Just In
- 2 hrs ago
இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!
- 5 hrs ago
இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
- 5 hrs ago
கோயம்புத்தூரில் தயாராகும் எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் பைக்!! ரூ.1.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்
- 21 hrs ago
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
Don't Miss!
- Movies
ரொம்ப நன்றி ரேகா மேடம்.. நீங்களாவது போட்டீங்களே.. ஷிவானியின் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்!
- News
ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு.. நானே முழு பொறுப்பு.. பிரதமர் போரிஸ் ஜான்சான் உருக்கம்
- Sports
வசமாக மாட்டிக்கிட்டீங்க பாஸ்.. டெஸ்டிங் முறையை மாற்றிய பிசிசிஐ.. டார்கெட் செய்யப்படும் ரோஹித் சர்மா!
- Finance
டிக்டாக், ஹலோ மீது நிரந்தர தடை.. 2000 ஊழியர்களை பணிநீக்கம்..!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Lifestyle
உங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விரைவில் இந்தியா வரும் ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முழு விபரம்!
ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய வருகை விபரம் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபாடு வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கும் முயற்சியாக பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மின்சார வாகனங்களில் இருக்கும் குறைகளை போக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த சூழலில், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்த சந்தையில் முன்னதாகவே களமிறங்குவதற்கான முயற்சிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், ஜாகுவார் நிறுவனமும் தனது ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் புதிய ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பழைய ஐ பேஸ் எஸ்யூவியில் 7kW சார்ஜர் கொடுக்கப்பட்டது. தற்போது 2021 மாடலாக வரும் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 11kW ஆன்போர்டு சார்ஜர் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட உள்ளது.

இந்த புதிய சார்ஜரை 3 பேஸ் பாயிண்ட் மூலமாக மிக விரைவாக சார்ஜ் செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கும். WLTP கணக்கீடுகளின்படி, 11kW சார்ஜரை பயன்படுத்தும்போது ஒரு மணிநேரத்தில் 53 கிமீ தூரம் பயணிப்பதற்கான வாய்ப்பையும், 8.6 மணிநேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கும்.

பழைய 7kW சிங்கிள் பேஸ் சார்ஜர் மூலமாக ஒரு மணிநேரம் சார்ஜர் செய்தால் 35 கிமீ தூரம் வரை பயணிக்கும். 100 சதவீதம் பேட்டரி சார்ஜ் செய்வதற்கு 13 மணிநேரம் பிடிக்கும். இந்த நிலையில், காரில் வழங்கப்பட உள்ள இந்த புதிய 11kW வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். மேலும், 50kW சார்ஜர் பயன்படுத்தினால் 15 நிமிட சார்ஜில் 63 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை பெற முடியும். 100kW சார்ஜர் மூலமாக 15 நிமிடத்தில் 127 கிமீ தூரம் பயணிக்கலாம்.

புதிய ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இரண்டு சிம் கார்டுகளுடன் பல்வேறு வசதிகளை வழங்கும் பிவி புரோ செயலியுடன் கூடிய கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. ஒரு சிம் கார்டு மூலமாக நேரடியாக அப்டேட்டுகளை பெறுவதற்கும், ஒரு சிம் கார்டு மூலமாக பொழுது போக்கு வசதிகளை பெறுவதற்கும் பயன்படும்.

மேலும், 12.3 அங்குல திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. மேலும், 10 அங்குல தொடுதிரை மறறும் 5 அங்குல தொடுதிரைகள் மேலும் கீழுமாக கொடுக்கப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஒன்று பொழுதுபோக்கு வசதிகளையும், மற்றொன்று காரின் இயக்கம் குறித்த தகவல்களையும் பெற உதவும்.

மேலும், இதன் இன்பில்ட் நேவிகேஷன் சிஸ்டம் மூலமாக அருகாமையிலுள்ள சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இது நிச்சயம் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்தும் செல்லும் உணர்வை ஏற்படுத்தும்.

கவர்ச்சிகரமான பூச்சுடன் புதிய க்ரில் அமைப்பு, புதிய அலாய் வீல்கள், புதிய வண்ணத் தேர்வுகள், பிஎம்2.5 ஏர் ஃபில்டர், 3டி கேமரா உள்ளிட்டவையும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு ஆக்சில்களிலும் தலா ஒரு மின் மோட்டார் மூலமாக சக்கரங்களுக்கு சக்தி கிடைக்கிறது. இந்த இரண்டு மின் மோட்டார்களும் இணைந்து 395 பிஎச்பி பவரையும், 696 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும். 470 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இது நிச்சயம் நடைமுறை பயன்பாட்டிற்கு சிறந்த எலெக்ட்ரிக் சொகுசு கார் மாடலாக இருக்கும் என்று நம்பலாம்.