ஹூண்டாய் வெனியூ பிஎஸ்6 டீசல் மைலேஜ் விபரம் வெளியானது!

ஹூண்டாய் வெனியூ காரின் பிஎஸ்6 டீசல் மாடலின் மைலேஜ் விபரம் வெளியாகி உள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா டீசல் விலக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வெற்றிடத்தை வெனியூ டீசல் பிஎஸ்6 நிரப்புவதற்கு அதிக வாய்ப்புகள் எழுந்துள்ளன.

ஹூண்டாய் வெனியூ பிஎஸ்6 டீசல் மைலேஜ் விபரம் வெளியானது!

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் போட்டி நிலவுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1 சாய்ஸாக இருந்தாலும், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் என ஒவ்வொன்றும் தனி மதிப்புடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

ஹூண்டாய் வெனியூ பிஎஸ்6 டீசல் மைலேஜ் விபரம் வெளியானது!

இந்த சூழலில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு அடுத்து இந்த ரகத்தில் ஹூண்டாய் வெனியூ சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. புதிய மாசு உமிழ்வு விதிகளால், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் டீசல் மாடல் நீக்கப்பட்டு, பெட்ரோல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது.

ஹூண்டாய் வெனியூ பிஎஸ்6 டீசல் மைலேஜ் விபரம் வெளியானது!

ஆனால், ஹூண்டாய் வெனியூ காரில் பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதனால், மாருதி விட்டாரா டீசல் மாடல் விட்டுச் சென்றுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கான வாய்ப்பை ஹூண்டாய் வெனியூ பிஎஸ்6 மாடல் பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ பிஎஸ்6 டீசல் மைலேஜ் விபரம் வெளியானது!

இதுவரை ஹூண்டாய் வெனியூ காரில் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த எஞ்சின் 90 பிஎஸ் பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் இருந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைத்து வந்தது.

ஹூண்டாய் வெனியூ பிஎஸ்6 டீசல் மைலேஜ் விபரம் வெளியானது!

இந்த நிலையில், தற்போது பிஎஸ்6 தரமுடைய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு இடம்பெற்றிருக்கிறது. கியா செல்டோஸ் காரின் எஞ்சின்தான் என்றாலும், பவரை வெளிப்படுத்தும் திறன் குறைக்கப்பட்டு இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமையை பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ பிஎஸ்6 டீசல் மைலேஜ் விபரம் வெளியானது!

இந்த காரின் மைலேஜ் விபரம் குறித்து இதுவரை தகவல் இல்லாமல் இருந்தது. தற்போது இந்த காரின் எரிபொருள் அளவீடு குறித்த தகவல் ஆட்டோகார் இந்தியா தளம் மூலமாக வெளியாகி இருக்கிறது. இந்த டீசல் எஞ்சின் லிட்டருக்கு 23.3 கிமீ மைலேஜ் வழங்கும் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, நடைமுறையில் லிட்டருக்கு 18 முதல் 20 கிமீ மைலேஜை பெறும் வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் வெனியூ பிஎஸ்6 டீசல் மைலேஜ் விபரம் வெளியானது!

பழைய 1.4 லிட்டர் டீசல் எஞ்சினை விட தற்போது வழங்கப்பட்டுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிக சக்திவாய்ந்ததாகவும், மைலேஜ் சிறப்பானதாகவும் அமைந்திருப்பது ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனையில் முக்கியத்துவம் பெறும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் இந்த கார் கிடைக்கும்.

ஹூண்டாய் வெனியூ பிஎஸ்6 டீசல் மைலேஜ் விபரம் வெளியானது!

மேலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் டீசல் மாடல் விலக்கப்பட்டுள்ள நிலையில், விற்பனையில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் வெனியூ அந்த இடத்தை நிரப்புவதற்கான வாய்ப்பை பெறும். தவிரவும், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களிலும் டீசல் எஞ்சின் தேர்வு இருந்தாலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் டீசல் மார்க்கெட்டின் பெரும் பகுதியை வெனியூ பெறும் என்று கருதலாம்.

ஹூண்டாய் வெனியூ பிஎஸ்6 டீசல் மைலேஜ் விபரம் வெளியானது!

ஹூண்டாய் வெனியூ டீசல் பிஎஸ்6 மாடலானது E, S, SX, SX Dual Tone மற்றும் SX(O) ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.8.09 லட்சம் முதல் ரூ.11.39 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் ஹூண்டாய் வெனியூ டீசல் வேரியண்ட்டுகள் விற்பனைக்கு செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
The new Hyundai Venue diesel ARAI certified mileage details have been revealed and it will attaract diesel compact SUV buyers.
Story first published: Saturday, April 18, 2020, 12:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X