கனெக்டெட் கார் நுட்பம் மூலமாக சகலத்தையும் வழங்கும் புதிய ஹூண்டாய் வெர்னா!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் அதிக வசதிகளுடன் கூடிய புளூ லிங்க் என்ற பெயரிலான கனெக்டெட் கார் செயலி கொடுக்கப்பட இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கனெக்டெட் கார் நுட்பம் மூலமாக சகலத்தையும் வழங்கும் புதிய ஹூண்டாய் வெர்னா!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்களில் நேரடி இன்டர்நெட் வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த இன்டர்நெட் வசதியை பயன்படுத்தி, புளு லிங்க் என்ற மொபைல்போன் செயலியை பயன்படுத்தி, பல்வேறு கட்டுப்பாட்டு மற்றும் கார் இயக்கம் பற்றிய தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

கனெக்டெட் கார் நுட்பம் மூலமாக சகலத்தையும் வழங்கும் புதிய ஹூண்டாய் வெர்னா!

முதலில் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியிலும், அடுத்து எலான்ட்ரா காரிலும் இந்த கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வரும் மார்ச் 17ந் தேதி விற்பனைக்கு வரும் புதிய தலைமுறை க்ரெட்டா காரிலும், 26ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் புதிய வெர்னா காரிலும் இந்த புளுலிங்க் செயலி வழங்கப்பட இருக்கிறது.

கனெக்டெட் கார் நுட்பம் மூலமாக சகலத்தையும் வழங்கும் புதிய ஹூண்டாய் வெர்னா!

ஹூண்டாய் வெனியூ மற்றும் எலான்ட்ரா கார்களில் இருப்பதை காட்டிலும் அதிக வசதிகளை வழங்கும் விதத்தில் வெர்னா காரின் புளு லிங்க் செயலி செயல்படும். இதன்படி, புதிதாக வாய்ஸ் கமாண்ட் என்ற குரல் கட்டளைகளை உணர்ந்து கொண்டு பல்வேறு வசதிகளை வழங்கும் விதத்தில் ஹூண்டாய் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கனெக்டெட் கார் நுட்பம் மூலமாக சகலத்தையும் வழங்கும் புதிய ஹூண்டாய் வெர்னா!

இந்த புளுலிங்க் செயலியை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே, கார் எஞ்சின் மற்றும் ஏசியை முன்கூட்டியே உயிர்ப்பிக்க முடியும். அத்துடன், கார் கதவுகளை திறப்பதையும், பூட்டுவதையும் ரிமோட் முறையில் செய்யக்கூடிய வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டெட் கார் நுட்பம் மூலமாக சகலத்தையும் வழங்கும் புதிய ஹூண்டாய் வெர்னா!

இந்த செயலியை இயக்குவதற்கு ஏதுவாக பிரத்யேக ஸ்மார்ட் வாட்ச் ஒன்றும் ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்பட இருக்கிறது. ரிமோட் முறையில் காரின் சில தொழில்நுட்பங்களை இயக்குவதற்கு மட்டுமின்றி, கார் இருக்கும் இடத்தை நிகழ்நேர முறையில் கண்காணிப்பதற்கும், குறிப்பிட்ட எல்லையை விட்டு தாண்டாமல் செய்வதற்குமான வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

கனெக்டெட் கார் நுட்பம் மூலமாக சகலத்தையும் வழங்கும் புதிய ஹூண்டாய் வெர்னா!

காரின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு, கார் திருடுபோனால் எளிதாக கண்டுபிடிப்பதற்கும் இந்த செயலி பெரிதும் உதவியாக இருக்கும். அவசர காலத்தில் உறவினர்கள், நண்பர்களுக்கும், அருகிலுள்ள உதவி மையத்திற்கு தானியங்கி முறையில் குறுந்தகவல் அனுப்பும் வசதியும் உள்ளது.

கனெக்டெட் கார் நுட்பம் மூலமாக சகலத்தையும் வழங்கும் புதிய ஹூண்டாய் வெர்னா!

இதுதவிர்த்து, கால நிலை தகவல்கள், கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கும் வசதிகளும் உண்டு. முக்கியமாக காரின் பராமரிப்பு, இயக்கம் குறித்த பல முக்கியத் தகவல்கள் என மொத்தம் 45 விதமான வசதிகளை இந்த செயலி மூலமாக உரிமையாளர்கள் பெற முடியும்.

கனெக்டெட் கார் நுட்பம் மூலமாக சகலத்தையும் வழங்கும் புதிய ஹூண்டாய் வெர்னா!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் ஏராளமான சிறப்பு அம்சங்களுடன் வர இருக்கிறது. அண்மையில் இந்த காரின் படங்கள் வெளியிடப்பட்டன. இதில், எள்இடி ஹெட்லைட்டுகள், க்ரோம் வில்லைகளுடன் கூடிய பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, டைமண்ட் கட் அலாய் வீல்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் வர இருக்கிறது.

கனெக்டெட் கார் நுட்பம் மூலமாக சகலத்தையும் வழங்கும் புதிய ஹூண்டாய் வெர்னா!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் டிசிடி கியர்பாக்ஸ் தேர்விலும், மற்ற பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும்.

கனெக்டெட் கார் நுட்பம் மூலமாக சகலத்தையும் வழங்கும் புதிய ஹூண்டாய் வெர்னா!

புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு அதிக வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய ஹூண்டாய் வெர்னா கார் ரூ.9 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Hyundai has revealed the connectivity features of the upcoming Verna facelift model and it will be launched in India on March, 26.
Story first published: Thursday, March 12, 2020, 10:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X