நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு

புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டுள்ள இசுஸுகி எம்.யூ.எக்ஸ் எஸ்யூவி தாய்லாந்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய எஸ்யூவியின் படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு!

இந்தியாவின் பிரிமீயம் ரக எஸ்யூவி கார்களில் தனித்துவமான தேர்வாக இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி இருந்து வருகிறது. இந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு!

2021 மாடலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய எம்யூஎக்ஸ் எஸ்யூவி முதலாவதாக தாய்லாந்து சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுல்ளது. இந்திய மதிப்பில் பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.26.30 லட்சம் விலையும், டாப் வேரியண்ட்டிற்கு ரூ.37.45 லட்சம் விலையும் அங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு!

புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவியின் வடிவமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. புதிய டி மேக்ஸ் பிக்கப் டிரக் உருவாக்கப்பட்ட அதே கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில்தான் இந்த புதிய மாடலும் வந்துள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு!

இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையின் மூலமாக புதிய எஞ்சின், சேஸீ ஆகியவற்றிற்கு மாறி இருக்கிறது. இந்த புதிய மாடலானது 4,850 மிமீ நீளமும், 1,870 மிமீ அகலமும், 1,875 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவி 2,855 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டதாக இருக்கிறது. பழைய மாடலைவிட 25 மிமீ கூடுதல் நீளமும், 10 மிமீ கூடுதல் அகலமும், 15 மிமீ கூடுதல் உயரமும் பெற்றிருக்கிறது. வீல்பேஸ் நீளம் 10 மிமீ வரை அதிகரித்துள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு!

வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும், அதிக தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த எஸ்யூவியில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், க்ரோம் க்ரில் அமைப்பு, எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. 20 அங்குல அலாய் சக்கரங்களுடன் பிரம்மாண்டமாக உள்ளது. ரூஃப் ஸ்பாய்லர், சில்வர் வண்ண சைடு ஸ்டெப்புகள் ஆகியவையும் உள்ளன.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு!

புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவியில் பழுப்பு, கருப்பு வண்ணத்திலான இரட்டை வண்ணக் கலவை கொடுக்கப்பட்டுள்ளது. டியூவல் ஸோன் ஏசி சிஸ்டம், ரியர் ஸ்பிளிட் ஏசி வசதி, ஸ்மார்ட் கீ லெஸ் என்ட்ரி வசதி, 4.2 அங்குல எம்ஐடி திரை மூலமாக பல்வேறு தகவல்களை பெறும் வசதி, ஆட்டோ பிரேக் ஹோல்டு, டெர்ரெயின் கமாண்ட் ஷிஃப்ட் ஆன் ஃப்ளை சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹை பீம் வசதி, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் என தொழில்நுட்பங்களில் மிரட்டலாக உள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு!

டாப் வேரியண்ட்டுகளில் ADAS எனப்படும் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளது. ஓட்டுனருக்கு தேவையான நேரத்தில் எச்சரிக்கை வழங்குவதுடன், ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழக்கும்போது காரை பாதுகாப்பாக நிறுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கும். தடம் மாறுதல், வழியில் உள்ள தடைகள் குறித்த விபரம், பாதுகாப்பாக பார்க்கிங் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கும்.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு!

புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவியில் 1.9 லிட்டர் விஜிஎஸ் டர்போ டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 150 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பார்க்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மற்றொரு 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும்.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு!

புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான தேர்வாக அமையும்.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
Japanese car maker, Isuzu has unveiled MU-X SUV In Thailand and it is expected to launch in India soon.
Story first published: Thursday, October 29, 2020, 12:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X