமுறை காரில் இருந்து அப்படியே வழங்கப்பட்டிருக்கும் என்றே தெரிகிறது. இருப்பினும் புதிய என்3 மாடுலர் கட்டமைப்பில் இந்த 2021 மாடல் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

MOST READ: 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... நம்ப முடியாத குறைந்த விலையில் வாங்கிய தொழிலதிபர்...

சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...

இந்த புதிய ஃப்ளாட்பாரத்தை பற்றி கூற வேண்டுமென்றால், இது ஹூண்டாய்யின் புதிய மூன்றாம்-தலைமுறை வாகன ஃப்ளாட்ஃபாரம் ஆகும். இந்த ஃப்ளாட்பாரத்தில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படவுள்ள முதல் மாடலாக புதிய தலைமுறை சாண்டா ஃபெ மாடல் விளங்கவுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...

புதிய கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு வருவதால் இந்த எஸ்யூவி மாடலில் ஹைப்ரீட் மற்றும் ப்ளக்-இன் ஹைப்ரீட் உள்ளிட்ட சில என்ஜின் தேர்வுகளை புதியதாக எதிர்பார்க்கலாம். ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலாக விளங்கும் சாண்டே ஃபெ மாடல் சமீபத்தில் தான் சர்வதேச சந்தையில் 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது. இதுகுறித்த முழுமையான தகவல்களை நமது தளத்தில் பதிவிட்டுள்ளோம். அவற்றை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ஹூண்டாய்யின் முதல் எஸ்யூவி கார் சாண்டா ஃபெ... 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது...!

சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...

மிக நீண்ட கால விற்பனை அனுபவத்தை இந்த எஸ்யூவி கார் சர்வதேச சந்தையில் கொண்டிருந்தாலும், இந்திய சந்தையில் இந்த காரின் விற்பனை ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் தற்போது புதிய தலைமுறையை சாண்டா ஃபெ மாடல் சந்திக்கவுள்ளதால் இதன் விற்பனையை வருங்காலங்களில் மீண்டும் நமது நாட்டு சந்தையில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
All-new Hyundai Santa Fe teased
Story first published: Thursday, May 28, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X