புத்தம் புதிய கியா சொனட் எஸ்யூவி அறிமுகமானது... படங்களுடன் தகவல்கள்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய கியா சொனெட் எஸ்யூவி கார் உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள இந்த புதிய மாடலின் படங்கள், கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கியா சொனட் எஸ்யூவி பொது பார்வைக்கு அறிமுகம்

கடந்த ஆண்டு செல்டோஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கிய கியா மோட்டார் நிறுவனம், இரண்டாவதாக கார்னிவல் எம்பிவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது மாடலாக சொனெட் என்ற காம்பேக்ட் எஸ்யூவியை விரைவில் களமிறக்க உள்ளது.

கியா சொனட் எஸ்யூவி பொது பார்வைக்கு அறிமுகம்

செல்டோஸ் எஸ்யூவியை போலவே, இந்திய மார்க்கெட்டிற்கு தக்க அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது கியா கார் மாடலாக சொனெட் வர இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில், கியா சொனெட் எஸ்யூவி கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது.

கியா சொனட் எஸ்யூவி பொது பார்வைக்கு அறிமுகம்

இதைத்தொடர்ந்து, கியா சொனெட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலைக்கு உகந்த மாடல் ஆன்லைன் மூலமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய கியா சொனெட் எஸ்யூவி, செல்டோஸ் மினியேச்சர் மாடலாக கூறப்பட்டாலும், பல தனித்துவ அம்சங்களுன் வேறுபடுகிறது.

கியா சொனட் எஸ்யூவி பொது பார்வைக்கு அறிமுகம்

ஹூண்டாய் வெனியூ காரின் அடிப்படையிலான இந்த மாடல் எஞ்சின் உள்ளிட்ட பல முக்கிய பாகங்களை பங்கிட்டுக் கொள்கிறது. இந்த எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. இதனுடன் மேனுவல் அல்லது ஆட்டடோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

கியா சொனட் எஸ்யூவி பொது பார்வைக்கு அறிமுகம்

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி புரொஜெக்டர் பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகளுடன் வர இருக்கிறது. கவர்ச்சிகரமான 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்கிட் பிளேட், வலிமையான வீல் ஆர்ச்சுகளுடன் மிகவும் வசீகரமாக இருக்கிறது.

கியா சொனட் எஸ்யூவி பொது பார்வைக்கு அறிமுகம்

புதிய கியா சொனெட் எஸ்யூவியில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். இதனுடன், யுவோ கனெக்டெட் கார் செயலியும் வழங்கப்படும். இதன்மூலமாக, பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளை பெற முடியும். மேலும், 4.25 அங்குல திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

கியா சொனட் எஸ்யூவி பொது பார்வைக்கு அறிமுகம்

ஏர் பியூரிஃபயர், வென்டிலேட்டட் இருக்கைகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இடம்பெற்றிருக்கும். உயர் வேரியண்ட்டுகளில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

கியா சொனட் எஸ்யூவி பொது பார்வைக்கு அறிமுகம்

செல்டோஸ் எஸ்யூவியை போலவே, சொனெட் எஸ்யூவியிலும் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் ஆகிய இரண்டு மாடல்கள் வழங்கப்பட உள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் டெக் லைன் என்ற மாடலின் கீழ் பல வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அதேபோன்று, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஜிடி லைன் என்ற மாடலின் கீழ் சில வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

கியா சொனட் எஸ்யூவி பொது பார்வைக்கு அறிமுகம்

கியா சொனெட் எஸ்யூவியானது ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் ஹூண்டாய் வெனியூ கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Kia Motors India has unveiled their first sub-4-metre compact-SUV in the Indian market, in the form of the Sonet. The new compact Kia Sonet SUV was first showcased in its concept form at the 2020 Auto Expo and is now scheduled to go on sale in the coming weeks. Ahead of its launch, here are all the details of the new Sonet compact-SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X