கியா கார்னிவல் எம்பிவி காரின் 4 இருக்கை அமைப்புகள் குறித்த முழுமையான விபரம்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக எதிர்பார்க்கப்படும் புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார் குறித்த பல முக்கியத் தகவல்களை கியா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இதன் இருக்கை அமைப்பு குறித்த விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கியா கார்னிவல் எம்பிவி காரின் இருக்கைகள் அமைப்பு குறித்த முழுமையான விபரம்

கியா கார்னிவல் எம்பிவி கார் இரண்டு 7 சீட்டர் மாடல்கள், ஒரு 8 சீட்டர் மாடல் மற்றும் ஒரு 9 சீட்டர் மாடல்கள் என நான்கு விதமான இருக்கை அமைப்பு கொண்ட மாடல்களில் வர இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கியா கார்னிவல் எம்பிவி காரின் இருக்கைகள் அமைப்பு குறித்த முழுமையான விபரம்

7 சீட்டர்

இந்த மாடலில் இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. கடைசி வரிசையில் பெஞ்ச் இருக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கியா கார்னிவல் எம்பிவி காரின் இருக்கைகள் அமைப்பு குறித்த முழுமையான விபரம்

7 சீட்டர் விஐபி

கியா கார்னிவல் காரின் இந்த 7 சீட்டர் விஐபி மாடலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளில் தலா இரண்டு விஐபி இருக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. கடைசி வரிசையில் சிறிய இருக்கை ஒன்றும் கொடுக்கப்பட்டு 7 சீட்டர் மாடலாக மாறி இருக்கிறது.

கியா கார்னிவல் எம்பிவி காரின் இருக்கைகள் அமைப்பு குறித்த முழுமையான விபரம்

8 சீட்டர்

இந்த மாடலில் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகளும், கடைசி வரிசையில் பெஞ்ச் இருக்கையும் வழங்கப்பட்டுள்ளது. தவிரவும், நடுவில் இருக்கும் இரண்டாவது வரிசை கேப்டன் இருக்கைகளுக்கு நடுவில் சிறிய இருக்கையும் வழங்கப்படும்.

9 சீட்டர்

இந்த மாடலில் மூன்று வரிசைகளுக்கு தலா இரண்டு கேப்டன் இருக்கைகளும், கடைசி வரிசையில் சிறிய அளவிலான பெஞ்ச் இருக்கையும் இடம்பெற்றிருக்கும். இந்த பென்ச் இருக்கை அமைப்பானது சிறியவர்கள் அமரும் இடவசதியை பெற்றிருக்கும்.

கியா கார்னிவல் எம்பிவி காரின் இருக்கைகள் அமைப்பு குறித்த முழுமையான விபரம்

கியா கார்னிவல் கார் மூன்று விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்கள் பிரிமீயம் வேரியண்ட்டிலும், 7 சீடட்ர் மற்றும் 9 சீட்டர் மாடல்கள் பிரஸ்டீஜ் வேரியண்ட்டிலும், 7 சீட்டர் விஐபி மாடலானது லிமோசின் என்ற வேரியண்ட் பெயரிலும் விற்பனைக்கு வர இருக்கின்றன.

கியா கார்னிவல் எம்பிவி காரின் இருக்கைகள் அமைப்பு குறித்த முழுமையான விபரம்

பிரிமீயம் வேரியண்ட் வசதிகள்

பிரிமீயம் வேரியண்ட்டில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரண்டு ட்வீட்டர்கள் மற்றும் 4 ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், ரியர் வியூ கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியுடன் ஸ்மார்ட் கீ, டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் சைடு மிரர்கள், பவர் விண்டோஸ், ஆட்டோ ஹெட்லைட் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

கியா கார்னிவல் எம்பிவி காரின் இருக்கைகள் அமைப்பு குறித்த முழுமையான விபரம்

பிரஸ்டீஜ் வேரியண்ட்

பிரிமீயம் வேரியண்ட்டில் இருந்த வசதிகளுடன் கூடுதலாக எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், ரோல் ஓவர் மிட்டிகேஷன் தொழில்நுட்பம், கூடுதலாக சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள், 4 பார்க்கிங் சென்சார்கல், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பொசிஷன் லைட்டுகள், எல்இடி பனி விலக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், ரூஃப் ரெயில்கள், ஸ்மார்ட் பவர் டெயில் கேட், புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் விசேஷ சன் பிலிம் கொண்ட ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் விண்ட்ஷீல்டு கண்ணாடிகள், 220V லேப்டாப் மற்றும் யுஎஸ்பி சார்ஜர், இரண்டு சன்ரூஃப் அமைப்பு, ஷன்ஷேடு திரைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கியா கார்னிவல் எம்பிவி காரின் இருக்கைகள் அமைப்பு குறித்த முழுமையான விபரம்

லிமோசின் வேரியண்ட்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக இரண்டாவது வரிசையில் கால்களுக்கான சப்போர்ட் தரும் அமைப்புடன் கூடிய ராஜ இருக்கைகள், நப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, 18 அங்குல அலாய் வீல்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், யுவோ கனெக்ட்டெட் கார் செயலியுடன் கூடிய தொடுதிரை சாதனம், ஹார்மன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம், 10.1 அங்குல டிவி திரைகள், ஏர் பியூரிஃபயர், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஸ்மார்ட் வாட்ச், வயர்லெஸ் போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

கியா கார்னிவல் எம்பிவி காரின் இருக்கைகள் அமைப்பு குறித்த முழுமையான விபரம்

பிஎஸ்-6 எஞ்சின்

கியா கார்னிவல் எம்பிவி காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு உள்ளது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகரான எஞ்சினுடன் வருகிறது.

கியா கார்னிவல் எம்பிவி காரின் இருக்கைகள் அமைப்பு குறித்த முழுமையான விபரம்

எதிர்பார்க்கும் விலை

கியா கார்னிவல் கார் பிரிமீயம் எம்பிவி கார் மாடலாக நிலைநிறுத்தப்படும். ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Tamil
English summary
Kia has revealed that the Carnival will be offered in 3 seating configuration options in India. These include 7, 8 and 9-seater configurations.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X