புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி கார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் பிரிமீயம் டிரான்ஸ்வர்ஸ் ஆர்க்கிடெக்ச்சர் என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை விற்பனையில் இருந்த முந்தைய தலைமுறை மாடலை போலவே டிசைன் உள்ளது. ஆனால், ஆங்காங்கே சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் நீளம் 7 மிமீ குறைந்துள்ளது. உயரம் 3 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்புடன் முகப்பு க்ரில், ஹெட்லைட் க்ளஸ்ட்டர் உள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பம்பர் அமைப்புகளுடன் மாற்றத்தை சந்தித்துள்ளது. இந்த எஸ்யூவி 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட மாடலில் கிடைக்கும்.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியில் 10 அங்குல டச் புரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். புதிய ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இநத் காரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜர், 4ஜி வைஃபை ஹாட்ஸ்பாட், யுஎஸ்பி போர்ட்டுகள், 12 வோல்ட் சார்ஜிங் பாயிண்ட்டுகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை உள்ளன. மேலும், முன் இருக்கைகளில் மசாஜ் செய்யும் வசதியும் உள்ளது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

காரின் அடிப்புறத்தை பார்த்து பார்க்கிங் செய்வதற்கான விசேஷ கேமரா அமைப்பு, கண்காணிப்பு கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், லேன் கீப்பிங் அசிஸ்ட், ஓட்டுனர் அயர்ந்து போவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி மற்றும் விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில் அருகிலுள்ள உதவி மையங்கள், உறவினர்களுக்கு தகவல் அனுப்பும் தொழில்நுட்பங்கள் உள்ளன.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியில் தானியங்கி முறையில் சாலை நிலைகளை கண்டறிந்து காரை பாதுகாப்பாக செலுத்தும் டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம் உள்ளது. மேலும், 600 மிமீ ஆழமுடைய நீர் நிலைகளை கடந்து செல்லும்.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியில் மிக முக்கிய அம்சமாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 250 பிஎச்பி பவரையும், 356 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 180 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி ரூ.57.06 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்3, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, ஆடி க்யூ5 மற்றும் வால்வோ எக்ஸ்சி60 ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
British SUV maker, Land Rover has launched the 2020 Discovery Sport in India prices starting at Rs.57.06 lakh (Ex-Showroom, India).
Story first published: Thursday, February 13, 2020, 12:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X