Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 லேண்ட்ரோவர் டிஸ்கவரி வெளியீடு: இந்திய வருகை விபரம்!
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி சொகுசு எஸ்யூவி உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள், இந்திய வருகை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியானது சொகுசு அம்சங்களிலும், செயல்திறனிலும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய க்ரில் அமைப்புடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய வடிவமைப்புடன் பம்பர் அமைப்பு, பெரிய ஏர் வென்ட்டுகள், விசேஷ கருப்பு பூச்சுடன் ஸ்கிட் பிளேட் ஆகியவை வசீகரத்தை கூட்டுகின்றன.

புதிய டிஸ்கவரி எஸ்யூவியில் வலிமையான சி பில்லர் அமைப்பு, ஃப்ளோட்டிங் கூரை அமைப்பை காட்டும் விதத்தில் கருப்பு வண்ண டி பில்லர், கருப்பு வண்ண அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 20 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு வருவதுடன், 21 அங்குல அலாய் வீல்கள் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றன. டெயில் லைட்டுகள் பக்கவாட்டிலும் நீண்டு அழகு சேர்க்கின்றன.

பின்புறத்திலும் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய எல்இடி டெயில் லைட்டுகள், வலிமையான பம்பர் அமைப்பு, ஸ்கிட் பிளேட்டுகளுடன் காட்சி தருகிறது. ரூஃப் ஸ்பாய்லர் அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் டிஸ்கவரி பேட்ஜ் பெரிதாக இருப்பதும் அதிக வசீகரத்தை கொடுக்கிறது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியில் 11.4 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது பழைய மாடலைவிட பெரிதாகவும் அதிக பிராகசமான திரையையும் பெற்றிருக்கிறது. பிவிப்ரோ என்ற செயலியில் இயங்குகிறது. இந்த காரில் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 3டி சர்ரவுண்ட் கேமரா, 15 வாட் வயர்லெஸ் சார்ஜர், பிஎம் 2.5 கேபின் ஏர் ஃபில்டர், ஹீட்டடு இருக்கைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த காரின் இரண்டாவது இருக்கையை 160 மிமீ வரை நகர்த்திக் கொள்ளும் வசதியும் உள்ளது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியில் 258 லிட்டர் பூட்ரூம் இடவசதி உள்ளது. இதனை மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கினால் 1,231 லிட்டர்கள் வரையிலும், இரண்டாவது வரிசையை இருக்கையையும் சேர்த்து மடக்கினால் 2,485 லிட்டர்கள் கொள்திறன் கொண்டதாகவும் மாற்றிக் கொள்ள முடியும்.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இதன் P300 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 300 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். P360 மாடலில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 360 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டீசல் மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் எஞ்சின் இரண்டு விதமான திறன் கொண்டதாக கிடைக்கும். முதலாவது தேர்வு 249 பிஎச்பி பவரையும், 570 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டாவது தேர்வு 300 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மாடல்களில் 48V ஹைப்ரிட் தொழில்நுட்பமும் உள்ளது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவி அடுத்த ஆண்டு துவக்கத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் இந்த புதிய எஸ்யூவி மாடலை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.