ஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

சொகுசு ரக ஆஃப்ரோடு எஸ்யூவி தயாரிப்பில் இங்கிலாந்தை சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனம் உலக அளவில் பிரபலமாக விளங்குகிறது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப பல்வேறு சொகுசு ரக ஆஃப்ரோடு எஸ்யூவிகளை விற்பனை செய்து வருகிறது. அதில், ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற மிகச் சிறந்த மாடலாக டிஃபென்டர் எஸ்யூவி உள்ளது.

ஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தநிலையில், முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்ட லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. தற்போது விலை அறிவிக்கப்பட்டு, முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது.

ஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி 3 டோர் (90) மற்றும் 5 டோர் (110) கொண்ட இரண்டு பாடி ஸ்டைல்களில் கிடைக்கும். மேலும், வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களை பொறுத்து Base, S, SE, HSE மற்றும் First Edition ஆகிய 5 வேரியண்ட்டுகளில் தேர்வு செய்யும் வாய்ப்புள்ளது.

ஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லேண்ட்ரோவல் டிஃபென்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 292 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

ஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஸ்யூவியின் 3 டோர் மாடலானது 4,583 மிமீ நீளமும், 2,105 மிமீ அகலமும் கொண்டது. காயில் சஸ்பென்ஷன் மாடலானது 1,974 மிமீ உயரமும், ஏர் சஸ்பென்ஷன் மாடலானது 1,969 மிமீ உயரத்துடன் வடிவமைக்கப்பட்டு இறுக்கிறது. இந்த மாடல் 5 இருக்கைகள் மற்றும் 6 இருக்கைகள் கொண்டதாக கிடைக்கிறது. 6 சீட்டர் மாடலில் முன் இருக்கைகளுக்கு நடுவில் ஜம்ப் சீட் ஒன்று கொடுக்கப்படுகிறது.

ஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மறுபுறத்தில் 110 என்ர 5 டோர் மாடலானது 5,018 மிமீ நீளமும், 2,105 மிமீ அகலமும், 1,967 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கும்.

ஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்திய மாடலில் 360 டிகிரி சர்ரவுண்ட் கேமரா, 3டி சர்ரவுண்ட் கேமரா, ஸ்மார்ட்ஃபோன் இணைப்புகான வசதி, குளிர்காலத்தில் வெதுவெதுப்பான உணர்வை தரும் ஸ்டீயரிங் வீல், சிறிய குளிர்சாதன அறையுடன் சென்ட்ரல் கன்ச்ரோல், 10 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகளை அளிக்கிறது.

ஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் 10 ஸ்பீக்கர்கள் மற்றும் சப் ஊஃபர் கொண்ட 380 வாட் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது இந்த காரின் பிரிமீயம் அம்சமாக இருக்கிறது.

ஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியில் 20 அங்குல அலாய் வீல்கள், ஆஃப்ரோடு டயர்கள், எலெக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷன், நீர் நிலைகளின் ஆழத்தை கண்டறியும் வசதிகளுடன் வந்துள்ளது.

ஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், பனோரமிக் சன்ரூஃப், மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 6 ஏர்பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட் ஆகிய தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர்த்து, வாடிக்கையாளர்கள் ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகளை விருப்பம்போல் தேர்வு செய்து வாங்கும் வாய்ப்பையும் லேண்ட்ரோவர் வழங்குகிறது.

ஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.69.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும். ஜீப் ரேங்லர் எஸ்யூவிக்கு இது நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Land Rover has launched the all-new Defender in India with prices starting at ₹ 69.99 lakh (Ex-Showroom).
Story first published: Wednesday, February 26, 2020, 14:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X