கியா சொனெட் எஸ்யூவியின் 10 முக்கிய சிறப்பம்சங்கள்... இதற்காகவே வாங்கலாம்!

செல்டோஸ், கார்னிவல் கார்களை தொடர்ந்து சொனெட் என்ற அட்டகாசமான கார் மாடலை இந்தியாவில் களமிறக்க உள்ளது கியா மோட்டார் நிறுவனம். காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய கியா சொனெட் நிச்சயம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், மிக ஸ்டைலான தோற்றம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வர இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் 10 முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் வழங்குகிறோம்.

கியா சொனெட் எஸ்யூவியின் 10 முக்கிய விஷயங்கள்... இதற்காகவே வாங்கலாம்!

செல்டோஸ் எஸ்யூவியை தொடர்ந்து இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது கியா கார் மாடல் சொனெட். செல்டோஸ் கார் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், அதனைவிட குறைவான விலையில் வர இருப்பது இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது. ஆனால், இந்த எதிர்பார்ப்பை பொய்யாக்காத வகையில், இதன் ரக கார்களில் சிறந்த அம்சங்களுடன் வர இருக்கிறது கியா சொனெட். அதில், 10 முக்கிய விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கியா சொனெட் எஸ்யூவியின் 10 முக்கிய விஷயங்கள்... இதற்காகவே வாங்கலாம்!

ஸ்டைலு ஸ்டைலுதான்...

கியா சொனெட் காரின் டிசைன் இளைய சமுதாயத்தினரை கவரும் வகையில் மிக ஸ்டைலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. கியா மோட்டார் கைவண்ணத்தில் இதன் ஹெட்லைட், பகல்நேர விளக்குகள், முன்பக்க க்ரில் அமைப்பு, தனித்துவமான டி பில்லர் அமைப்பு, கவர்ச்சிகரமான அலாய் வீல்களுடன் வாடிக்கையாளர்களை வசீகரிக்கும். இதன் ஜிடி லைன் மாடலில் சிவப்பு வண்ண அலங்கார வேலைப்பாடுகள், விசேஷமான 16 அங்குல அலாய் வீல்கள், கருப்பு வணண இன்டீரியரில் சிவப்பு வண்ண அலங்கார வேலைப்பாடுகள் இதன் மதிப்பை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. க்ரில், சீட் கவர் ஆகியவை தனித்துவமான அம்சங்களுடன் கவர்கிறது.

கியா சொனெட் எஸ்யூவியின் 10 முக்கிய விஷயங்கள்... இதற்காகவே வாங்கலாம்!

எல்இடி மயம்

புதிய கியா சொனெட் காரில் ஹெட்லைட், டெயில் லைட், பகல்நேர விளக்குகள் என அனைத்துமே எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புரொஜெக்டர் பனி விளக்குகள் இடம்பெற்றுள்ளது. எனவே, நவீன யுக கார்களுக்கு உரிய அந்தஸ்தை எளிதாக பெற்றுவிடுகிறது.

கியா சொனெட் எஸ்யூவியின் 10 முக்கிய விஷயங்கள்... இதற்காகவே வாங்கலாம்!

பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம்

இந்த காரின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக இதன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கூறலாம். ஆம், சொகுசு கார்களில் வழங்கப்படுவது போன்று, 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய மிகப்பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இடம்பெற்றுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை ஒரே திரை போல வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வரும் புதிய பென்ஸ் கார்களில் இதுபோன்ற அமைப்பு இடம்பெறுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

கியா சொனெட் எஸ்யூவியின் 10 முக்கிய விஷயங்கள்... இதற்காகவே வாங்கலாம்!

யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பம்

கியா சொனெட் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மிக மிக பயனுள்ள, அதே சமயம் வசீகரிக்கும் தொழில்நுட்பமாக இருக்கலாம். அதாவது, இதன் இன்ஃபோடெயெின்மென்ட் சிஸ்டத்தில் பிரத்யேக சிம் கார்டு பொருத்தப்பட்ட நேரடி இணைய வசதியை பெறுகிறது. இதற்காக வழங்கப்படும் யுவோ செயலியுடன் கூடிய ஸ்மார்ட்வாட்ச் என்ற சிறிய கடிகாரம் போன்ற சாதனத்தின் மூலமாக, காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இணையம் மூலமாக இணைத்துக் கொள்ளலாம். இதன்மூலமாக, 57 விதமான வசதிகளை பெற முடியும். ரிமோட் முறையில் காரின் எஞ்சினை ஸ்டார்ட் செய்யவும், அணைக்கவும் முடியும். கார் ஜன்னல்களைகூட மூடுவதற்கு இது வழி செய்யும். அதேபோன்று, காரின் இருப்பிடத்தை நிகழ்நேர முறையில் கண்காணிக்கும் வசதி, ஏசியை இயக்குவது, குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே கார் செல்ல முடியாத வகையில் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல வசதிகளை வழங்கும்.

கியா சொனெட் எஸ்யூவியின் 10 முக்கிய விஷயங்கள்... இதற்காகவே வாங்கலாம்!

போஸ் ஆடியோ சிஸ்டம்

புதிய கியா சொனெட் காரில் 7 ஸ்பீடுக்கர்களுடன் கூடிய போஸ் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட உள்ளது. இது நிச்சயம் இசை பிரியர்களின் தேர்வில் கூடுதல் கவனத்தை பெறும். மேலும், இந்த ஆடியோ சிஸ்டம் மிகச் சிறந்த ஒலி தரத்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மூட் லைட்டிங் சிஸ்டமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கியா சொனெட் எஸ்யூவியின் 10 முக்கிய விஷயங்கள்... இதற்காகவே வாங்கலாம்!

ஸ்மார்ட் ஏர் பியூரிஃபயர்

வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏர் பியூரிஃபயர் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட உள்ளது. தற்போது கொரோனா பிரச்னை ஆட்டுவிக்கும் நிலையில், இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும், மதிப்பையும் வழங்கும்.

கியா சொனெட் எஸ்யூவியின் 10 முக்கிய விஷயங்கள்... இதற்காகவே வாங்கலாம்!

வென்டிலேட்டட் சீட் கவர்

சிறிய துளைகளுடன் கூடிய பிரத்யேக வென்டிலேட்டட் சீட் கவர்கள் இதன் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக கூறலாம். நீண்ட தூர பிராயணங்களின்போது குளிர்ச்சியான அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கும்.

கியா சொனெட் எஸ்யூவியின் 10 முக்கிய விஷயங்கள்... இதற்காகவே வாங்கலாம்!

விருப்பம்போல் எஞ்சின் தேர்வுகள்வாடிக்கையாளர்களின் பட்ஜெட், எதிர்பார்ப்புகளுக்கு தக்கவாறு மூன்று விதமான எஞ்சின் மற்றும் நான்கு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் கியா சொனெட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த காரில் வழங்கப்பட உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். அதேபோன்று, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல், ஐஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அல்லது டிசிடி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். டீசல் மாடலில் இடம்பெறும் 1.5 லிட்டர் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

கியா சொனெட் எஸ்யூவியின் 10 முக்கிய விஷயங்கள்... இதற்காகவே வாங்கலாம்!

டிரைவிங் மோடுகள்

புதிய கியா சொனெட் எஸ்யூவியில் டிரைவிங் மோடுகளும், டிராக்ஷன் மோடுகளும் இடம்பெற இருக்கின்றன. Eco, Normal மற்றும் Sport டிரைவிங் மோடுகள் மூலமாக எஞ்சின் செயல்திறனை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை பெற முடியும். அதேபோன்று, சாலை நிலைகளுக்கு தக்கவாறு, Mud, Snow/Wet மற்றஉம் Sand என மூன்று விதமான டிராக்,ன் மோடுகள் இடம்பெற்றிருக்கும். இதில், டிராக்ஷன் கன்ட்ரோல் தொழில்நுட்பம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் மட்டுமே வழங்கப்படும்.

கியா சொனெட் எஸ்யூவியின் 10 முக்கிய விஷயங்கள்... இதற்காகவே வாங்கலாம்!

எதிர்பார்க்கும் விலை

புதிய கியா சொனெட் கார் ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்கள் டெக் லைன் என்ற பெயரிலும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் அதிக சிறப்பம்சங்களுடன் ஜிடி லைன் என்ற பெயரிலும் வர இருக்கின்றன. அடுத்த மாத பிற்பாதியில் புதிய கியா சொனெட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சொனெட் எஸ்யூவியின் 10 முக்கிய விஷயங்கள்... இதற்காகவே வாங்கலாம்!

கூடுதல் மதிப்பு

சந்தைப் போட்டி மிகுந்த காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய கியா சொனெட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இருப்பினும், அசத்தலான டிசைன், அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரின் மதிப்பை உயர்த்துகின்றன. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் தேர்வாக அமையும் என்றால் மிகையல்ல.

Most Read Articles

English summary
Here are some top things of the all-new Kia Sonet SUV.
Story first published: Friday, August 7, 2020, 19:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X