பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சின்களை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

அண்மையில் நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் புத்தம் புதிய பெட்ரோல் எஞ்சின்களை அறிமுகப்படுத்தியது. புதிய தலைமுறை மஹிந்திரா எஸ்யூவி கார்களில் இடம்பெற இருக்கும் இந்த புதிய எஞ்சின் தேர்வுகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சின்களை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

இந்தியாவின் எஸ்யூவி தயாரிப்பு ஸ்பெஷலிஸ்ட் என்று பெருமையுடன் குறிப்பிடப்படும் மஹிந்திரா நிறுவனம் டீசல் எஞ்சின் மாடல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. இந்த நிலையில், புதிய மாசு உமிழ்வு விதிகளால், தற்போது பெட்ரோல் எஞ்சின் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சின்களை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

இந்த நிலையில், அந்நிறுவனத்தின் புதிய தலைமுறை கார்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற பெட்ரோல் எஞ்சின்களை ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வந்தது. பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த பெட்ரோல் எஞ்சின்களை மஹிந்திரா உருவாக்கி இருக்கிறது.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சின்களை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

இந்த புதிய பெட்ரோல் எஞ்சின்களை MStallion என்ற பொதுப் பெயரில் மஹிந்திரா நிறுவனம் குறிப்பிடுகிறது. எம்ஸ்டாலியன் வரிசையில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சின்களை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

இதில், 1.2 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்சின் 130 எச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 163 எச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மிகவும் சக்திவாய்ந்த 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்சின் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சின்களை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

இந்த 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சின்களை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

இந்த புதிய எம்ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிக செயல்திறனுடன் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை இந்த புதிய பெட்ரோல் எஞ்சின்கள் வழங்கும் என மஹிந்திரா தெரிவிக்கிறது.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சின்களை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

இந்த புதிய மூன்று எம்ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்சின்களும் புதிய தலைமுறை மஹிந்திரா கார்களில் பொருத்தப்பட்டு விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன.முதல் மாடலாக புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியில் எம்ஸ்டாலியன் வரிசை டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சின்களை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடலில் 1.2 லிட்டர் எம்ஸ்டாலியன் எஞ்சின்தான் பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது பயன்படுத்தப்படும் பெட்ரோல் எஞ்சினை இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சின்களை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் எம்-ஹாக் டீசல் எஞ்சின் போன்றே, இந்த புதிய எம்ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்சின்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Mahindra has revealed new range or mStallion petrol engines at auto expo.
Story first published: Friday, February 14, 2020, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X